அனுஷ்காவின் மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி பட ரிலீஸ் திடீரென ஒத்திவைப்பு... காரணம் என்ன? அதிகாரப்பூர்வ அறிக்கை இதோ!

அனுஷ்காவின் மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி பட ரிலீஸ் தேதி ஒத்திவைப்பு,Anushka in miss shetty mr polishetty movie release postponed | Galatta

நடிகை அனுஷ்கா நடிப்பில் நீண்ட இடைவெளிக்கு பிறகு கம்பேக் படமாக வெளிவர இருந்த மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி படத்தின் ரிலீஸ் திடீரென ஒத்திவைக்கப்பட்டதாக தயாரிப்பு தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. தெலுங்கு மற்றும் தமிழ் என இரு மொழிகளிலும் நட்சத்திர நாயகர்களுடன் இணைந்து நடித்து தென்னிந்திய சினிமாவின் நட்சத்திர கதாநாயகியாக உயர்ந்த அனுஷ்கா, வெறும் ஹீரோயினாக மட்டுமல்லாமல் கதாநாயகிகளை முன்னிறுத்தும் சூப்பர் ஹிட் படங்களிலும் தனக்கென தனி பாணியில் தொடர்ச்சியாக நடித்து மக்களின் மனம் கவர்ந்த நடிகையாக வலம் வந்தார். 

அந்த வகையில் குறிப்பாக அனுஷ்காவின் திரை பயணத்தில் மைல்கல்லாக பக்கா ஆக்ஷன் ஃபேண்டஸி திரைப்படமாக வெளிவந்த அருந்ததி திரைப்படம் இந்திய அளவில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது. அதே போல் பிரம்மாண்ட இயக்குனர் SS.ராஜமௌலி இயக்கத்தில் உருவாகி இந்திய சினிமாவின் மாபெரும் ப்ளாக் பஸ்டர் திரைப்படங்களாக கொண்டாடப்படும் பாகுபலி 1&2 திரைப்படத்தில் தேவசேனா கதாபாத்திரத்தில் மிகச் சிறப்பாக நடித்த அனுஷ்கா கடைசியாக நடித்த பாகமதி திரைப்படம் கடந்த 2018 ஆம் ஆண்டு திரையரங்குகளில் ரிலீசானது. இதனைத் தொடர்ந்து மாதவனுடன் இணைந்து அனுஷ்கா நடித்த நிசப்தம் திரைப்படம் நேரடியாக அமேசான் பிரைம் வீடியோவில் கடந்த 2020 ஆம் ஆண்டு வெளியானது.  

அதன் பிறகு நீண்ட இடைவெளிக்குப் பிறகு ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கும் அனுஷ்காவின் புதிய திரைப்படமான தான் மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலி ஷெட்டி. கிட்டத்தட்ட 4 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு தற்போது திரைக்கு வர தயாராகி வரும் இந்த மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலி ஷெட்டி படம் தனது திரைப்பயணத்தில் 48வது படமாகும். இயக்குனர் மகேஷ் பாபு.P இயக்கத்தில் அனுஷ்கா கதாநாயகியாக நடிக்கும் மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி திரைப்படத்தில் ஸ்ரீ சாய் ஸ்ரீனிவாசா ஆத்ரேயா மற்றும் ஜாதி ரத்தினலு ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்த நடிகர் நவீன் பொலிஷெட்டி கதாநாயகனாக நடித்துள்ளார். அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தின் இசையமைப்பாளர் ரதன் இப்படத்திற்கு இசையமைக்கிறார். ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ள மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி திரைப்படத்திற்கு கோட்டாகிரி வெங்கடேஸ்வர ராவ் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். 

UV CREATIONS மற்றும் STUDIO GREEN ஆகிய நிறுவனங்கள் இணைந்து வழங்க பக்கா கமெடி என்டர்டெய்னராக தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் வெளிவரவுள்ள மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 4 ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் ரசிகர்கள் ஆவலோடு காத்திருந்த மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலி ஷெட்டி திரைப்படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்படுவதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலி ஷெட்டி படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தாமதமாவதால் படத்தின் ரிலீஸ் ஒத்திவைக்கப்படுவதாகவும் விரைவில் புதிய ரிலீஸ் தேதியும் புதிய ட்ரெய்லரும் வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ…
 

We apologize from the bottom of our hearts for this unforeseen delays.

We will soon be serving #MissShettyMrPolishetty, a comedic feast, with a side of laughter...

Stay tuned for the New release date and trailer...@UV_Creations pic.twitter.com/l5wDDwoFTQ

— Studio Green (@StudioGreen2) July 29, 2023

துல்கர் சல்மான் - ரித்திகா சிங்கின் துள்ளலான கலாட்டாகாரன் பாடல்… பிறந்த நாளுக்கு கிங் ஆஃப் கொத்தா படக்குழுவின் சூப்பர் ட்ரீட் இதோ!
சினிமா

துல்கர் சல்மான் - ரித்திகா சிங்கின் துள்ளலான கலாட்டாகாரன் பாடல்… பிறந்த நாளுக்கு கிங் ஆஃப் கொத்தா படக்குழுவின் சூப்பர் ட்ரீட் இதோ!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அதிரடியான ஜெயிலர் பட ஸ்பெஷல் பேக்கேஜ்… அனைத்து பாடல்களும் கொண்ட கலக்கலான JUKEBOX இதோ!
சினிமா

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அதிரடியான ஜெயிலர் பட ஸ்பெஷல் பேக்கேஜ்… அனைத்து பாடல்களும் கொண்ட கலக்கலான JUKEBOX இதோ!

“துல்கர் சல்மானின் பிறந்தநாள் பரிசு!”- 'வாத்தி' இயக்குனரோடு இணையும் புதிய பட செம்ம டைட்டில் & அசத்தலான GLIMPSE இதோ!
சினிமா

“துல்கர் சல்மானின் பிறந்தநாள் பரிசு!”- 'வாத்தி' இயக்குனரோடு இணையும் புதிய பட செம்ம டைட்டில் & அசத்தலான GLIMPSE இதோ!