“துல்கர் சல்மானின் பிறந்தநாள் பரிசு!”- 'வாத்தி' இயக்குனரோடு இணையும் புதிய பட செம்ம டைட்டில் & அசத்தலான GLIMPSE இதோ!

துல்கர் சல்மான் - வெங்கி அட்லூரி பட டைட்டில் வெளியீடு,dulquer salmaan and venky atluri new movie titled lucky baskhar | Galatta

நடிகர் தனுஷ் நடிப்பில் வெளிவந்து பிளாக்பஸ்டர் ஹிட்டான வாத்தி திரைப்படத்தின் இயக்குனர் வெங்கி அட்லுரி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடிக்க இருக்கும் புதிய திரைப்படத்தின் டைட்டில் தற்போது வெளியானது.  இன்று ஜூலை 28ம் தேதி தனது பிறந்தநாளை கொண்டாடும் நடிகர் துல்கர் சல்மான் அவர்களுக்கு கலாட்டா குழுமம் தனது மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது. மலையாள சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாகி தற்போது இந்திய திரையுலகில் முக்கிய நாயகராக திகழும் துல்கர் சல்மான் நடிப்பில், கடைசியாக கடந்த 2022 ஆம் ஆண்டு தமிழில் ஹே சினாமிக்கா, மலையாளத்தில் சல்யூட், தெலுங்கில் சீதாராமம், ஹிந்தியில் சுப் - ரிவெஞ் ஆஃப் தி ஆர்டிஸ்ட் என நான்கு மொழிகளில் நான்கு படங்கள் வெளிவந்து ஒவ்வொன்றும் நல்ல வரவேற்பை பெற்றன.

அடுத்ததாக துல்கர் சல்மான் நடிப்பில் பக்கா கேங்ஸ்டர் திரைப்படமாக தயாராகி இருக்கும் கிங் ஆப் கோத்தா திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், மற்றும் ஹிந்தி என ஐந்து மொழிகளில் PAN INDIA படமாக வெளிவரவுள்ளது. காரைக்குடியில் படமாக்கப்பட்ட கிங் ஆப் கோட்டா திரைப்படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்து தற்போது இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இந்த 2023 ஆம் ஆண்டு ஓணம் பண்டிகை வெளியீடாக ஆகஸ்ட் 24ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது. முன்னதாக முதல் முறை வெப் சீரிஸிலும் களமிறங்கி இருக்கும் துல்கர் சல்மான் நடிப்பில் கன்ஸ் அண்ட் குலாப்ஸ் வெப் சீரிஸ் தயாராகி இருக்கிறது. ஃபேமிலி மேன் மற்றும் ஃபர்ஸி உள்ளிட்ட வெப் சீரிஸ் களின் இயக்குனர்களான ராஜ் மற்றும் டி கே இயக்கத்தில் ஹிந்தியில் உருவாகி இருக்கும் கன்ஸ் அண்ட் குலாப்ஸ் வெப் சீரிஸ் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் டப் செய்யப்பட்டு விரைவில் நெட்ஃபிலிக்ஸ் தளத்தில் ரிலீஸாக இருக்கிறது.

இந்த வரிசையில் அடுத்ததாக கடந்த பிப்ரவரி மாதம் தனுஷ் நடிப்பில் வெளிவந்து பிளாக்பஸ்டர் ஹிட்டாக 100 கோடிக்கு மேல் வசூலித்த வாத்தி திரைப்படத்தின் இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாகும் புதிய திரைப்படத்தில் துல்கர் சல்மான் கதாநாயகனாக நடிக்கிறார். வாத்தி படத்தின் தயாரிப்பு நிறுவனங்களான சித்தாரா என்டர்டைன்மென்ட்ஸ் , ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் மற்றும் ஸ்ரீகரா ஸ்டூடியோஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு வரும் அக்டோபர் மாதத்தில் தொடங்கும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த புதிய திரைப்படத்தை அடுத்த 2024 ஆம் ஆண்டு கோடை விடுமுறையில் வெளியிடப் படக் குழுவினர் திட்டமிட்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் துல்கர் சல்மானின் பிறந்த நாளான இன்று ஜூலை 28ஆம் தேதி அவர்கள் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில், இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடிக்க இருக்கும் புதிய திரைப்படத்தின் டைட்டில் வெளியானது. லக்கி பாஸ்கர் என இந்த திரைப்படத்திற்கு பெயரிடப்பட்டுள்ளதாக தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அட்டகாசமான போஸ்டரும் வெளியானது. அந்த போஸ்டர் இதோ…
 

Presenting you #LuckyBaskhar - Embark on a Captivating Journey, The Unraveling Triumphs of an Ordinary Man! 📈🎬

Wishing the man of elegance and charm, @dulQuer, a very Happy Birthday! 🎉#HBDDulquerSalmaan #VenkyAtluri @gvprakash @NavinNooli @Banglan16034849 #SaiSoujanyapic.twitter.com/PgANYt4c6g

— Sithara Entertainments (@SitharaEnts) July 28, 2023

கில்லர் கில்லர்
சினிமா

கில்லர் கில்லர் "கேப்டன் மில்லர்" பட வெறித்தனமான டீசர்... தனுஷின் பிறந்த நாளுக்கு மிரள வைக்கும் ஆக்ஷன் ட்ரீட் இதோ!

தனுஷின் அடுத்த பிரம்மாண்டமான Pan-India படம்... பிறந்தநாள் வாழ்த்துக்களோடு அதிரடி அப்டேட் கொடுத்த D51 படக்குழு!
சினிமா

தனுஷின் அடுத்த பிரம்மாண்டமான Pan-India படம்... பிறந்தநாள் வாழ்த்துக்களோடு அதிரடி அப்டேட் கொடுத்த D51 படக்குழு!

சந்தானத்தின் DD ரிட்டன்ஸ், MSதோனி-ஹரிஷ் கல்யாணின் LGM, பரத்தின் LOVE & பீட்சா-3 என ஒரே நாளில் வெளியாகும் 9 படங்கள்! முழு பட்டியல் உள்ளே
சினிமா

சந்தானத்தின் DD ரிட்டன்ஸ், MSதோனி-ஹரிஷ் கல்யாணின் LGM, பரத்தின் LOVE & பீட்சா-3 என ஒரே நாளில் வெளியாகும் 9 படங்கள்! முழு பட்டியல் உள்ளே