“எனக்கு இஷ்டமில்லைனு சொல்லும்போது ஒன்றும் செய்ய முடியாது” புரோமோஷன் நிகழ்சிகளில் நயன்தாரா பங்கேற்காதது குறித்து விஷால் கருத்து..!

புரோமோஷன் நிகழ்சிகளில் நயன்தாரா பங்கேற்காதது குறித்து விஷால் கருத்து -Vishal about Nayanthara absence from movie promotion event | Galatta

தென்னிந்தியாவின் முன்னணி நடிகைகளில் ஒருவர் நயன்தாரா. தனித்துவமான நடிப்பின் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்து பல ஆண்டுகளாக திரைத்துறையில் முன்னணியில் வலம் வரும் நயன்தாரா ரசிகர்களினால் ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்று அழைக்கப்பட்டு வருகிறார். அதன்படி நயன்தாரா முன்னணி நடிகர்களின் படங்களில் மட்டுமல்லாமல் கதாநயாகி சார்ந்த திரைப்படங்களிலும் நடித்தும் கவனம் பெற்று வருகிறார். தற்போது நயன்தாரா நடிப்பில் பாலிவுட்டில் அட்லி இயக்கத்தில் ஷாருக் கான் நடித்து வெளியாகவிருக்கும் ஜவான் படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். அதை தொடர்ந்து ஜெயம் ரவி நடிப்பில் உருவாகும் ‘இறைவன்’ படத்திலும், சித்தார்த், மாதவன் நடிக்கும் ‘டெஸ்ட்’ என்ற படத்திலும் நயன்தாரா நடித்து வருகிறார்.

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, இந்தி, மலையாளம் என பல மொழிகளில் தற்போது பிஸியாக நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகரும் நடிகர் சங்க பொது செயலாளருமான விஷால் நயன்தாரா குறித்து பேசியது இணையத்தில் வைரலாகி வருகிறது.  தனியார் கல்லூரி மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியில் நடிகர் விஷால் கலந்துகொண்டார் பின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட விஷால் பேசியதாவது,

“அரசியல் என்பது சமூக சேவை. மக்களுக்கு சேவை செய்வது தான் அரசியல். அந்த சேவையை பிஸினஸாக பார்க்க கூடாது. அந்த வகையில் நான் ஏற்கெனவே அரசியலுக்கு வந்துவிட்டேன். மற்றும் உதவி செய்யும் சேவையில் இருப்பவர்கள் எல்லோரும் அரசியல் வாதிகள் தான். ஆக நான் இனிமேலும் அரசியலுக்கு வரவேண்டுமென்பதில்லை. அரசியல்வாதிகள் நடிகர்களாக மாறி நடிக்கும்போது, ஒரு நடிகர் அரசியல்வாதியாவதில் எந்த தவறுமில்லை. இது ஜனநாயக நாடு. யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம்.” என்றார் நடிகர் விஷால்.

மேலும் தொடர்ந்து நடிகர், நடிகைகள் பட ப்ரமோஷன் விழாவில் கலந்துகொள்வது குறித்து பேசுகையில்,  நயன்தாரா எந்த பட புரொமோஷன் நிகழ்ச்சிகளிலும் பங்கேற்க மாட்டார். அது அவரின் தனிப்பட்ட உரிமை. நீங்கள் வந்தே ஆகணும் என்று சொல்லி அவர்களை கட்டாயப்படுத்த முடியாது. நான் பள்ளித் தலைமை ஆசிரியர் கிடையாது, நான் நடிகர் சங்க பொதுச்செயலாளர்.  எனக்கு இஷ்டமில்லை என சொல்லும்போது நாம் ஒன்றும் செய்ய முடியாது.

ஆனால், வந்தால் நல்லாயிருக்கும் தயாரிப்பாளர் நடிகருக்கு தேவையான ஊதியத்தை கொடுத்து நிகழ்சிக்கு அழைக்கிறார்.  அவர்கள் வந்தால் தான் அவரது படம் ரசிகர்களிடையே விரைவாக சென்று சேரும் இது தான் காரணம். அதனால் படத்தின் புரொமோஷன்களில் நடிகர்கள் பங்கேற்பது தப்பே இல்லை. எங்களால் முடிந்த அளவு சொல்ல வர விஷயம் போங்க என்பது தான்..” என்றார் நடிகர் விஷால். தற்போது நயன்தாரா குறித்து விஷால் பகிர்ந்த கருத்து இணையத்தில் ரசிகர்களால் வைரலாகி வருகிறது. 

சினிமா

"ஏன்டா இந்த படத்துல நடிச்சேனு ஆயிடுச்சு" நடிகர் சந்தானம் பகிர்ந்து கொண்ட சுவாரஸ்யமான தகவல் – Exclusive Interview இதோ..

போர் களத்தில் மாஸ் காட்டிய கேப்டன் மில்லர் தனுஷ்..  டீசரில் சிலிர்க்க வைத்த முக்கிய தருணங்கள்– சிறப்பு கட்டுரை உள்ளே..
சினிமா ஸ்பெஷல்ஸ்

போர் களத்தில் மாஸ் காட்டிய கேப்டன் மில்லர் தனுஷ்.. டீசரில் சிலிர்க்க வைத்த முக்கிய தருணங்கள்– சிறப்பு கட்டுரை உள்ளே..

ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த காட்சிகளை நீக்கிய படக்குழு.. - மாற்றங்களுடன் வெளியான துருவ நட்சத்திரம் ‘ஒரு மனம்’ பாடல்..!
சினிமா

ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த காட்சிகளை நீக்கிய படக்குழு.. - மாற்றங்களுடன் வெளியான துருவ நட்சத்திரம் ‘ஒரு மனம்’ பாடல்..!