"D50 - ஆயிரத்தில் ஒருவன் 2 - 7G ரெயின்போ காலனி 2.. இதில் எது?"- ரசிகர்கள் ஆர்வத்தை தூண்டிய செல்வராகவனின் Shooting Spot புகைப்படம் இதோ!

ரசிகர்கள் ஆர்வத்தை தூண்டிய செல்வராகவனின் Shooting Spot புகைப்படம்,Selvaraghavan shared a new shooting spot photo d50 7g rainbow colony 2 | Galatta

இயக்குனர் செல்வராகவன் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருக்கும் ஒரு ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் இது தனுஷ் இயக்கும் D50 படத்தின் படப்பிடிப்பு தளமா? அல்லது 7ஜி ரெயின்போ காலனி-2 திரைப்படத்தின் படப்பிடிப்பு தளமா? இல்லையென்றால் ஆயிரத்தில் ஒருவன்-2 திரைப்படத்தை தொடங்கி விட்டாரா? என மிகுந்த ஆர்வத்தோடு பகிர்ந்து வருகின்றனர். தமிழ் சினிமாவில் குறிப்பிடப்படும் சிறந்த இயக்குனர்களில் ஒருவராக தனக்கென தனி பாணியில் தொடர்ச்சியாக தரமான திரைப்படங்களை வழங்கி வரும் இயக்குனர் தான் இயக்குனர் செல்வராகவன். கடந்த 2002 ஆம் ஆண்டு வெளிவந்த துள்ளுவதோ இளமை திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக களமிறங்கிய இயக்குனர் செல்வராகவன் அவர்கள் அடுத்தடுத்து காதல் கொண்டேன் , 7ஜி ரெயின்போ காலனி , புதுப்பேட்டை, மயக்கம் என்ன, இரண்டாம் உலகம், NGK, நெஞ்சம் மறப்பதில்லை உள்ளிட்ட படங்களை இயக்கினார். இந்த வரிசையில் கடைசியாக இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் கடந்த ஆண்டு(2022) தனுஷ் இரட்டை வேடங்களில் நடிக்க வெளிவந்த நானே வருவேன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இயக்குனராக மட்டுமல்லாமல் தற்போது நடிகராகவும் புது அவதாரம் எடுத்திருக்கும் இயக்குனர் செல்வராகவன் அவர்கள் தளபதி விஜயின் பீஸ்ட், இயக்குனர் அருண் மாதேஸ்வரனின் சாணிக் காகிதம் , ஐஸ்வர்யா ராஜேஷின் ஃபர்ஹானா உள்ளிட்ட திரைப்படங்களில் மிக முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்.  தொடர்ந்து வரும் விநாயகர் சதுர்த்தி வெளியிடாக விஷால் - எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் வெளிவர இருக்கும் மார்க் ஆண்டனி படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் இயக்குனர் செல்வராகவன். அடுத்து நடிகர் தனுஷ் தனது 50வது திரைப்படமாக இயக்கி நடிக்கும் D50 திரைப்படத்திலும் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்ததாக  விரைவில் தனுஷ் கதாநாயகனாக நடிக்கும் ஆயிரத்தில் ஒருவன் - 2 படத்தை செல்வராகவன் இயக்க இருப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதன் இதர அறிவிப்புகளுக்காக ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர். இதனிடையே சமீபத்தில் இயக்குனர் செல்வராகவன்  7ஜி ரெயின்போ காலனி 2 திரைப்படத்தை இயக்க திட்டமிட்டு இருப்பதாகவும் அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும் தகவல்கள் வெளிவந்தன.

7ஜி ரெயின்போ காலனி 2 படத்தில் ரவி கிருஷ்ணாவே கதாநாயகனாக நடிக்க அதிதி சங்கர் கதாநாயகியாக நடிக்க இருப்பதாகவும் யுவன் சங்கர் ராஜா இசையமைப்பதாகவும் செய்திகள் பரவி வருகின்றன. இந்த 7ஜி ரெயின்போ காலனி 2 அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படத்தை இயக்குனர் செல்வராகவன் வெளியிட்டிருப்பதால், இது தனுஷ் இயக்கி நடிக்கும் D50 திரைப்படத்தின் படப்பிடிப்பு தளமா? அல்லது 7ஜி ரெயின்போ காலனி-2 திரைப்படத்தின் படப்பிடிப்பு தளமா? இல்லையென்றால் ஆயிரத்தில் ஒருவன்-2 திரைப்படத்தை தொடங்கி விட்டாரா? என மிகுந்த ஆர்வத்தோடு பகிர்ந்து வருகின்றனர். சோசியல் மீடியாவில் ரசிகர்களிடையே ஆர்வத்தை தூண்டிய இயக்குனர் செல்வராகவனின் அந்த ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படத்தை கீழே உள்ள லிங்கில் காணலாம்.
 

 

View this post on Instagram

A post shared by Selvaraghavan (@selvaraghavan)

“துல்கர் சல்மானின் பிறந்தநாள் பரிசு!”- 'வாத்தி' இயக்குனரோடு இணையும் புதிய பட செம்ம டைட்டில் & அசத்தலான GLIMPSE இதோ!
சினிமா

“துல்கர் சல்மானின் பிறந்தநாள் பரிசு!”- 'வாத்தி' இயக்குனரோடு இணையும் புதிய பட செம்ம டைட்டில் & அசத்தலான GLIMPSE இதோ!

பிறந்தநாள் ஸ்பெஷல்!- கேப்டன் மில்லர் படத்திற்கு பின் வரும் தனுஷின் 5 பெரிய படங்கள் & அறிவிக்கப்பட இருக்கும் படங்களின் முழு பட்டியல் இதோ!
சினிமா

பிறந்தநாள் ஸ்பெஷல்!- கேப்டன் மில்லர் படத்திற்கு பின் வரும் தனுஷின் 5 பெரிய படங்கள் & அறிவிக்கப்பட இருக்கும் படங்களின் முழு பட்டியல் இதோ!

வேகமெடுக்கும் சந்திரமுகி 2 பட இறுதி கட்டப்பணிகள்... சூப்பரான அறிவிப்புடன் வந்த வடிவேலுவின் அட்டகாசமான வீடியோ இதோ!
சினிமா

வேகமெடுக்கும் சந்திரமுகி 2 பட இறுதி கட்டப்பணிகள்... சூப்பரான அறிவிப்புடன் வந்த வடிவேலுவின் அட்டகாசமான வீடியோ இதோ!