துல்கர் சல்மான் - ரித்திகா சிங்கின் துள்ளலான கலாட்டாகாரன் பாடல்… பிறந்த நாளுக்கு கிங் ஆஃப் கொத்தா படக்குழுவின் சூப்பர் ட்ரீட் இதோ!

துல்கர் சல்மானின் கிங் ஆஃப் கோதா பட கலாட்டாகாரன் பாடல் வெளியீடு,dulquer salmaan in king of kotha movie first single kalaattakaaran out now | Galatta

நடிகர் துல்கர் சல்மான் பிறந்தநாளுக்கு பரிசாக அவரது நடிப்பில் அதிரடியான கேங்ஸ்டர் திரைப்படமாக அடுத்து வெளிவர தயாராகி வரும் கிங் ஆஃப் கோதா திரைப்படத்தின் முதல் பாடலான கலாட்டாகாரன் பாடல் வெளியானது. மலையாளத்தில் நடிகராக களமிறங்கி தற்போது இந்திய சினிமாவில் அனைத்து தரப்பு ரசிகர்களின் மனதையும் கவர்ந்த முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக திகழும் நடிகர் துல்கர் சல்மான், இன்று ஜூலை 28ஆம் தேதி தனது 37 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு நமது கலாட்டா குழுமம் மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறது.

முன்னதாக கடந்த 2022ம் வருடம் துல்கர் சல்மான் நடிப்பில் தமிழில் ஹே சினாமிக்கா, மலையாளத்தில் சல்யூட், தெலுங்கில் சீதாராமம், ஹிந்தியில் சுப் - ரிவெஞ் ஆப் தி ஆர்டிஸ்ட் வரிசையாக நான்கு வெவ்வேறு மொழிகளில் நான்கு படங்கள் வெளிவந்து ரசிகர்களை மகிழ்வித்தன. திரைப்படங்களைத் தாண்டி முதல்முறையாக வெப் சீரிஸிலும் களமிறங்கிய துல்கர் சல்மான், ஃபேமிலி மேன் & ஃபர்சி வெப் சீரிஸ்களின் இயக்குனர்கள் ராஜ் மற்றும் டி.கே. இயக்கத்தில் கன்ஸ் அண்ட் குலாப்ஸ் வெப் சீரிசிலும் முன்னணி கதாபாத்திரத்தில் துல்கர் சல்மான் நடித்துள்ளார். ஹிந்தியில் தயாராகி இருக்கும் கன்ஸ் அண்ட் குலாப்ஸ் வெப் சீரிஸ் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு விரைவில் நெட்ஃபிலிக்ஸில் வெளிவர இருக்கிறது. அடுத்ததாக தனுஷின் வாத்தி படத்தின் இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் தயாராகும் லக்கி பாஸ்கர் எனும் படத்தில் நடிக்க இருக்கிறார்

இதனிடையே துல்கர் சல்மான் நடிப்பில் அடுத்து ரிலீஸ்க்கு தயாராகி வரும் திரைப்படம் தான் கிங் ஆஃப் கொத்தா. தனது திரைப்பயணத்தில் முற்றிலும் மாறுபட்ட அதிரடி கேங்ஸ்டர் அவதாரத்தில் 1980களில் நடைபெறும் கதைக்களத்தில் அறிமுக இயக்குனர் அபிலாஷ் ஜோஷி இயக்கத்தில் துல்கர் சல்மான் உடன் இணைந்து நடிகர் சுரேஷ் கோபியின் மகன் கோகுல் சுரேஷ் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள கிங் ஆப் கொத்தா படத்தில் ஐஸ்வர்யா லெக்ஷ்மி கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் செம்பன் வினோத் ஜோஸ், பிரசன்னா, ஷம்மி திலகன், அனிகா சுரேந்திரன், நைலா உஷா, சாந்தி கிருஷ்ணா, சுதி கொப்பா, செந்தில் கிருஷ்ணா, சரண் சக்தி, ராஜேஷ் ஷர்மா மற்றும் சார்பட்டா பரம்பரை படத்தில் டான்சிங் ரோஸாக அசத்திய சபீர் கல்லாரக்கல் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள கிங் ஆஃப் கொத்தா படத்தில் நடிகை ரித்திகா சிங் ஒரு பாடலுக்கு நடனமாடி இருக்கிறார்.

துல்கர் சல்மானின் வேஃபரர் ஃபிலிம்ஸ் மற்றும் ஜி ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்திருக்கும் கிங் ஆஃப் கொத்தா திரைப்படம் மலையாளத்தில் தயாராகி, தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் PAN INDIA படமாக வெளிவர இருக்கிறது. கிங் ஆஃப் கோதா திரைப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் நிமீஷ் ரவி ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் ஷியாம் சசிதரன் படத்தொகுப்பு செய்துள்ளார். கிங் ஆஃப் கோதா திரைப்படத்தின் பாடல்களுக்கு ஜேக்ஸ் பிஜாய் மற்றும் ஷான் ரஹ்மான் இணைந்து இசையமைக்க, ஜேக்ஸ் பிஜாய் பின்னணி இசை சேர்த்துள்ளார். இந்த 2023 ஆம் ஆண்டு ஓணம் பண்டிகை பரிசாக துல்கர் சல்மானின் கிங் ஆஃப் கோத்தா திரைப்படம் ஆகஸ்ட் 24ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. இந்த நிலையில்துல்கர் சல்மானின் பிறந்த நாளை முன்னிட்டு கிங் ஆப் கொத்தா திரைப்படத்திலிருந்து கலாட்டாகாரன் எனும் முதல் பாடல் தற்போது வெளியானது. துல்கர் சல்மான் - ரித்திகா சிங்கின் துள்ளலான நடனத்தில் வந்த அந்த பாடல் இதோ…
 

பிறந்தநாள் ஸ்பெஷல்!- கேப்டன் மில்லர் படத்திற்கு பின் வரும் தனுஷின் 5 பெரிய படங்கள் & அறிவிக்கப்பட இருக்கும் படங்களின் முழு பட்டியல் இதோ!
சினிமா

பிறந்தநாள் ஸ்பெஷல்!- கேப்டன் மில்லர் படத்திற்கு பின் வரும் தனுஷின் 5 பெரிய படங்கள் & அறிவிக்கப்பட இருக்கும் படங்களின் முழு பட்டியல் இதோ!

வேகமெடுக்கும் சந்திரமுகி 2 பட இறுதி கட்டப்பணிகள்... சூப்பரான அறிவிப்புடன் வந்த வடிவேலுவின் அட்டகாசமான வீடியோ இதோ!
சினிமா

வேகமெடுக்கும் சந்திரமுகி 2 பட இறுதி கட்டப்பணிகள்... சூப்பரான அறிவிப்புடன் வந்த வடிவேலுவின் அட்டகாசமான வீடியோ இதோ!

கில்லர் கில்லர்
சினிமா

கில்லர் கில்லர் "கேப்டன் மில்லர்" பட வெறித்தனமான டீசர்... தனுஷின் பிறந்த நாளுக்கு மிரள வைக்கும் ஆக்ஷன் ட்ரீட் இதோ!