"யோகி பாபுவின் அடுத்த காமெடி சரவெடி ON THE WAY!"- கவனத்தை ஈர்த்த லக்கி மேன் பட கலகலப்பான டீசர் இதோ!

யோகி பாபுவின் லக்கி மேன் பட டீசர் வெளியீடு,Yogi babu in lucky man movie teaser out now | Galatta

தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக தொடர்ந்து மக்களை மகிழ்வித்து வரும் நடிகர் யோகி பாபு கதையின் நாயகனாக நடித்திருக்கும் லக்கி மேன் திரைப்படத்தின் டீசர் தற்போது வெளியானது. சமீபத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட்டாகியிருக்கும் மாவீரன் திரைப்படத்திலும் நடித்த யோகி பாபு அடுத்தடுத்து அசத்தலான திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். அந்த வகையில் வருகிற ஆகஸ்ட் 10ஆம் தேதி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நடிப்பில் வெளிவர இருக்கும் ஜெயிலர், ஷாருக் கான் - இயக்குனர் அட்லி கூட்டணியில் செப்டம்பர் மாதம் வெளிவர இருக்கும் ஜவான், 2023 தீபாவளி ரிலீஸாக சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவர இருக்கும் அயலான், வருகிற ஜூலை 28ஆம் தேதி ஹரிஷ் கல்யாண் நடிப்பில் MS.தோனி தயாரிப்பில் வெளிவர இருக்கும் LGM ஆகிய படங்களில் யோகி பாபு மிக முக்கிய நகைச்சுவை வேடங்களில் நடித்திருக்கிறார். 

மேலும் சுந்தர்.C.யின் அரண்மனை 4 மற்றும் விஷால் இயக்குனர் ஹரி கூட்டணியில் தயாராக இருக்கும் #Vishal34 உள்ளிட்ட படங்களில் யோகி பாபு நடிக்க இருக்கிறார். நகைச்சுவை வேடங்களில் மட்டுமல்லாது தொடர்ச்சியாக அழுத்தமான முக்கிய கதாபாத்திரங்களிலும் கதையின் நாயகனாகவும் நடித்துவரும் நடிகர் யோகி பாபு மண்டேலா திரைப்படத்திற்கு பிறகு கதையின் நாயகனாக நடிக்கும் திரைப்படங்கள்  பெரும் கவனத்தை ஈர்க்கின்றன. அந்த வகையில் பொம்மை நாயகி மற்றும் யானை முகத்தான் ஆகிய திரைப்படங்கள் இந்த 2023 ஆம் ஆண்டில் யோகி பாபு நடிப்பில் வெளிவந்தன. அடுத்ததாக இம்சை அரசன் 23ம் புலிகேசி படத்தின் இயக்குனர் சிம்பு தேவன் இயக்கத்தில் முழுக்க முழுக்க நடுக்கடலில் நடக்கும் கதை களத்தை மையமாகக் கொண்ட போட் எனும் திரைப்படத்தில் தற்போது நடித்து வரும் யோகி பாபு, இயக்குனர் ஷாஜின் கே சுரேந்திரன் இயக்கத்தில் உருவாகும் வானவன் எனும் படத்திலும் நடித்து வருகிறார்.

இந்த வரிசையில் யோகி பாபு நடிப்பில் அடுத்த வெளிவர தயாராகி வரும் திரைப்படம் தான் லக்கி மேன். தமிழ் சினிமாவின் பிரபல நடிகர்களில் ஒருவரான பாலாஜி வேணுகோபால் அவர்களின் இயக்கத்தில் யோகி பாபு நடித்துள்ள இந்த லக்கி மேன் படத்தில் ராஜதந்திரம், துணிவு படங்களில் நடித்த வீரா, ரேச்சல் ரெபேக்கா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். திங்க் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் இந்த லக்கி மேன் படத்திற்கு சந்திப்.கே.விஜய் ஒளிப்பதிவில், G.மதன் படத்தொகுப்பு செய்ய ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். லக்கி மேன் திரைப்படத்தின் அமேசான் ப்ரைம் நிறுவனமும் சேட்டிலைட் உரிமத்தை விஜய் டிவியும் கைப்பற்றியுள்ளது. இத்திரைப்படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் லக்கி மேன் திரைப்படத்தின் கலக்கலான டீசர் தற்போது வெளிவந்து ரசிகர்களிடையே பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. மண்டேலா, பொம்மை நாயகி வரிசையில் யோகி பாபுவின் லக்கி மேன் படமும் நல்ல வரவேற்பு பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. கலக்கலான ன லக்கி மேன் பட டீசர் இதோ…
 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அதிரடியான ஜெயிலர் பட ஸ்பெஷல் பேக்கேஜ்… அனைத்து பாடல்களும் கொண்ட கலக்கலான JUKEBOX இதோ!
சினிமா

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அதிரடியான ஜெயிலர் பட ஸ்பெஷல் பேக்கேஜ்… அனைத்து பாடல்களும் கொண்ட கலக்கலான JUKEBOX இதோ!

“துல்கர் சல்மானின் பிறந்தநாள் பரிசு!”- 'வாத்தி' இயக்குனரோடு இணையும் புதிய பட செம்ம டைட்டில் & அசத்தலான GLIMPSE இதோ!
சினிமா

“துல்கர் சல்மானின் பிறந்தநாள் பரிசு!”- 'வாத்தி' இயக்குனரோடு இணையும் புதிய பட செம்ம டைட்டில் & அசத்தலான GLIMPSE இதோ!

பிறந்தநாள் ஸ்பெஷல்!- கேப்டன் மில்லர் படத்திற்கு பின் வரும் தனுஷின் 5 பெரிய படங்கள் & அறிவிக்கப்பட இருக்கும் படங்களின் முழு பட்டியல் இதோ!
சினிமா

பிறந்தநாள் ஸ்பெஷல்!- கேப்டன் மில்லர் படத்திற்கு பின் வரும் தனுஷின் 5 பெரிய படங்கள் & அறிவிக்கப்பட இருக்கும் படங்களின் முழு பட்டியல் இதோ!