என் ரோஜா நீயே, ஆரத்யாவை தொடர்ந்து அட்டகாசமான பாடலை வெளியிட்ட சமந்தா - விஜய் தேவரகொண்டாவின் ‘குஷி’ படக்குழு.. – வைரல் வீடியோ உள்ளே..

விஜய் தேவரகொண்டா சமந்தா நடிப்பில் உருவாகும் குஷி படத்தின் மூன்றாவது பாடல் இதோ - Vijay Devarakonda Samantha Kushi movie released Title Song | Galatta

தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் முன்னணி ஹீரோக்களின் படங்களில் ஒரே நேரத்தில் நடித்து தென்னிந்தியாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. ஹீரோயினாக நடிப்பது மட்டுமல்லாமல் தற்போது சமந்தா கதாநாயாகி மையப்படுத்திய திரைப்படங்களிலும் நடித்து ரசிகர்களின் மனம் கவர்ந்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி வைத்துள்ளார். தற்போது சமந்தா தமிழ், தெலுங்கு மட்டுமல்லாமல் பாலிவுட்டிலும் அசத்தி வருகிறார். அதன்படி பாலிவுட்டில் இவரது நடிப்பில் முன்னதாக வெளியான பேமிலி மேன் சீரிஸ் இவருக்கு நாடு முழுவதும் தனி அந்தஸ்தை பெற்று தந்தது. இப்படத்தை தொடர்ந்து சமந்தா தற்போது இந்தியில் நடித்து முடித்துள்ள தொடர் ‘சிட்டடேல்’. பிரபல ஆங்கில ஆக்ஷன் தொடரின் இந்திய வடிவில் உருவாகி வரும் இப்படத்தில் வருண் தவான் ஜோடியாக சமந்தா நடித்துள்ளார்.  

இதனிடையே நடிகை சமந்தா தெலுங்கு திரையுலகில் நடித்து வெளியாகவிருக்கும் திரைப்படம் ‘குஷி’. காதல் கதையை மையமாக கொண்டு உருவான இப்படத்தில் நாயகனாக விஜய் தேவரகொண்டா நடிக்க அவருக்கு ஜோடியாக சமந்தா நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் இவர்களுடன்  ஜெயராம், சச்சின் கேதகர், முரளி ஷர்மா, லக்ஷ்மி, ரோகினி, சரண்யா பிரதீப் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தென்னிந்தியாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவிஸ் மேக்கர்ஸ் தயாரிப்பில் இயக்குனர் சிவா நிர்வாண இயக்கத்தில் உருவாகும் குஷி படத்திற்கு ஒளிப்பதிவாளர் முரளி ஜி ஒளிப்பதிவு செய்ய படத்திற்கு இசையமைத்திருக்கிறார் ஹேஷம் அப்துல் வஹாப். இவரது இசையில் முன்னதாக வெளியான ‘என் ரோஜா நீயே’, ‘ஆரத்யா’ ஆகிய பாடல்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து டிரெண்ட்டானது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ரசிகர்களின் எதிர்பார்ப்பின் மத்தியில் உருவாகி வரும் குஷி படத்தின் டைட்டில் பாடலை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது. ‘குஷி’ என்று தொடங்கும் இப்பாடலை இசையமைப்பாளர் ஷேஷம் அப்துல் வஹாப் இசையில் தமிழில் அனுராக் குல்கரிணி பாடியுள்ளார். மேலும் பாடலுக்கு வரிகள் எழுதியுள்ளார் பாடலாசிரியர் மதன் கார்க்கி. காதலை ஆழமாக பேசும் பாடலாக உருவாகியுள்ள குஷி பாடல் தற்போது ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வைரலாகி வருகிறது.

வரும் செப்டம்பர் மாதம் 1ம் தேதி தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தியில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. முன்னதாக சமந்தா நடிப்பில் வெளியான ‘சாகுந்தலம்’ திரைப்படம் எதிர்பார்த்த வெற்றி கிடைக்காமல் படு தோல்வியடைந்தது. குஷி படத்தின் மூலம் சமந்தாவிற்கு முழு வெற்றி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. சமந்தா தற்போது தான் ஒப்பந்தமாகியுள்ள திரைப்படங்களை முழு வீச்சுடன் முடித்துள்ளார். தற்போது தனது தோழிகளுடன் பாலி தீவிற்கு சுற்றுலா சென்றுள்ளார். இது குறித்து அவர் பதிவிடும் புகைப்படங்களும்  சமீபத்தில் வைரலாகி  வருகிறது.  

 

சினிமா

"கார்த்தி27"- 96 பட இயக்குனருடன் கார்த்தி & அரவிந்த் சுவாமி இணையும் புதிய படம்... முன்னணி ஒளிப்பதிவாளரின் அட்டகாசமான அறிவிப்பு!

“எங்களின் வலி, வலிமையாய் ஒலித்திருக்கிறது” உணவு விநியோகிக்கும் தொழிலாளர்களுடன் அநீதி படக்குழு.. வைரல் பதிவு இதோ..
சினிமா

“எங்களின் வலி, வலிமையாய் ஒலித்திருக்கிறது” உணவு விநியோகிக்கும் தொழிலாளர்களுடன் அநீதி படக்குழு.. வைரல் பதிவு இதோ..

விஜய் ஆண்டனி - அருண் விஜயின் ACTION PACKED அக்னி சிறகுகள்... விஜய் ஆண்டனியின் பிறந்தநாள் சர்ப்ரைஸ் அறிவிப்பு இதோ!
சினிமா

விஜய் ஆண்டனி - அருண் விஜயின் ACTION PACKED அக்னி சிறகுகள்... விஜய் ஆண்டனியின் பிறந்தநாள் சர்ப்ரைஸ் அறிவிப்பு இதோ!