சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அதிரடியான ஜெயிலர் பட ஸ்பெஷல் பேக்கேஜ்… அனைத்து பாடல்களும் கொண்ட கலக்கலான JUKEBOX இதோ!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் பட அனைத்து பாடல்களும் வெளியீடு,Super star rajinikanth jailer movie jukebox out now | Galatta

இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் ஸ்டைலான நடிப்பில் தயாராகி இருக்கும் ஜெயிலர் திரைப்படத்தின் அனைத்து பாடல்களும் அடங்கிய JUKEBOX தற்போது வெளியானது. ஆண்டுகள் பல கடந்தாலும் மக்களின் மனதை வென்ற சூப்பர் ஸ்டாராக தொடர்ந்து தனது ஸ்டைலால் ரசிகர்களை மகிழ்வித்து வரும் நடிகர் ரஜினிகாந்த் அவர்களின் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் அண்ணாத்த. இயக்குனர் சிவா இயக்கத்தில் வெளிவந்த அண்ணாத்த படம் எதிர்பார்த்த பெரும் வெற்றியை பெற தவறியது. இருப்பினும் அடுத்தடுத்து ரஜினிகாந்த் நடிக்கும் திரைப்படங்கள் மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கின்றன.

அந்த வகையில், அடுத்ததாக இந்திய சினிமாவின் மோஸ்ட் வான்டட் இயக்குனர்களில் ஒருவராக உயர்ந்திருக்கும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் புதிய படத்தில் ரஜினிகாந்த் நடிக்க இருக்கிறார். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகளுக்கு ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்றனர்.முன்னதாக தனது மகளும் இயக்குனருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் லால் சலாம் திரைப்படத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ளார். இதனையடுத்து மீண்டும் லைகா ப்ரோடக்ஷன் தயாரிப்பில் தலைவர் 171 படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கதை நாயகனாக நடிக்கிறார். ஜெய் பீம் படத்தின் இயக்குனர் TJ.ஞானவேல் அவர்கள் தலைவர் 170 திரைப்படத்தை இயக்க இருக்கிறார். 

இதனிடையே முதல்முறையாக இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம் தான் ஜெயிலர். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் ஜெயிலர் படத்தில் சூப்பர் ஸ்டாருடன் இணைந்து ரம்யா கிருஷ்ணன், தமன்னா, வசந்த் ரவி, யோகி பாபு, மலையாள விநாயகன் உட்பட பலர் நடிக்கின்றனர். இவர்களுடன் மலையாள நடிகர் மோகன் லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார், தெலுங்கு நடிகர் சுனில், ஹிந்தி நடிகர் ஜாக்கி ஷெராஃப் ஆகியோரும் இணைந்து நடித்துள்ளனர். விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவில், நிர்மல் படத்தொகுப்பு செய்ய, ஜெயிலர் திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். ஜெயிலர் திரைப்படத்தின் மொத்த படப்பிடிப்பும் கடந்த சில வாரங்களுக்கு முன்பு நிறைவடைந்ததது. 

வருகிற ஆகஸ்ட் 10ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ஜெயிலர் படம்  ரிலீஸாகவுள்ளது. எனவே அதற்கான இறுதி கட்டப் பணிகள் அனைத்தும் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. முன்னதாக ரசிகர்கள் எதிர்பார்த்த ஜெயிலர் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று ஜூலை 28ஆம் தேதி சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், மோகன் லால், சிவராஜ் குமார் உட்பட ஜெயிலர் திரைப்படத்தின் படக்குழுவினர் மற்றும் முன்னணி திரைப் பிரபலங்கள் பலரும் இந்த ஜெயிலர் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டிருப்பதாக தெரிகிறது.  

இந்த நிலையில் ஜெயிலர் திரைப்படத்தின் மொத்த பாடல்களும் தற்போது வெளிவந்துள்ளன. ஏற்கனவே வெளிவந்த காவாலா, ஹுக்கும் மற்றும் ஜூஜூபி ஆகிய பாடல்களோடு ஜெயிலர் தீம், முத்துவேல் பாண்டியன் தீம், ஜெயிலர் ட்ரில் மற்றும் அலப்பற தீம் ஆகிய தீம் மியூசிக் ட்ராக்குகள் வெளிவந்துள்ளன. மேலும் "ரத்தமாறே" என்னும் ஸ்பெஷல் பாடல் ஒன்றும் வெளிவந்துள்ளது. இந்த பாடலை இயக்குனர் விக்னேஸ்வரன் எழுதி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. சூப்பர் ஸ்டாரின் ஜெயிலர் பட அட்டகாசமான பாடல்கள் கொண்ட ஜூக்பாக்ஸ் இதோ…
 

வேகமெடுக்கும் சந்திரமுகி 2 பட இறுதி கட்டப்பணிகள்... சூப்பரான அறிவிப்புடன் வந்த வடிவேலுவின் அட்டகாசமான வீடியோ இதோ!
சினிமா

வேகமெடுக்கும் சந்திரமுகி 2 பட இறுதி கட்டப்பணிகள்... சூப்பரான அறிவிப்புடன் வந்த வடிவேலுவின் அட்டகாசமான வீடியோ இதோ!

கில்லர் கில்லர்
சினிமா

கில்லர் கில்லர் "கேப்டன் மில்லர்" பட வெறித்தனமான டீசர்... தனுஷின் பிறந்த நாளுக்கு மிரள வைக்கும் ஆக்ஷன் ட்ரீட் இதோ!

தனுஷின் அடுத்த பிரம்மாண்டமான Pan-India படம்... பிறந்தநாள் வாழ்த்துக்களோடு அதிரடி அப்டேட் கொடுத்த D51 படக்குழு!
சினிமா

தனுஷின் அடுத்த பிரம்மாண்டமான Pan-India படம்... பிறந்தநாள் வாழ்த்துக்களோடு அதிரடி அப்டேட் கொடுத்த D51 படக்குழு!