அடுத்து என்ன... 'தளபதி 68' - க்கு Hint கொடுத்த இயக்குனர் வெங்கட் பிரபு..! இணையத்தில் ரசிகர்களால் டிரெண்டாகும் பதிவு.. விவரம் உள்ளே..

தளபதி 68 குறித்து ஹின்ட் கொடுத்த  வெங்கட் பிரபு வைரல் பதிவு உள்ளே - Director Venkat prabhu about thalapathy 68 movie tweet goes viral | Galatta

ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களின் எதிர்பார்ப்பின் மத்தியில் உருவாகி வரும் திரைப்படம் ‘லியோ’ இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் தளபதி விஜய் நடித்து முடித்துள்ள லியோ திரைப்படத்திற்கு திரையுலகில் மிகப்பெரிய ஆவல் இருந்து வருகிறது. கடந்த ஆண்டு இறுதியில் தொடங்கப்பட்ட லியோ திரைப்படம் சென்னை, கேரளா மற்றும் காஷ்மீர் போன்ற பகுதிகளில் முழு வீச்சுடன் நடைபெற்று படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. தற்போது லியோ படத்திற்கான இறுதிகட்ட வேலையில் படக்குழு தீவிரமாக இறங்கியுள்ளது. வரும் அக்டோபர் மாதம் ஆயுத பூஜை பண்டிகையையொட்டி உலகமெங்கும் லியோ திரைப்படம் ரிலீஸாகவுள்ளது.    

லியோ திரைப்படம் முடிந்த கையோடு தனது ரசிகர் மன்றம் மூலம் பல மக்கள் பணியை செய்து வந்த விஜய் தற்போது தன் குடும்பத்தாருடன் வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்றுள்ளார். லியோ திரைப்படம் வெளியான பின் அவருடைய அடுத்த படமாக உருவாகவிருக்கும் ‘தளபதி 68’ படத்தின் வேலைகள் துவங்கவுள்ளது. ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தினை இயக்குகிறார் இயக்குனர் வெங்கட் பிரபு. மேலும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கவுள்ளார். இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய அளவு டிரெண்ட்டானது.

தற்போது லியோ படத்தின் இறுதிகட்ட வேலைகள் நடைபெற்று வருவதால் தளபதி 68 குறித்து எந்தவொரு தகவலையும் இயக்குனர் வெங்கட் பிரபு இதுவரை பகிர்ந்து கொள்ளவில்லை. இந்நிலையில் இயக்குனர் வெங்கட் பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில் சிறப்பு புகைப்படத்தை பகிர்ந்து அதனுடன் “அடுத்து என்ன..நாளை 11 மணிக்கு..” என்று குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து ரசிகர்கள் இயக்குனர் வெங்கட் பிரபு தளபதி 68 குறித்து அப்டேட் பகிரவுள்ளார் என்று கருத்துகளை பகிர்ந்து அப்பதிவினை வைரலாக்கி வருகின்றனர்.

அதே நேரத்தில் இயக்குனர் வெங்கட் பிரபு குறுகிய காலத்திலே திரைப்படம் எடுக்க கூடிய இயக்குனர் என்பதால் தளபதி 68 உருவாகுவதற்கு முன்பே புது படம் இயக்கவுள்ளார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. அதனுடன் வெங்கட் பிரபுவின் அடுத்த படம் குறித்த அறிவிப்பாக கூட இருக்கலாம் என்று ரசிகர்கள் தங்கள் ஆவலை ட்விட்டரில் பகிர்ந்து வருகின்றனர்.

So what’s next…. Wait till tomorrow 11am.. #VP__ #__VP pic.twitter.com/AKNxOvXm2b

— venkat prabhu (@vp_offl) July 29, 2023

மேலும் இத்துடன் நடிகரும் இயக்குனர் வெங்கட் பிரபு குழுவினரில் ஒருவருமான நித்தின் சத்யா அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் “நாளை வரை ட்விட்டர் பயன்படுத்தாமல் இரு டா..” என்று குறிப்பிட்டுள்ளார். முன்னதாக இயக்குனர் வெங்கட் பிரபு தளபதி விஜய் கூட்டணி குறித்து இணையத்தில் ஹின்ட் கொடுத்தால் ரசிகர்கள் தற்போது நித்தின் சத்யா பதிவிலும் தளபதி 68 குறித்து கேட்டு வருகின்றனர்.

 

Dei @Nitinsathyaa Dont use Twitter till tomoro……..

— Nitinsathyaa (@Nitinsathyaa) July 29, 2023

தென்னிந்தியாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் முன்னதாக வெளியான ‘கஸ்டடி’ திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் உருவாகி பைலிங்குவலாக வெளியானது. ரசிகர்களின் எதிர்பார்ப்பின் மத்தியில் வெளியான கஸ்டடி திரைப்படம் இயக்குனர் வெங்கட் பிரபுவிற்கு கை கொடுக்கவில்லை. அடுத்து இயக்கவிருக்கும்  தளபதி 68 மீதே அனைவரும் எதிர்பார்ப்பும் இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

“ரொம்ப சந்தோஷமா இருக்கு.. அதே நேரத்தில்...” LGM படம் குறித்து ஹரிஷ் கல்யாண் பகிர்ந்த வீடியோ இணையத்தில் வைரல்..
சினிமா

“ரொம்ப சந்தோஷமா இருக்கு.. அதே நேரத்தில்...” LGM படம் குறித்து ஹரிஷ் கல்யாண் பகிர்ந்த வீடியோ இணையத்தில் வைரல்..

சினிமா

"ஏன்டா இந்த படத்துல நடிச்சேனு ஆயிடுச்சு" நடிகர் சந்தானம் பகிர்ந்து கொண்ட சுவாரஸ்யமான தகவல் – Exclusive Interview இதோ..

போர் களத்தில் மாஸ் காட்டிய கேப்டன் மில்லர் தனுஷ்..  டீசரில் சிலிர்க்க வைத்த முக்கிய தருணங்கள்– சிறப்பு கட்டுரை உள்ளே..
சினிமா ஸ்பெஷல்ஸ்

போர் களத்தில் மாஸ் காட்டிய கேப்டன் மில்லர் தனுஷ்.. டீசரில் சிலிர்க்க வைத்த முக்கிய தருணங்கள்– சிறப்பு கட்டுரை உள்ளே..