தமிழ் திரையுலகின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக திகழும் நடிகர் சிலம்பரசன்.TR அடுத்ததாக இயக்குனர் ஒபெலி.N.கிருஷ்ணா இயக்கத்தில் பத்து தல படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். வருகிற டிசம்பர் 14ஆம் தேதி பத்து தல திரைப்படம் உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிலம்பரசன்.TR கதாநாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் வெந்து தணிந்தது காடு. சிலம்பரசன்.TR உடன் இணைந்து சித்தி இத்தாலி கதாநாயகியாக நடிக்க, ராதிகா சரத்குமார், கயடு லோஹர், சித்திக் மற்றும் நீரஜ் மாதவ் ஆகியோர் வெந்து தணிந்தது காடு திரைப்படத்தில் முக்கிய நடித்துள்ளனர். 

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள வெந்து தணிந்தது காடு திரைப்படத்திற்கு சித்தார்த்தா நுன்னி ஒளிப்பதிவில், ஆன்டனி படத்தொகுப்பு செய்துள்ளார்.வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி.கே.கணேசன் தயாரித்துள்ள வெந்து தணிந்தது காடு திரைப்படம் ரெட் ஜெயன்ட் மூவிஸ் வெளியிட வருகிற செப்டம்பர் 15-ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது. 

வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் ட்ரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா வருகிற செப்டம்பர் 2ஆம் தேதி மாலை 5 மணிக்கு நடைபெறவுள்ளது. சென்னையில் உள்ள பிரபல தனியார் கல்லூரியில் இசை வெளியீட்டு விழாவிற்காக பிரம்மாண்டமான மேடை செட் அமைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் வெந்து தணிந்தது காடு இசை வெளியீட்டு விழாவின் மேக்கிங் வீடியோ தற்போது வெளியானது. அந்த வீடியோ இதோ…
 

Here's the Making video of @SilambarasanTR_ - @menongautham's #VendhuThanindhathuKaadu Audio Launch Set! More exciting announcements coming ur way!

An @arrahman Musical
Prod by @VelsFilmIntl @IshariKGanesh
A @RedGiantMovies_ Release@Udhaystalin @MShenbagamoort3 #VTKFromSep15 pic.twitter.com/UQd4ngiFPN

— Vels Film International (@VelsFilmIntl) August 28, 2022