அடேங்கப்பா இத்தனை LAYER-களா!- பொன்னியின் செல்வன் போர்க்காட்சிகளின் ரகசியங்கள் பகிர்ந்த ஆனந்த் கிருஷ்ணமூர்த்தி! வைரல் வீடியோ

பொன்னியின் செல்வன் போர்க்காட்சிகளின் ரகசியங்கள் பகிர்ந்த ஆனந்த் கிருஷ்ணமூர்த்தி,anand krishnamoorthi about ponniyin selvan war sequences | Galatta

ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களும் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்த மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் கடந்த ஏப்ரல் 28ஆம் தேதி ரிலீஸாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்று 4 நாட்களில் 200 கோடி ரூபாய் வரை வசூலித்து சாதனை படைத்துள்ளது. கோடை விடுமுறையை கொண்டாடும் வகையில் வந்திருக்கும் பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் தொடர்ந்து அரங்கம் நிறைந்த காட்சிகளாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் சவுண்ட் டிசைனர் ஆனந்த் கிருஷ்ணமூர்த்தி நமது கலாட்டா தமிழ் சேனலுக்கு அளித்த பிரத்யேகப் பேட்டியில் பல சுவாரஸ்யமான தகவல்களை நம்மோடு பகிர்ந்து கொண்டார். அப்படி பேசுகையில் ஒவ்வொரு காட்சிகளுக்கும் பல லேயர்களில் சத்தங்கள் சேர்க்கப்பட்டதாக தெரிவித்த அவரிடம், "எந்த ஒரு காட்சியில் அதிகப்படியான லேயர்களில் சத்தங்கள் பயன்படுத்தப்பட்டன?" என கேட்டபோது, 

"போர் காட்சிகள் எல்லாம் பண்ணும் போது கொஞ்சம் கஷ்டம் தான். முன் களத்தில் ஒரு ஆக்சன் இருக்கும், நடுக்களத்தில் ஒரு ஆக்சன் இருக்கும், பின் களத்தில் ஒரு ஆக்சன் இருக்கும் அது எல்லாவற்றையும் எடுத்து வர வேண்டும். அங்கு என்ன தேவை என்பது மிக்சிங் நேரத்தில் தான் நமக்கு தெரியும். ஏனென்றால் அங்கு இசையும் இருக்கும் வசனங்கள் இருக்கும்.. கத்துவார்கள்... பேசுவார்கள்... அதற்கான லேயர்கள் இருக்கும். அதோடு எது தேவை, எது எதோடு சேர்கிறது, எதை குறைப்பது என்பதை முடிவெடுப்போம். பொன்னியின் செல்வன் பாகம் 1 கிளைமாக்ஸ் காட்சியில் செய்ததெல்லாம் மிகவும் கடினமானது. ஆனாலும் செய்தோம் இது ஒன்றும் செய்ய முடியாதது அல்ல." என பதிலளித்தார்.

தொடர்ந்து அவரிடம், அந்த காட்சியில்  எத்தனை லேயர்கள் இருந்தன? எனக் கேட்டபோது, "நூற்றுக்கணக்கான லேயர்கள் இருந்தன. கிட்டத்தட்ட 600 லேயர்கள் இருந்தன. 600 தனித்தனியான சப்தங்கள். சொல்வதற்கு இது ஒரு பெரிய எண்ணிக்கை போல தெரியும். ஆனால் ஒரே சமயத்தில் எத்தனை கேட்கிறது என்று பார்த்தால்... இங்கே அத்தனையையும் பிரித்து வைத்திருப்போம். அதனால் எங்களுக்கு தேடுவது எளிதாக இருக்கும். ஒரே டிராக்கில் அனைத்தையும் போட்டு வைத்தால் தேடுவது சிரமமாக இருக்கும். தண்ணீர் சார்ந்த சத்தங்கள் எல்லாம் தனியாக இருக்கும், குதிரையின் சத்தங்கள் எல்லாம் தனியாக இருக்கும், குதிரை கணைக்க கூடிய சத்தங்கள் எல்லாம் தனியாக இருக்கும், நடக்கும் சத்தங்கள் எல்லாம் தனியாக இருக்கும் இப்படி எல்லாவற்றையும் தனித்தனியாக பிரித்து வைத்திருப்போம். அங்கே ஏதாவது தேவைப்பட்டால் சரியாக எங்கே போய் தேட வேண்டும் என்பது தெரியும். இதற்காக இவ்வளவு ட்ராக்குகள் வேண்டும். உதாரணத்திற்கு நாங்கள் போர்க்காட்சிகளில் தண்ணீர் சார்ந்த சத்தங்களை பயன்படுத்த மாட்டோம். சில சமயங்களில் காற்றின் சத்தங்கள் தேவைப்படாது. சில சமயங்களில் குதிரையின் சத்தங்கள் தேவைப்படாது. அப்படித்தான் அந்த கிளைமாக்ஸ் காட்சியிலும் போர் காட்சியிலும் நிறைய தேவைப்படுகிறது. அங்கே எல்லாம் இருக்கும் காற்று அடிக்கும், காற்றடிக்கும் சத்தமும் வேண்டும். போரில் நிறைய பேர் கத்துவார்கள், அந்த சத்தங்களை சேர்க்க வேண்டும். பொதுவாக கத்துவது அலறுவது போன்ற சத்தங்கள் இருக்கும். அது ஒரு லேயரில் இருக்கும், அடிபட்டு அவர்கள் வலியில் இருக்கும் ஒரு சத்தம் இருக்கும்... இது தவிர போர் நடக்கும் போது அதன் எதார்த்தத்தை காண்பிப்பதற்காக அந்த போர் வழிமுறைகளை சொல்லும், 'இங்கே வா அங்கே போ' என பேசும் சத்தங்கள் இருக்கும்... இதுபோக திரைப்படம் ஐந்து மொழிகளில் உருவானது அதற்கான மொழிகளில் உள்ள லேயர்களை மாற்ற வேண்டும். இதெல்லாம் ஸ்க்ரிப்டில் கூட இருக்காது அதில் எல்லாம் முக்கியமான கதாபாத்திரங்களின் வசனங்கள் மட்டும் தான் இருக்கும். எனவே போர்க்காட்சியில் மற்ற ஆட்கள் கத்தக்கூடிய பேசக்கூடிய வசனங்கள் எல்லாம் நாங்களாக சேர்ப்பது தான். இது ஒரு அற்புதமான அனுபவம்." என தெரிவித்துள்ளார். இன்னும் பல சுவாரசியங்கள் பகிர்ந்து கொண்ட ஆனந்த் கிருஷ்ணமூர்த்தியின் அந்த முழு பேட்டி இதோ…
 

BOX OFFICEஐ அதிரவிடும் பொன்னியின் செல்வன் 2... 4நாட்களிலேயே இத்தனை கோடியா?- மிரள வைக்கும் வசூல் நிலவரம் இதோ!
சினிமா

BOX OFFICEஐ அதிரவிடும் பொன்னியின் செல்வன் 2... 4நாட்களிலேயே இத்தனை கோடியா?- மிரள வைக்கும் வசூல் நிலவரம் இதோ!

வேகமெடுக்கும் சூது கவ்வும் 2 படம்... ரசிகர்களை உற்சாகப்படுத்த படக்குழு வெளியிட்ட கலக்கலான புது GLIMPSE இதோ!
சினிமா

வேகமெடுக்கும் சூது கவ்வும் 2 படம்... ரசிகர்களை உற்சாகப்படுத்த படக்குழு வெளியிட்ட கலக்கலான புது GLIMPSE இதோ!

பிரம்மிக்க வைக்கும் பிரம்மாண்டம்... பொன்னியின் செல்வன் 2 படக்குழு கொடுத்த அட்டகாசமான சர்ப்ரைஸ்! ட்ரெண்டிங் வீடியோ இதோ
சினிமா

பிரம்மிக்க வைக்கும் பிரம்மாண்டம்... பொன்னியின் செல்வன் 2 படக்குழு கொடுத்த அட்டகாசமான சர்ப்ரைஸ்! ட்ரெண்டிங் வீடியோ இதோ