சர்தார் தயாரிப்பாளர் உடன் இணைந்த ஆர்யா - கௌதம் கார்த்திக்... சூப்பர் ஹிட் இயக்குனரின் அடுத்த ஆக்சன் பட அதிரடியான முதல் GLIMPSE இதோ!

ஆர்யா - கௌதம் கார்த்திக்கின் Mr X பட மோஷன் போஸ்டர் வெளியீடு,arya gautham karthik in mr x movie motion poster out now | Galatta

தமிழ் திரையுலகின் குறிப்பிடப்படும் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக விளங்கும் ப்ரிண்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் கடந்த 2022ம் ஆண்டில் தயாரித்த சர்தார் திரைப்படம் தீபாவளி வெளியீடாக ரிலீஸாகி ரசிகர்களிடையே ஏகோபித்த வரவேற்பை பெற்று பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. இயக்குனர் PS.மித்ரன் இயக்கத்தில் மிரட்டலான இரட்டை வேடங்களில் நடிகர் கார்த்தி நடித்த சர்தார் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் 100 கோடி ரூபாய் வசூலித்தது. சர்தார் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் PS.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் சர்தார் 2 திரைப்படம் தயாராக இருக்கிறது. இது குறித்த அறிவிப்பு வெகு விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து இந்த 2023 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் பிப்ரவரி மாதத்தில் ஆர்.ஜே.பாலாஜி மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து முன்னணி கதாபாத்திரங்களில் நடித்த ரன் பேபி ரன் திரைப்படமும் ப்ரிண்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளிவந்து ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தது.

அடுத்ததாக சில வாரங்களில் நடிகர் SJ.சூர்யா நடிப்பில் நேரடியாக அமேசான் பிரைம் வீடியோவில் வெளிவந்த வதந்தி வெப் சீரிஸின் இயக்குனரும், விஜய் ஆண்டனி மற்றும் ஆக்ஷன் கிங் அர்ஜுன் இணைந்து நடித்த கொலைகாரன் திரைப்படத்தின் இயக்குனருமான ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கும் புதிய படத்தையும், இயக்குனர் ராம் சங்கையா இயக்கத்தில் விரைவில் வெளிவர இருக்கும் தண்டட்டி திரைப்படத்தையும் தயாரிக்கும் ப்ரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம், இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண் மற்றும் அட்டகத்தி தினேஷ் ஆகியோர் இணைந்து முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கும் லப்பர் பந்து திரைப்படத்தையும் தயாரிக்கிறது. இந்த வரிசையில் அடுத்ததாக கடந்த ஆண்டில் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளிவந்த சூப்பர் ஹிட்டான FIR படத்தின் இயக்குனர் மனு ஆனந்த் இயக்கத்தில் உருவாகும் Mr.X திரைப்படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்த Mr.X திரைப்படத்தில் ஆர்யா மற்றும் கௌதம் கார்த்திக் இணைந்து முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். முன்னதாக இயக்குனர் முத்தையா இயக்கத்தில் ஆர்யா நடித்துள்ள காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம் திரைப்படம் இந்த கோடை விடுமுறையில் வெளிவர தயாராகி வருகிறது. அதே போல் நடிகர் கௌதம் கார்த்திக் பத்து தல திரைப்படத்திற்கு பிறகு நடித்துள்ள கிரிமினல் திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்திருக்கும் நிலையில், விரைவில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் ஆர்யா மற்றும் கௌதம் கார்த்திக் இணைந்து நடித்திருக்கும் Mr.X திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தன்வீர் மிர் ஒளிப்பதிவில் பிரசன்னா.GK படத்தொகுப்பு செய்யும் Mr.X திரைப்படத்திற்கு திபு நினன் தாமஸ் இசையமைக்கிறார். இந்நிலையில் Mr.X திரைப்படத்தின் அதிரடியான மோஷன் போஸ்டர் தற்போது வெளியானது. ரசிகர்கள் கவனத்தை ஈர்த்த அந்த மோஷன் போஸ்டர் இதோ…
 

பிரம்மிக்க வைக்கும் பிரம்மாண்டம்... பொன்னியின் செல்வன் 2 படக்குழு கொடுத்த அட்டகாசமான சர்ப்ரைஸ்! ட்ரெண்டிங் வீடியோ இதோ
சினிமா

பிரம்மிக்க வைக்கும் பிரம்மாண்டம்... பொன்னியின் செல்வன் 2 படக்குழு கொடுத்த அட்டகாசமான சர்ப்ரைஸ்! ட்ரெண்டிங் வீடியோ இதோ

‘பாகிஸ்தானில் வரலாற்று சிறப்புமிக்க இடத்தில் SSராஜமௌலிக்கு அனுமதி மறுப்பு!’- அடுத்த பிரம்மாண்ட திட்டம் குறித்த ருசிகர தகவல் இதோ!
சினிமா

‘பாகிஸ்தானில் வரலாற்று சிறப்புமிக்க இடத்தில் SSராஜமௌலிக்கு அனுமதி மறுப்பு!’- அடுத்த பிரம்மாண்ட திட்டம் குறித்த ருசிகர தகவல் இதோ!

சினிமா

"ஹிட்டு தான வேணும் .. நான் இருக்கிறேன் வா!" கடினமான சமயத்தில் தூக்கிவிட்ட அண்ணன் மோகன் ராஜா குறித்து பேசிய ஜெயம் ரவி! வைரல் வீடியோ