எதிர்பார்ப்புகளை எகிற வைக்கும் வெற்றிமாறன்-சூர்யாவின் வாடிவாசல்... விறுவிறுப்பாக நடைபெறும் முக்கிய பணிகள்! செம்ம மாஸ் அப்டேட்

லண்டனில் வாடிவாசல் CG பணிகளை கண்காணிக்கும் வெற்றிமாறன்,vetrimaaran at london for vaadivaasal movie cg works suriya | Galatta

தமிழ் சினிமா கண்டெடுத்த பொக்கிஷமாக இந்திய சினிமாவே தமிழ் சினிமாவை பார்த்து வியக்கும் வகையில் சிறந்த படைப்புகளை கொடுத்து வரும் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் விடுதலை பாகம் 1. எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களின் துணைவன் சிறுகதையை தழுவி இரண்டு பாகங்களாக வெற்றிமாறன் உருவாக்கி இருக்கும் விடுதலை திரைப்படத்தின் முதல் பாகம் சமீபத்தில் வெளிவந்து ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பையும் விமர்சன ரீதியாக பாராட்டுகளையும் பெற்றுள்ளது. நகைச்சுவை நடிகராக கலக்கிய சூரி ஒரு தேர்ந்த நடிகராக புதிய அவதாரம் எடுத்து, விடுதலை திரைப்படத்தில் குமரேசன் எனும் காவலர் கதாபாத்திரத்தில் ரசிகர்களின் இதயங்களை கொள்ளையடித்துள்ளார். வாத்தியாராக வரும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதியும் குறைவான காட்சிகள் என்றாலும் மக்கள் மனதில் நிறைந்துள்ளார். மலை கிராமங்களில் வசிக்கும் மக்களின் நிஜ வாழ்க்கையில் இருக்கும் போராட்டங்கள் குறித்து மிக அழுத்தமாக பதிவு செய்துள்ள விடுதலை திரைப்படம் படம் பார்த்த ரசிகர்கள் அனைவருக்கும் புது அனுபவத்தை கொடுத்ததோடு பெரும் பாதிப்பையும் ஏற்படுத்தியது.

விடுதலை பாகம் 1 திரைப்படத்திற்கு கிடைத்த பெரும் வெற்றியை தொடர்ந்து விடுதலை பாகம் 2 திரைப்படத்தின் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. அடுத்த 4 - 6 மாதங்களில் விடுதலை பாகம் 2 திரைப்படத்தின் மொத்த பணிகளும் நிறைவடைந்து ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் வாடிவாசல் திரைப்படத்தில் முதல்முறையாக நடிகர் சூர்யா கதாநாயகனாக நடிக்கிறார். முன்னணி தயாரிப்பாளர் கலைப்புலி.S.தாணு அவர்களின் தயாரிப்பில் உருவாகும் வாடிவாசல் திரைப்படத்தின் டெஸ்ட் ஷூட் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஈசிஆரில் பிரத்யேக செட் அமைக்கப்பட்டு நடைபெற்றது. தொடர்ந்து அந்த டெஸ்ட் ஷூட்டின் முன்னோட்டமாக ஒரு வீடியோவும் வெளியாகி பெரும் கவனத்தை ஈர்த்தது.ஜல்லிக்கட்டை மையப்படுத்தி இதுவரை பலரும் அறிந்திடாத ஜல்லிக்கட்டின் மறுபக்கத்தை அழுத்தமாக பேசும் திரைப்படமாக இயக்குனர் வெற்றிமாறன் உருவாக்கும் வாடிவாசல் திரைப்படத்திற்கு ஜாக்கி கலை இயக்குனராக பணியாற்ற, R.வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார், ஜீவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். 

விரைவில் வாடிவாசல் திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் தற்போது இயக்குனர் வெற்றிமாறன் லண்டனில் தங்கி இருந்து வாடிவாசல் திரைப்படத்திற்கான CG பணிகளை கண்காணித்து வருவதாக தற்போது அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளிவந்துள்ளன. முன்னதாக ஹாலிவுட்டில் வெளிவந்த அவதார், கிங் காங், காட்ஸில்லா மற்றும் சில மார்வெல் படங்களில் VFX பணிகளை கையாண்ட WETA நிறுவனம் வாடிவாசல் திரைப்படத்தின் VFX / CG பணிகளை மேற்கொள்கின்றனர் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் தமிழ் சினிமாவில் முதல் படமாக வாடிவாசல் திரைப்படத்தின் CG பணிகள் அதிக பொருட்ச்செலவில் தயாராகி வருவதாகவும் தயாரிப்பாளர் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. முன்னதாக சூர்யா தற்போது இயக்குனர் சிவா இயக்கத்தில் பிரம்மாண்டமான கங்குவா திரைப்படத்தில் நடித்துவரும் நிலையில், வாடிவாசலும் அடுத்த பிரம்மாண்ட படைப்பாக சூர்யாவிற்கு அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. தொடர்ந்து அடுத்தடுத்த அதிரடியான அறிவிப்புகள் வெளியாகும் எனவும் ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு காத்திருக்கின்றனர்.
 

வேகமெடுக்கும் சூது கவ்வும் 2 படம்... ரசிகர்களை உற்சாகப்படுத்த படக்குழு வெளியிட்ட கலக்கலான புது GLIMPSE இதோ!
சினிமா

வேகமெடுக்கும் சூது கவ்வும் 2 படம்... ரசிகர்களை உற்சாகப்படுத்த படக்குழு வெளியிட்ட கலக்கலான புது GLIMPSE இதோ!

பிரம்மிக்க வைக்கும் பிரம்மாண்டம்... பொன்னியின் செல்வன் 2 படக்குழு கொடுத்த அட்டகாசமான சர்ப்ரைஸ்! ட்ரெண்டிங் வீடியோ இதோ
சினிமா

பிரம்மிக்க வைக்கும் பிரம்மாண்டம்... பொன்னியின் செல்வன் 2 படக்குழு கொடுத்த அட்டகாசமான சர்ப்ரைஸ்! ட்ரெண்டிங் வீடியோ இதோ

‘பாகிஸ்தானில் வரலாற்று சிறப்புமிக்க இடத்தில் SSராஜமௌலிக்கு அனுமதி மறுப்பு!’- அடுத்த பிரம்மாண்ட திட்டம் குறித்த ருசிகர தகவல் இதோ!
சினிமா

‘பாகிஸ்தானில் வரலாற்று சிறப்புமிக்க இடத்தில் SSராஜமௌலிக்கு அனுமதி மறுப்பு!’- அடுத்த பிரம்மாண்ட திட்டம் குறித்த ருசிகர தகவல் இதோ!