வேகமெடுக்கும் சூது கவ்வும் 2 படம்... ரசிகர்களை உற்சாகப்படுத்த படக்குழு வெளியிட்ட கலக்கலான புது GLIMPSE இதோ!

சூது கவ்வும் 2 பட மோஷன் போஸ்டர் வெளியீடு,Soodhu kavvum 2 movie motion poster out now | Galatta

மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் தொலை பயணத்தில் திருப்புமுனையாக அமைந்த ஒரு திரைப்படம் சூது கவ்வும்.  தமிழ் சினிமாவின் குறிப்பிடப்படும் இயக்குனர்களில் ஒருவரான இயக்குனர் நலன் குமாரசாமி இயக்குனராக அறிமுகமான சூது கவ்வும் திரைப்படம் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளிவந்து ரசிகர்களிடையே ஏகோபித்த வரவேற்பை பெற்றது. தயாரிப்பாளர் சி.வி.குமார் தயாரிப்பில் பக்கா டார்க் காமெடி திரைப்படமாக ரிலீஸ் ஆகி சூப்பர் ஹிட்டான சூது கவ்வும் திரைப்படம் தமிழ் சினிமாவின் ட்ரண்ட் செட்டர் திரைப்படமாக திகழ்கிறது. தற்போதைய தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர்களான அசோக் செல்வன், பாபி சிம்ஹா, ரமேஷ் திலக், கருணாகரன் ஆகியோரது திரை பயணத்திற்கும் சூது கவ்வும் திரைப்படம் மிக முக்கிய திரைப்படம். ரசிகர்களின் மனம் கவர்ந்த பாடல்கள் கொடுத்த சந்தோஷ் நாராயணனின் சூது கவ்வும் படத்தின் தீம் மியூசிக் இன்று வரை பலரது ரிங்டோனாக இருக்கிறது.

குறைந்த பட்ஜெட்டில் வித்தியாசமான கதைக்களத்தில் வெளிவந்து வசூல் ரீதியில் பெரும் வெற்றி பெற்ற சூது கவ்வும் திரைப்படத்தின் தயாரிப்பாளர் சி.வி.குமார் அவர்கள் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சூது கவ்வும் திரைப்படத்தின் இரண்டாவது பாகம் குறித்த தகவலை பகிர்ந்து இருந்தார். இதனால் உற்சாகமடைந்த ரசிகர்கள் சூது கவ்வும் 2 படத்தின் அறிவிப்புக்காக காத்திருந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு சூது கவ்வும் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது. இரண்டாம் பாகத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இல்லை. இது ரசிகர்களுக்கு ஒரு புறம் ஏமாற்றத்தை கொடுத்தாலும் முன்னணி கதாபாத்திரத்தில் அகில உலக சூப்பர் ஸ்டார் மிர்ச்சி சிவா நடிப்பதால் காமெடிக்கு கேரன்டி என ரசிகர்கள் நம்புகின்றனர். தொடர்ந்து நகைச்சுவையான கதைக்களங்கள் கொண்ட திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் மிர்ச்சி சிவா தற்போது தமிழ் சினிமாவின் சிறந்த இயக்குனர்களில் ஒருவரான ராம் இயக்கத்தில் உருவாக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரபுதேவா நடிப்பில் நீண்ட காலமாக ரிலீசுக்கு காத்திருக்கும் யங் மங் சங் திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் SJ.அர்ஜுன், சூது கவ்வும் 2 திரைப்படத்தை இயக்குகிறார். திருமுருகன் என்டர்டெயின்மெண்ட் சார்பில் தயாரிப்பாளர் சி.வி.குமார் தயாரிப்பில், ஹரிஷா, எம்.எஸ்.பாஸ்கர், கருணாகரன், ரமேஷ் திலக், ராதாரவி, யோக் ஜாப்பி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.கார்த்திக்.கே.தில்லை ஒளிப்பதிவில், இக்னேசியஸ் அஸ்வின் படத்தொகுப்பு செய்யும் சூது கவ்வும் தூது படத்திற்கு எட்வின் லூயிஸ் விஸ்வநாத் இசையமைக்கிறார். சூது கவ்வும் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சூது கவ்வும் திரைப்படம் வெளிவந்து இன்றோடு 10 ஆண்டுகள் நிறைவடைந்திருக்கும் நிலையில், தற்போது ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் சூது கவ்வும் 2 திரைப்படத்தில் மோஷன் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். கலக்கலான அந்த மோஷன் போஸ்டர் இதோ...
 

சினிமா

"ஹிட்டு தான வேணும் .. நான் இருக்கிறேன் வா!" கடினமான சமயத்தில் தூக்கிவிட்ட அண்ணன் மோகன் ராஜா குறித்து பேசிய ஜெயம் ரவி! வைரல் வீடியோ

‘20க்கும் மேல் படங்கள், வெப் சீரிஸ் என பம்பரமாக சுழன்று வருகிறேன்!’- பெரிய பழுவேட்டைரைராக மிரட்டிய சுப்ரீம் ஸ்டார் சரத்குமாரின் சிறப்பு பேட்டி!
சினிமா

‘20க்கும் மேல் படங்கள், வெப் சீரிஸ் என பம்பரமாக சுழன்று வருகிறேன்!’- பெரிய பழுவேட்டைரைராக மிரட்டிய சுப்ரீம் ஸ்டார் சரத்குமாரின் சிறப்பு பேட்டி!

'பேராண்மைய விட ஆக்சன் ப்ளாக் இருக்கா?'- ஜெயம் ரவியின் நடிப்பு குறித்து பேசிய அவரது தந்தை எடிட்டர் மோகன்! ஸ்பெஷல் வீடியோ இதோ
சினிமா

'பேராண்மைய விட ஆக்சன் ப்ளாக் இருக்கா?'- ஜெயம் ரவியின் நடிப்பு குறித்து பேசிய அவரது தந்தை எடிட்டர் மோகன்! ஸ்பெஷல் வீடியோ இதோ