சூர்யா 42 ‘கங்குவா’ டீசர் எப்போது? தயாரிப்பாளர் கொடுத்த அட்டகாசமான அப்டேட் – Exclusive interview இதோ..

சூர்யா 42 கங்குவா டீசர் வெளியாகும் தேதியை அறிவித்த தயாரிப்பாளர் Here is the update of Suriya Kanguva Teaser | Galatta

தமிழ் சினிமாவில் அடுத்த பிரம்மாண்ட திரைப்படமாக உருவாகி வரும் திரைப்படம் கங்குவா. நடிகர் சூர்யாவின் 42 வது திரைப்படமாக உருவாகி வரும் இப்படத்தினை ஸ்டுடியோ க்ரீன் தயாரிப்பு நிறுவனம் தயாரித்து வருகிறது. இயக்குனர் சிவா இயக்கத்தில் உருவாகும் இப்படம் வரலாற்று புனைவு கதை அடிப்படையாக கொண்டு கற்பனை கலந்த கதையாக உருவாகி வருகிறது. மும்முரமாக நடைபெற்று வரும் சூர்யா 42 வது படமான கங்குவா படத்தின் டைட்டில் மோஷன் போஸ்டர் முன்னதாக வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.  

ரசிகர்களின் எதிர்பார்ப்பை நாளுக்கு நாள் அதிகரிக்கும் கங்குவா படம் குறித்து அப்பட தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா அவர்கள் நமது கலாட்டா தமிழ் சிறப்பு பேட்டியில் கலந்து கொண்டு பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்தனர். அதில் கங்குவா படத்தின் டீசர் குறித்து பேசுகையில்,

கங்குவா படத்தின் வேலைகள் அதிகமா இருக்கு அதனால் இந்த வருடம் வெளியாகாது. அடுத்த ஆண்டு தான் கங்குவா வெளியாகும்.. டீசர் கிட்டத்தட்ட ரெடி.. என்னென்ன 5 மொழிகளில் 5 பெரிய நட்சத்திரங்கள் அதற்கான பிண்ணனி குரல் கொடுக்குறாங்க.. அதுக்கான வேலை போயிட்டு இருக்கு.. தமிழில் பெரிய நடிகர் குரல் கொடுக்கிறார். இப்போது சொன்னால் சஸ்பென்ஸ் போயிடும்.. அது ஒரு நிகழ்ச்சியா பண்ணனும் னு ஒரு ஐடியா இருக்கு.. அதோட சேர்த்து கங்குவா படத்தோட டீசர் வரும்..  ஜீன் மாதம் கண்டிப்பா வந்துடும்.. “ என்றார் மேலும் தொடர்ந்து இயக்குனர் சிவா குறித்து அவர் பேசுகையில்.

“சிவா சாருடைய மிகப்பெரிய பலம் என்னென்னா எவ்ளோ தூரம் அவர் வளர்ந்தாலும் பணிவு தன்மையோட இருப்பார். அதுதான் அவருடைய வளர்ச்சிக்கு காரணம் என்று சொல்லாம். அவர் எல்லா படத்தில் Siva & Team னு போடுவாரு.. அது வெறும் வார்த்தையா இல்லாமல் உண்மையாக கடைபிடிக்க கூடிய நண்பர்." என்றார்.

கங்குவா ஒரு முழுக்க முழுக்க கற்பனை கலந்த கதை தான் அதில் 1 சதவீதம் வரவாற்று பிண்ணனி இருக்கலாம். 14 நூற்றாண்டில் நடந்த சம்பவங்களாக இருக்கலாம் என்ற கற்பனையில் தான் பன்றோம்.. இதை எந்த நாவலில் இருந்தும் எடுக்கல..டீசர் அடுத்த மாதம் வெளியாகும் அதில் அவரை பார்த்தீங்கனா அந்த படத்தின் பிரம்மாண்டம் என்ன.. சூர்யா சார் லுக் என்ன அப்படிங்கறுது எல்லாம் டீசரில் வெளியாகும் இப்போ ரசிகர்களுக்கு இருக்க அழுத்தம் என்னெவென்றால் இன்னும் முகத்தை காட்ட மாட்டேங்குறாங்களே என்பது தான்..

அப்படி சூர்யா சார் முகத்தை காட்டும் போது ஆச்சர்யத்தையும் சந்தோஷத்தையும் தரனும் என்ற காரணத்தினால் தான் இந்த செயல்பாடு..  அதை முறையாக செய்ய வேண்டும். சூர்யா ரசிகர் மட்டுமல்லாமல்  தமிழ் சினிமா ரசிகர்களும் பெருமைபட கூடிய விஷயமா அந்த டீசர் அமையனுங்கறதுதான் எங்களுடைய விரும்பம்.என்றார் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா..

மேலும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா அவர்கள் சூர்யா நடித்து வரும் கங்குவா படம் குறித்து பகிர்ந்து கொண்ட சுவாரஸ்யமான தகவல் கொண்ட முழு வீடியோ இதோ..

ஏ ஆர் ரகுமான் பாடும்போது மேடையேறிய போலீஸ்.. பாதியில் நின்ற கான்செர்ட் – அதிர்ச்சியில் ரசிகர்கள்.. வைரலாகும் வீடியோ இதோ..
சினிமா

ஏ ஆர் ரகுமான் பாடும்போது மேடையேறிய போலீஸ்.. பாதியில் நின்ற கான்செர்ட் – அதிர்ச்சியில் ரசிகர்கள்.. வைரலாகும் வீடியோ இதோ..

“அவர் தங்கமானவர்..” ரஜினிக்கு ஆதரவாக நின்ற சந்திரபாபு நாயுடு.. விமர்சனத்திற்கு பதிலடி – வைரலாகும் பதிவு இதோ..
சினிமா

“அவர் தங்கமானவர்..” ரஜினிக்கு ஆதரவாக நின்ற சந்திரபாபு நாயுடு.. விமர்சனத்திற்கு பதிலடி – வைரலாகும் பதிவு இதோ..

“இதில் மாற்று கருத்துகள் இருந்தால் கூட..”  பொன்னியின் செல்வன் 2 விமர்சனத்திற்கு கமல் ஹாசன் அதிரடி விளக்கம்..! விவரம் உள்ளே..
சினிமா

“இதில் மாற்று கருத்துகள் இருந்தால் கூட..” பொன்னியின் செல்வன் 2 விமர்சனத்திற்கு கமல் ஹாசன் அதிரடி விளக்கம்..! விவரம் உள்ளே..