"வந்தியதேவன் குதிரை சத்தம் இப்படிதான் உருவானது.." பொன்னியின் செல்வன் படம் குறித்து ஆனந்த் கிருஷ்ணமூர்த்தி பகிர்ந்த தகவல் - Exclusive Interview இதோ..

PS 2 ஒலி வடிவமைப்பு குறித்து ஆனந்த் கிருஷ்ணமூர்த்தி வீடியோ உள்ளே - PS 2 sound designer anand krishnamoorthi about Horse sound making | Galatta

திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் மணிரத்தினம் அவர்களின் பொன்னியின் செல்வன் 2 படம் தற்போது விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாவும் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. உலகெங்கிலும் வெளியாகி நான்கு நாட்கள் முடிந்த நிலையில் பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் 200 கோடி ரூபாய் க்கு மேல் வசூல் செய்து மேலும் வசூல் வேட்டையாடி வருகிறது.

இந்நிலையில் வெற்றிப்படமாக மக்கள் கொண்டாடும் இப்படத்தில் சிறப்பு சத்தம் பணிக்காக வேலை பார்த்த ஆனந்த் கிருஷ்ணமூர்த்தி அவர்கள் நமது கலாட்டா தமிழ் சிறப்பு பேட்டியில் கலந்து கொண்டு பொன்னியின் செல்வன் படத்திற்காக செய்த சிறப்பு சத்தம் மற்றும் அதன் உருவாக்கம் குறித்து பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார். அதில் குறிப்பாக வந்திய தேவனாக நடித்த கார்த்தி வரும் காட்சியில் அவருடைய குதிரையின் சத்தம் உருவானது குறித்து பேசுகையில்,

"இது ஒருத்தர் செய்ற வேலை இல்லை. என்கிட்ட ஒரு குழுவே உள்ளது. குதிரை எடுத்து கொண்டால் அந்த குதிரை நடக்கும் சத்தம்.. குதிரை மூச்சு விடுறது.. கணைக்கிறது.‌ அப்பறம் குதிரை மீது போட்டிருக்க ஆபரணங்களின் சத்தம் னு தனியா இருக்கு.. அது தவிர ஒருத்தர் குதிரை மேல உட்கார்ந்திருக்காருனா அவருக்கான அசைவுகள் சத்தம் இருக்கும் அது எல்லாம் சாதராணமான சத்தங்கள். இதில் இன்னும் தனித்து குறிப்பிட்டு சொல்ல கூடிய சத்தங்களும் உள்ளது. உதாரணமாக வந்தியதேவனுடைய செம்பன் குதிரைக்கு ஒரு தனி மணி சத்தம் இருக்கும்.. அது தனியா அந்த குதிரைக்காக சேர்க்கப்பட்டது. குதிரை வெறும் நிக்குறது ஓடுறது மட்டும் கிடையாது. அந்த காட்சியில் அந்த குதிரை எவ்வளவு வேகமா ஓடுது.. எதுக்காக வேகமாக ஓடுது.. அங்க எங்க நம்ம கொண்டு வரனும்... இது தான் செயல்பாடு..உதாரணமாக ஆதித்ய கரிகாலன் குதிரையின் மீது வந்து பேசுறாரு.. அவர் கோவமா இருக்காரு.. சிரிக்கிறாரு.. சந்தோஷமா இருக்குறாருனா அந்த அசைவுகளை அந்த குதிரையும் கொடுக்கனும். அதற்கன சத்தத்தையும் நாங்கள் கொடுக்க வேண்டும்.அதன்மூலம் தான் பார்வையாளர்களுக்கு அந்த காட்சியின் தன்மை புரிய வரும்.." என்றார் ஆனந்த் கிருஷ்ணமூர்த்தி

மேலும் தொடர்ந்து இறுதி காட்சியில் தண்ணீர் சத்தங்கள் உருவானது குறித்து பேசுகையில், "சில தண்ணீருக்கான சத்தங்கள் எல்லாம் நாங்களே நேரடியாக பதிவு செய்தோம். ஒரு நீச்சல் குளத்தில் என்னென்ன சத்தங்கள் வேண்டுமோ அதை உருவாக்கி நாங்களே பதிவு செய்தோம்.  தண்ணீருக்குள்ள ஒரு மனிதனின் உடல் விழுது என்றால் அதில் என்ன சத்தம் வர வேண்டும் என்பதை சாதாரணமா பண்ணிடலாம்.. ஆனால் இந்த படத்தில் நாங்கள் எதாவது கூடுதலாக செய்ய வேண்டும் என்பதால் அதற்கான ஆட்களை அழைத்து வந்து நீச்சல் குளங்களில் குதிக்க வைத்தோம். அதையும் அப்படியே எடுத்துட முடியாது. ஒரு மைக் எங்க வைக்கிறோம் அதை எங்க பதிவு செய்றோம் அப்படிங்கிறது முக்கியமான விஷயம். சத்தங்கள் நல்லா வருது அப்படிங்கறுதுக்காக படத்தில் அப்படியே வைக்க முடியாது. அது கதைக்கு தேவையா என்பதை பார்த்து தான் அந்த சத்தங்கள் உருவாக்க பட்டு வைக்கப்படுகிறது.‌ நிறைய சத்தங்கள் கொடுத்து அதிர வைப்பது எளிது.. எந்த சத்தம் வைக்க கூடாது என்பதை தெரிய வேண்டும். அது தான் வேலையே" என்றார்.

மேலும் ஒலி வடிவமைப்பாளர் ஆனந்த் கிருஷ்ண மூர்த்தி அவர்கள் நமது கலாட்டா மீடியா சிறப்பு பேட்டியில் பொன்னியின் செல்வன் ஒலி வடிவமைப்பு உருவான விதம் குறித்து பகிர்ந்த சுவாரஸ்யமான தகவல்கள் கொண்ட முழு வீடியோ இதோ...

 

“இதில் மாற்று கருத்துகள் இருந்தால் கூட..”  பொன்னியின் செல்வன் 2 விமர்சனத்திற்கு கமல் ஹாசன் அதிரடி விளக்கம்..! விவரம் உள்ளே..
சினிமா

“இதில் மாற்று கருத்துகள் இருந்தால் கூட..” பொன்னியின் செல்வன் 2 விமர்சனத்திற்கு கமல் ஹாசன் அதிரடி விளக்கம்..! விவரம் உள்ளே..

ஐஸ்வர்யா ராஜேஷின் ‘ஃபர்ஹானா’ படத்தின் காட்சிகளுடன் வெளியான சிறப்பு பாடல் – ஆண்ட்ரியா குரலில் அட்டகாசமான பாடல் இதோ..
சினிமா

ஐஸ்வர்யா ராஜேஷின் ‘ஃபர்ஹானா’ படத்தின் காட்சிகளுடன் வெளியான சிறப்பு பாடல் – ஆண்ட்ரியா குரலில் அட்டகாசமான பாடல் இதோ..

டூப் போடமல் ஆபத்தான சாகச சண்டை காட்சியில் பிரபல நடிகை.. குவியும் பாராட்டுகள் – வைரலாகும் Glimpse இதோ..
சினிமா

டூப் போடமல் ஆபத்தான சாகச சண்டை காட்சியில் பிரபல நடிகை.. குவியும் பாராட்டுகள் – வைரலாகும் Glimpse இதோ..