பிரம்மிக்க வைக்கும் பிரம்மாண்டம்... பொன்னியின் செல்வன் 2 படக்குழு கொடுத்த அட்டகாசமான சர்ப்ரைஸ்! ட்ரெண்டிங் வீடியோ இதோ

பொன்னியின் செல்வன் 2 படத்தின் புது ட்ரெய்லர் வெளியீடு,mani ratnam in ponniyin selvan 2 movie new trailer out now | Galatta

இந்தக் கோடை விடுமுறையை மக்கள் கொண்டாடும் வகையில் வெளிவந்துள்ளது இயக்குனர் மணிரத்தினத்தின் பொன்னியின் செல்வன் 2. தமிழ் எழுத்தாளர்களிலேயே புகழ்மிக்க எழுத்தாளர்களில் ஒருவரான அமரர் கல்கி அவர்களின் வரலாற்றுப் புனைவு நாவலான பொன்னியின் செல்வன் நாவலை தழுவி இயக்குனர் மணிரத்தினம் இரண்டு பாகங்களாக உருவாக்கிய பொன்னியின் செல்வன் திரைப்படத்தை லைக்கா ப்ரொடக்ஷன்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கிஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. ஐந்து தொகுப்புகளை கொண்ட பொன்னியின் செல்வன் எனும் பெரிய நாவலை இரண்டு பாகங்கள் கொண்ட திரைப்படமாக உருவாக்க இயக்குனர் மணிரத்னத்தோடு எழுத்தாளர் ஜெயமோகன் மற்றும் இளங்கோ குமரவேல் இணைந்து திரைக்கதையில் பணியாற்றினர். தொழில்நுட்பக் குழுவைப் பொறுத்தவரையில் இந்தியாவின் தலைசிறந்த கலைஞர்களான தோட்டா தரணி, ரவிவர்மன், ஸ்ரீதர் பிரசாத், இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோர் கலை, ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, இசை ஆகியவற்றை மிக சிறப்பாக கையாண்டுள்ளனர்.

பொன்னியின் செல்வன் நாவலில் வாசகர்களின் மனம் கவர்ந்த பொன்னியின் செல்வனின் முக்கிய கதாபாத்திரங்களான ஆதித்த கரிகாலன், பொன்னியின் செல்வன் என்கிற அருள் மொழி வர்மன், வல்லவரையன் வந்தியத்தேவன், நந்தினி & ஊமைராணி, குந்தவை, ஆழ்வார்கடியான் நம்பி, பூங்குழலி, பெரிய பழுவேட்டறையர், சிறிய பழுவேட்டறையர், சுந்தர சோழர், பார்த்திபேந்திர பல்லவன், பெரிய வேளாளர் பூதி விக்ரம கேஸரி, வானதி, மதுராந்தகன், சேந்தன் அமுதன், ரவிதாசன், திருக்கோவிலூர் மலையமான், செம்பியன் மாதேவி, அனிருத்த பிரம்மராயர், வீரபாண்டியன் உள்ளிட்ட மிக முக்கிய கதாபாத்திரங்களில் சீயான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, இரட்டை வேடத்தில் ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஜெயராம், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், விக்ரம் பிரபு, இளைய திலகம் பிரபு, ஷோபிதா, ரஹ்மான், அஸ்வின் கக்கமன்னு, கிஷோர், லால், ஜெயசித்ரா, மோகன் ராமன், நாசர் ஆகியோர் நடித்துள்ளனர்.

கடந்த ஏப்ரல் 28ஆம் தேதி ரிலீசான பொன்னியின் செல்வன் திரைப்படத்தை ரசிகர்கள் திரையரங்குகளில் கொண்டாடி வருகின்றனர். ஆரம்பத்திலேயே வசூல் வேட்டையை தொடங்கிய பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் இதுவரை 150 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளி வருகின்றன. சரியாக கோடை விடுமுறை சமயத்தில் வெளிவந்திருப்பதால் தொடர்ந்து இதே வேகத்தில் வெற்றிகரமாக ஓடும் பட்சத்தில் 1000 கோடி ரூபாய் வரை வசூலித்து தமிழ் சினிமாவின் முதல் 1000 கோடி வசூல் செய்த திரைப்படம் என்ற எதிர்பார்ப்பை பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் பூர்த்தி செய்யும். இந்த நிலையில் ரசிகர்களை திரையரங்குகளுக்கு வரவழைக்கும் வகையில் இன்னும் ஆர்வத்தை தூண்டும் விதமாக பொன்னியின் செல்வன் 2 படக்குழு புதிய ட்ரெய்லர் ஒன்றை வெளியிட்டுள்ளது. பிரம்மிப்பான அந்த புதிய ட்ரெய்லர் இதோ…
 

‘20க்கும் மேல் படங்கள், வெப் சீரிஸ் என பம்பரமாக சுழன்று வருகிறேன்!’- பெரிய பழுவேட்டைரைராக மிரட்டிய சுப்ரீம் ஸ்டார் சரத்குமாரின் சிறப்பு பேட்டி!
சினிமா

‘20க்கும் மேல் படங்கள், வெப் சீரிஸ் என பம்பரமாக சுழன்று வருகிறேன்!’- பெரிய பழுவேட்டைரைராக மிரட்டிய சுப்ரீம் ஸ்டார் சரத்குமாரின் சிறப்பு பேட்டி!

'பேராண்மைய விட ஆக்சன் ப்ளாக் இருக்கா?'- ஜெயம் ரவியின் நடிப்பு குறித்து பேசிய அவரது தந்தை எடிட்டர் மோகன்! ஸ்பெஷல் வீடியோ இதோ
சினிமா

'பேராண்மைய விட ஆக்சன் ப்ளாக் இருக்கா?'- ஜெயம் ரவியின் நடிப்பு குறித்து பேசிய அவரது தந்தை எடிட்டர் மோகன்! ஸ்பெஷல் வீடியோ இதோ

வடிவேலுவின் மிரட்டலான புது அவதாரம்... கவனம் ஈர்க்கும் மாரி செல்வராஜின் மாமன்னன் பட அட்டகாசமான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் இதோ!
சினிமா

வடிவேலுவின் மிரட்டலான புது அவதாரம்... கவனம் ஈர்க்கும் மாரி செல்வராஜின் மாமன்னன் பட அட்டகாசமான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் இதோ!