பாகுபலி படத்தின் மூலம் உலகம் முழுவதும் ரசிகர்களை பெற்ற நடிகர் பிரபாஸ்.இந்த படம் இரண்டு பாகங்களாக வெளியாகி ,இரண்டு படங்களுமே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வசூல் வேட்டை நடத்தின.இதனை தொடர்ந்து பிரபாஸ் மிகப்பெரும் பட்ஜெட்டில் உருவான சாஹோ படத்தில் நடித்திருந்தார்.இந்த படம் வெளியாகி ரசிகர்களிடம் சுமாரன வரவேற்பை பெற்றிருந்தது.

சாஹோ படத்தை தொடர்ந்து பிரபாஸ் நடித்து வரும் படம் பிரபாஸ் 20.இந்த படத்தை ஜில் படத்தின் மூலம் பிரபலமான ராதாகிருஷ்ண குமார் இயக்குகிறார்.UV க்ரியேஷன்ஷுடன் இணைந்து கோபி கிருஷ்ணா மூவிஸ் இந்த படத்தை தயாரிக்கின்றனர்.பூஜா ஹெக்டே இந்த படத்தில் கதாநாயகியாக நடித்துவருகிறார்.1970-ல் நடைபெறும் ரொமான்டிக் கதையாக இது இருக்கும் என்று தெரிகிறது.இந்த படத்தின் ஷூட்டிங் வெளிநாடுகளில் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது.

இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் மற்றும் டைட்டில் சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது.ராதே ஷ்யாம் என்று இந்த படத்திற்கு படக்குழுவினர் பெயரிட்டுள்ளனர்.தமிழ்,தெலுங்கு,ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் இந்த படத்தின் போஸ்டர்கள் வெளியாகியுள்ளது.கடந்த சில வருடங்களாக ஆக்ஷன் மோடில் இருந்த பிரபாஸ் இந்த படத்தில் ரொமான்டிக் ஹீரோவாக களமிறங்குகிறார்.இதனை அடுத்து இவர் நடிக்கவுள்ள படம் பிரபாஸ் 21.

மகாநதி/நடிகையர் திலகம் படத்தை இயக்கிய நாக் அஸ்வின் இயக்கும் இந்த படத்தில் பிரபாஸ் ஹீரோவாக நடிக்கிறார்.வைஜயந்தி மூவிஸ் இந்த படத்தை தயாரிக்கின்றனர்.இந்த படத்தில் அரவிந்த்சுவாமி முக்கிய வேடத்தில் நடிக்கிறார் என்ற தகவல் சமூகவலைத்தளங்களில் பரவி வந்தது.இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தில் தீபிகா படுகோனே ஹீரோயினாக நடிக்கிறார் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு சில நாட்களுக்கு முன் வெளியானது.முன்னதாக சாஹோ படத்தில் ஷ்ரத்தா கபூருடன் நடித்த பிரபாஸ் இந்த படத்தில் தீபிகா படுகோனுடன் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரபாஸின் 22ஆவது படத்தை இயக்குநர் ஓம் ராவத் இயக்குகிறார் ஆதிபுருஷ் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படம் ராமாயணத்தை மையமாக வைத்து எடுக்கப்படவுள்ளது.இந்த படத்தில் சைப் அலி கான் வில்லனாக நடிக்கவுள்ளார் என்ற அதிகாரபூர்வ அறிவிப்பு சில வாரங்களுக்கு முன் வெளியானது.

தற்போது பிரபாஸின் 21ஆவது படம் குறித்த முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.இந்த படத்தில் முக்கிய வேடத்தில் பாலிவுட் சூப்பர்ஸ்டார் அமிதாப் பச்சன் நடிக்கிறார் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.இதனை பிரபாஸ் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து கொண்டாடி வருகின்றனர்.