கல்யாண வீட்டில் மணப்பெண்ணின் தோழி 7 பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பத்தில், போலீசார் நடவடிக்கை எடுக்காததால் மனமுடைந்த பெண் தற்கொலை செய்து கொண்டதாகத் தகவல் வெளியாகி உள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

சத்தீஸ்கர் மாநிலம் கொண்டகாவ்ன் மாவட்டத்தில் தான், இப்படி ஒரு கொடூர சம்பவம் அரங்கேறி உள்ளது.

கொண்டகாவ்ன் மாவட்டத்தைச் சேர்ந்த 20 வயது இளம் பெண் ஒருவர், தனது தோழியின் திருமணத்திற்காகப் பக்கத்து ஊருக்குச் சென்று உள்ளார். அப்போது, அன்று இரவு நேரத்தில் குறிப்பிட்ட அந்த திருமண மண்டபத்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்துகொண்டு இருந்தது. 

அப்போது, அந்த திருமண மண்டபத்திற்கு வந்த அந்த இளம் பெண், தனது சக தோழிகள் அங்கு வர தாமதமானதால், தன் தோழிகளுக்காக அந்த இளம் பெண் அந்த மண்டபத்தின் வாசலில் காத்துக்கொண்டு நின்று உள்ளார்.

அப்போது, அந்த திருமண விழாவிற்கு வந்த 7 பேர் கொண்ட கும்பல், அந்த பெண் தனியாக நிற்பதைப் பார்த்து சபலப்பட்டு உள்ளனர். இதனையடுத்து, அந்த 7 பேருமாகச் சேர்ந்த, மண்டபத்தின் வெளியே நின்றுகொண்டு இருந்த அந்த இளம் பெண்ணை, அந்த 7 பேரும் சேர்ந்து, அங்குள்ள காட்டுப் பகுதிக்குத் தூக்கிச் சென்று உள்ளனர். அங்கு, ஆட்கள் நடமாட்டம் யாரும் இல்லாத நிலையில், அந்த 7 பேர் கொண்ட மிருக கும்பல், அந்த 20 வயது இளம் பெண்ணை மாறி மாறி வெறித் தீர பாலியல் பலாத்காரம் செய்து உள்ளனர். 

மேலும், “இந்த பாலியல் பலாத்கார சம்பவம் குறித்து வெளியே யாரிடமாவது கூறினால், உன்னைக் கொன்று விடுவோம்” என்றும், அந்த கும்பல் மிரட்டி, அந்த இளம் பெண்ணை அங்கிருந்து அனுப்பி உள்ளது. 

இதனையடுத்து, மறுநாள் காலையில் வீடு திரும்பிய அந்த பெண், தனக்கு நேர்ந்த பாலியல் பலாத்கார கொடுஞ் செயல் குறித்து, தனது தந்தையிடம் கூறி, கதறி அழுதுள்ளார்.

அப்போது, அவரது தந்தை தைரியம் கொடுக்கவே, அந்த இளம் பெண் அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால், போலீசார் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், இன்னம் மன உளைச்சலுக்கு ஆளான அந்த பெண், அவமானம் தாங்காமல் வீட்டிலேயே தற்கொலை செய்துகொண்டார். 

இதனையடுத்து, அந்த இளம் பெண்ணின் தந்தை மீண்டும் காவல் நிலையம் சென்று முறையிட்டார். அப்போது, அங்கிருந்த போலீசார் மெத்தனமாகச் செயல்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து, அந்த இளம் பெண்ணின் தந்தை தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இதனால், இந்த விசயம் அங்கு பெரும் பிரச்சனையாக உருவெடுத்ததால், அந்த மாவட்ட உயர் அதிகாரிகள், அவரை சந்தித்து உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.

அதன் தொடர்ச்சியாக, இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், அந்த 7 பேர் கொண்ட கும்பலில் 5 பேரை அதிரடியாகக் கைது செய்தனர். அத்துடன், தலைமறைவாக உள்ள 2 பேரை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

மேலும், தற்கொலை செய்துகொண்ட இளம் பெண்ணின் உடலைத் தோண்டி எடுத்து மீண்டும் பிரேதப் பரிசோதனை செய்ய போலீசார் முடிவு செய்து உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால், அந்த மாநிலத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.