அதர்வா நடிப்பில் இயக்குனர் ஆர்.கண்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் தள்ளி போகாதே. தெலுங்கில் வெளியாகி ஹிட்டான நின்னு கோரி படத்தின் தமிழ் ரீமேக்காகும். அதர்வாவிற்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார். இவர் ப்ரேமம் மலையாளம் படம் மூலம் பிரபலமானவர். அதன் பின்னர் தனுஷ் ஜோடியாக கொடி படத்தில் நடித்தார். மேலும் முக்கிய ரோலில் அமிதாஷ் பிரதான் நடித்துள்ளார். 

மசாலா பிக்ஸ் மற்றும் எம்.கே.ஆர்.பி புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஷண்முக சுந்தரம் காட்சிகள் அமைத்துள்ளார். கபிலன் வைரமுத்து வசனம் எழுதியுள்ளார். கோபி சுந்தர் இசையமைக்கும் இந்த படத்திற்கு எடிட்டர் ஆர்கே செல்வா எடிட்டிங் செய்கிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ஏற்கனவே வெளியாகி திரை விரும்பிகளை ஈர்த்தது. இளைஞர்கள் விரும்பும் காதல் காவியமாக இப்படம் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

அஜர்பைஜான் நாட்டில் ஜிசி என்ற சிகரத்தின் மீது 70 அடி உயரத்திற்கு மலையேற்றம் செய்து இந்த படத்தின் சில காட்சிகளை படமாக்கினார்களாம். இந்நிலையில் படத்தின் ட்ரைலர் தற்போது வெளியானது. இசையமைப்பாளர் அனிருத் இந்த படத்தின் ட்ரைலரை வெளியிட்டார். ட்ரைலர் காட்சிகளை பார்க்கையில் இளைஞர்கள் விரும்பும் காதல் காவியமாக படம் இருக்கும் என்றே கூறலாம். ரொமான்டிக் ஜானரில் உருவாகியிருக்கும் இந்த படத்தில் காமெடி, சென்டிமென்ட் என கச்சிதமான காட்சிகள் இருக்கும் என்றே கூறலாம். 

தள்ளிப் போகாதே படத்தின் ட்ரைலரை பார்த்த இணையவாசிகள், அதர்வாவிற்கு ஏற்ற கேரக்டரை இயக்குனர் வடிவமைத்துள்ளார் என்று புகழாரம் சூட்டி வருகின்றனர். கிளாஸாக அமைந்துள்ளது ட்ரைலர் என பாராட்டி வருகின்றனர் ரசிகர்கள். ஜெயம் கொண்டான், கண்டேன் காதலை, சேட்டை இந்த படங்களிலும் காதல் காட்சிகளை அற்புதமாக வடிவமைத்திருப்பார் இயக்குனர் கண்ணன். 

இந்த படத்தை தொடர்ந்து சந்தானம் நடித்த பிஸ்கோத் படத்தை இயக்கியுள்ளார் கண்ணன். ரதன் இசையமைக்கும் இந்த படத்திற்கு சண்முக சுந்தரம் ஒளிப்பதிவு செய்கிறார். ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் இந்த படத்தை வெளியிடுகிறது. ரொமான்டிக் கலந்த காமெடி ஜானரில் உருவாகியுள்ள இந்த படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியானது. 

ஆனந்தராஜ், ஜீவா, மொட்டை ராஜேந்திரன், மனோகர் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தில் 18-ம் நூற்றாண்டில் வாழந்த அரசனாக சந்தானம் நடிக்கிறார் என்று இயக்குனர் கூறியிருந்தார். கிட்டதட்ட 30 நிமிடம் இந்த காட்சிகள் இடம் பெற்றுள்ளது என விவரித்துள்ளார். இந்த படத்தின் ஆடியோ உரிமையை திங்க் மியூசிக் நிறுவனம் கைபற்றியுள்ளது.