படத்திற்கு படம் நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து பல விதமான கதாபாத்திரங்களில் சிறப்பாக நடித்து தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் தனக்கென தனி இடம் பிடித்தவர் நடிகை ஆண்ட்ரியா. முன்னதாக சிபி சத்யராஜ் மற்றும் ஆண்ட்ரியா இணைந்து நடித்த வட்டம் திரைப்படம் கடந்த சில தினங்களுக்கு முன்பு நேரடியாக டிஸ்னி ப்லஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் ரிலீசானது.

வட்டம் திரைப்படத்தைத் தொடர்ந்து இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் ஆண்ட்ரியா நடித்துள்ள ஹாரர் த்ரில்லர் படமான பிசாசு 2 திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 31ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. மேலும் ஆண்ட்ரியா நடிப்பில் மாளிகை மற்றும் கா உள்ளிட்ட த்ரில்லர் திரைப்படங்களும் விரைவில் ரிலீசாகவுள்ளன.

முன்னதாக பிரபல நடன இயக்குனர் பாபி ஆண்டனி இயக்கத்தில் புதிய படம் மற்றும் இயக்குனர் தினேஷ் செல்வராஜ் இயக்கத்தில் ஒரு படம் என வரிசையாக அடுத்தடுத்த திரைப்படங்களில் ஆண்ட்ரியா தற்போது நடித்து வருகிறார்.இந்த வரிசையில் ஆண்ட்ரியா நடித்துள்ள அனல் மேலே பனித்துளி திரைப்படம் நேரடியாக SONYliv OTT தளத்தில் விரைவில் ரிலீசாகவுள்ளது. 

இயக்குனர் R.கெய்சர் ஆனந்த் இயக்கத்தில் ஆண்ட்ரியா மற்றும்  ஆதவ் கண்ணதாசன் முன்னணி கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். இயக்குனர் வெற்றிமாறனின் கிராஸ்ரூட் ஃபிலிம் கம்பெனி தயாரிப்பில், B4U AND IVY என்டர்டெயின்மென்ட் நிறுவனம் வழங்கும் அனல் மேலே பனித்துளி படத்தில் R.வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்ய, சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். இந்நிலையில், தற்போது அனல் மேலே பனித்துளி படத்திலிருந்து கீச்சே கீச்சே பாடல் லிரிக் வீடியோ தற்போது வெளியானது. அந்த பாடல் இதோ…