தளபதி விஜய் நடித்துள்ள 'வாரிசு' படத்தின் டிரெய்லர் வெளியானது. டிரெய்லரில் இடம்பெற்றுள்ள தெறிக்கவிடும் வசனங்களை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து பொங்கல் விருந்தாக ஜனவரி 12ல் வெளியாகும் திரைப்படம் 'வாரிசு'. பேன் இந்தியா படமாக உருவாகும் இத்திரைப்படம் தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் வெளியாகிறது. தில் ராஜுவின் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.

பிரவீன் கே.எல். இதன் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார். மேலும் கார்த்திக் பழனி இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்திலிருந்து 'ரஞ்சிதமே', 'தீ தளபதி', 'Soul of Varisu' உள்ளிட்ட பாடல்களின் லிரிக்கல் வீடியோ வெளியாகியுள்ளது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். மேலும் முக்கிய கதாபாத்திரங்களில் சரத் குமார், குஷ்பூ, ஷ்யாம், ஜெயசுதா, ஸ்ரீகாந்த், சங்கீதா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

குடும்ப உறவுகளைப் பற்றிய உணர்வுப்பூர்வமான படமாக வாரிசு உருவாகியுள்ளதாக, இதில் விஜயின் சகோதரராக நடித்துள்ள தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த் சமீபத்திய செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் தெரிவித்துள்ளார். இதனால், வாரிசு படம் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இன்னும் அதிகரித்துள்ளது.

இந்நிலையில், பலரும் எதிர்பார்த்துக் காத்திருந்த 'வாரிசு' படத்தின் டிரெய்லர் யூடியூபில் வெளியானது. ரசிகர்கள் எதிர்பார்த்தவண்ணம் அனல்தெறிக்கும் வசங்களுடன் டிரெய்லர் அமைந்துள்ளது.

டிரெய்லர் காட்சிகளின் படி தொழிலதிபரான சரத்குமாருக்கு ஸ்ரீகாந்த், ஷ்யாம், தளபதி விஜய் ஆகிய மூன்று மகன்கள் உள்ளனர். தொழில்போட்டி காரணமாக பிரகாஷ்ராஜ், சரத்குமார் குடும்பத்தைப் பகைத்துக்கொள்கிறார். அவருக்கு போட்டியாக நின்று விஜய் எவ்வாறு தொழிலில் பிரகாஷ்ராஜை எதிர்த்து ஜெயிக்கிறார் என்பது போன்று டிரெய்லர் காட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் டிரெய்லரில் இடம்பெற்ற முக்கியக் காட்சிகளும், விஜய் பேசும் முக்கிய வசனங்களும் உங்கள் பார்வைக்கு.

அம்மா... எல்லா இடமும் நம்ம இடம் தான்!

thalapathy vijay varisu tamil trailer released vamshi paidipally dil raju

பவர் சீட்-ல இருக்காது சார்.. அதுல வந்து ஒருத்தன் உக்காருரான்-ல… அவன் கிட்டதான் இருக்கும்…நம்ம பவர் அந்த ரகம்!

thalapathy vijay varisu tamil trailer released vamshi paidipally dil raju

மாமே… அன்போ, அடியோ… எனக்கு குடுக்கும்போது கொஞ்சம் யோசிச்சு கொடுக்கனும்… ஏன்னு சொல்லு? நீ எதக் கொடுத்தாலும் நான் அத ட்ரிபிள் ஆ திருப்பி கொடுப்பேன்.. உனக்கு தெரியாதுல்ல நம்மள பத்தி!

thalapathy vijay varisu tamil trailer released vamshi paidipally dil raju

Ground மொத்தம் உன் ஆளுங்க இருக்கலாம்… ஆனா Audience எல்லாரும் ஒருத்தன மட்டும் தான் பார்ப்பாங்க... கேள்விப்பட்ருக்கியா? ஆட்டநாயகன்!

thalapathy vijay varisu tamil trailer released vamshi paidipally dil raju

குடும்பம்-னா குறை இருக்கும்தான்… ஆனா நமக்கு இருக்குறது ஒரே குடும்பம் தான்!

thalapathy vijay varisu tamil trailer released vamshi paidipally dil rajuஇந்நிலையில் வாரிசு பட டிரெய்லர் யூடியூபில் அதிக பார்வைகளை வேகமாகப் பெற்றுவருகிறது. வாரிசு டிரெய்லரை ரசிகர்கள் கொண்டாடிவருகின்றனர். அதன் டிரெய்லர் உங்கள் பார்வைக்கு