உச்ச நட்சத்திர கதாநாயகராக தொடர்ந்து ரசிகர்களை மகிழ்வித்து வரும் நடிகர் அஜித்குமார் நடிப்பில் கடைசியாக வெளிவந்த நேர்கொண்ட பார்வை & வலிமை ஆகிய திரைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தொடர்ந்து மூன்றாவது முறையாக இயக்குனர் H.வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள திரைப்படம் துணிவு.

தயாரிப்பாளர் போனி கபூர் தயாரித்துள்ள துணிவு திரைப்படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவில், விஜய் வேலுகுட்டி படத்தொகுப்பு செய்ய, ஜிப்ரான் இசையமைக்கிறார். பிரபலமான நடிகை மஞ்சுவாரியர் அஜித் குமார் உடன் இணைந்து முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் ராஜதந்திரம் வீரா, சமுத்திரக்கனி, சிபி புவனச்சந்திரன், பிக் பாஸ் பாவணி, அமீர் மற்றும் மமதி சாரி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 

உதயநிதி ஸ்டாலின் அவர்களின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடும் துணிவு திரைப்படம் வருகிற ஜனவரியில் பொங்கல் வெளியீடாக உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது. அடுத்ததாக இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் புதிய AK62 திரைப்படத்தில் நடிக்க உள்ளார். லைகா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு ராக் ஸ்டார் இசை அமைப்பாளர் அனிருத் இசையமைக்கவுள்ளார். 

விரைவில் AK62 திரைப்படம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் AK62 திரைப்படத்திற்கு முன்பே அஜித் குமார் உடன் துணிவு படத்தில் இணைந்துள்ளது லைகா. ஆம்.. அஜித்குமாரின் துணிவு திரைப்படத்தின் வெளிநாட்டு ரிலீஸ் உரிமைகளை லைகா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளதாக தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 

We are extremely delighted 🤩 on bagging the overseas theatrical rights of #THUNIVU 💥 produced by @BoneyKapoor & @ZeeStudios_

It’s always a pleasure 😌 to associate with our dear #AjithKumar 😎#ThunivuPongal 💥 #NoGutsNoGlory 💪🏻✨ #HVinoth @BayViewProjOffl @mynameisraahul pic.twitter.com/eFzZnPLJlf

— Lyca Productions (@LycaProductions) November 19, 2022