அன்றும் இன்றும் என்றும் சூப்பர் ஸ்டாராக மக்களின் மனதில் குடியிருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்து தயாராகி வரும் திரைப்படம் ஜெயிலர். கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் படங்களைத் தொடர்ந்து இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் தயாராகும் ஜெயிலர் திரைப்படத்தில் ரஜினிகாந்த் அவர்களுடன் இணைந்து கன்னட சினிமாவின் முன்னணி நடிகர் சிவராஜ்குமார் மிரட்டலான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

படையப்பாவின் நீலாம்பரி கதாபாத்திரத்திற்கு பிறகு மீண்டும் சூப்பர் ஸ்டார் உடன் இணைந்து இருக்கும் ரம்யா கிருஷ்ணன் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க, வசந்த் ரவி, யோகி பாபு மற்றும் மலையாள நடிகர் விநாயகன் ஆகியோரும் ஜெயிலர் படத்தில் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். சன் பிக்சர்ஸ் சார்பில் கலாநிதி மாறன் அவர்கள் சூப்பர் ஸ்டாரின் ஜெயிலர் படத்தை தயாரிக்கிறார். 

பேட்ட & தர்பார் படங்களைத் தொடர்ந்து ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படத்திற்கும் ராக்ஸ்டார் இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். முன்னதாக நேற்று (நவம்பர் 17) ஜெயிலர் திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்திலிருந்து முக்கிய வேடத்தில் நடிக்கும் நடிகர் சிவ ராஜ்குமார் அவர்களின் புகைப்படத்தை படக்குழுவினர் வெளியிட்ட நிலையில், தற்போது சர்ப்ரைஸாக புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

பரபரப்பாக நடைபெற்று வரும் ஜெயிலர் திரைப்படத்தின் படப்பிடிப்பிற்கு இடையே ஜெயிலர் திரைப்படத்தின் புதிய மேக்கிங் வீடியோவை படக்குழுவினர் சர்ப்ரைஸாக வெளியிட்டுள்ளனர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மாஸான லுக்கில் இருக்கும் இந்த மேக்கிங் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது. அதிரடியான அந்த வீடியோ இதோ…
 

Here’s a glimpse of Superstar @rajinikanth from the sets of #Jailer 🤩

@Nelsondilpkumar @anirudhofficial pic.twitter.com/3EtAap0FUs

— Sun Pictures (@sunpictures) November 18, 2022