தமிழ்த் திரையுலகில் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக வலம் வரும் நடிகர் விஷால் இயக்குனராகவும் அவதாரம் எடுத்து இயக்கி நடிக்கவுள்ள துப்பறிவாளன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் லண்டனில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மார்க் ஆண்டனி திரைப்படத்தில் நடித்து வருகிறார். 

அதிரடியான கேங்ஸ்டர் படமாக தயாராகும் மார்க் ஆண்டனி திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மார்க் ஆண்டனி திரைப்படத்தில் நடிகர் SJ.சூர்யா ஜாக்கி பாண்டியன் எனும் மிரட்டலான வேடத்தில் நடித்து வருகிறார். இந்த வரிசையில் இயக்குனர் வினோத் குமார் இயக்கத்தில் மீண்டும் காவல்துறை அதிகாரியாக விஷால் நடித்துள்ள திரைப்படம் லத்தி. 

விஷாலுடன் இணைந்து சுனைனா கதாநாயகியாக நடிக்க, இளையதிலகம் பிரபு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். ராணா ப்ரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள, லத்தி திரைப்படத்திற்கு பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவில் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்நிலையில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் வெளிவர தயாராகி வரும் லத்தி திரைப்படம் வருகிற டிசம்பர் மாதம் கிறிஸ்மஸ் வெளியீடாக ரிலீஸ் ஆகும் என தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக சிலம்பரசன்.TRன் பத்து தல, விஜய் சேதுபதியின் DSP, விஷ்ணு விஷாலின் கட்டா குஸ்தி மற்றும் உலக சினிமா ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கும் அவதார் தி வே ஆஃப் வாட்டர் (Avatar 2) உள்ளிட்ட படங்கள் டிசம்பரில் வெளிவர இருக்கும் நிலையில் விஷாலின் லத்தி படமும் டிசம்பரில் ரிலீஸாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
 

#Laththi in Cinemas this Christmas 2022 !#LaththiCharge #Laatti #LaththiFrom22ndDec pic.twitter.com/toXvfmQHij

— Vishal (@VishalKOfficial) November 18, 2022