தென்னிந்திய திரையுலகில் பல கோடி ரசிகர்களின் அபிமானம் பெற்ற ஃபேவரட் ஹீரோவாக திகழும் தளபதி விஜய் தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ் சக்கரவர்த்தியாகவும் விளங்குகிறார். தமிழகத்தில் மட்டுமல்லாமல் கேரளா, ஆந்திரா, கர்நாடக பகுதிகளிலும் தளபதி விஜயின் திரைப்படங்களுக்கு ரசிகர்களிடையே எப்போதும் நல்ல வரவேற்பு உண்டு.

இதனிடையே முதன்முறையாக பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபல்லி இயக்கத்தில் தளபதி விஜய் நடித்த வாரிசு திரைப்படத்தை தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் தில் ராஜூ தனது ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன் சார்பில் தயாரித்துள்ளார். கடந்த 2017 ஆம் ஆண்டு தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் நிறைவேற்றிய தீர்மானத்தில் நேரடி தெலுங்கு திரைப்படங்களுக்கு மட்டுமே விழா காலங்களில் முன்னுரிமை வழங்கப்படும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து சில தினங்களுக்கு முன்பு இதனை நினைவுபடுத்தும் வகையில் மீண்டும் ஒரு அறிக்கையும் வெளியானது. எனவே தெலுங்கில் வாரிசு திரைப்படம் ரிலீஸாவதில் தற்போது நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இது குறித்து பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வரும் நிலையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தை வன்மையாக கண்டித்து இந்த நிலை மாறாவிட்டால் தெலுங்கு திரைப்படங்களை தமிழகத்தில் வெளியிட விடமாட்டோம் என எச்சரிக்கை விடுத்து அறிக்கை வெளியிட்டார்.

அதன் தொடர்ச்சியாக தற்போது முன்னணி இயக்குனர் லிங்குசாமி மற்றும் இயக்குனர் பேரரசு இருவரும் தளபதி விஜய் அவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளனர். திரைப்பட விழாவில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த இயக்குனர் லிங்குசாமி, “இந்த நிலை மாறாவிட்டால் வாரிசுக்கு முன் பின் என்ற நிலைமை ஏற்பட்டுவிடும் இதனை விரைவில் சமூகமாக பேசிட்டு தீர்வு காண வேண்டும்” என தெரிவிக்க, “இயக்குனர் தயாரிப்பாளர் இசையமைப்பாளர் என அனைவரும் தெலுங்கில் இருந்து வந்தவர்கள் தளபதி விஜய் அவர்கள் மட்டுமே தமிழிலிருந்து சென்ற நடிகர் எனவே இந்த நிலைப்பாடு தளபதி விஜய் அவர்களை கார்னர் செய்வது போல் இருக்கிறது என இயக்குனர் பேரரசு அவர்கள் தெரிவித்துள்ளார்.