தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திர நாயகர்களில் ஒருவராகவும் பல கோடி சினிமா ரசிகர்களின் இதயங்களில் நீங்கா இடம் பிடித்த ஃபேவரட் ஹீரோவாகவும் திகழும் அஜித்குமார் அவர்கள் அடுத்ததாக முதல் முறை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் AK62 திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். லைகா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் AK62 திரைப்படத்திற்கு ராக்ஸ்டார் இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார்.

முன்னதாக சதுரங்க வேட்டை & தீரன் அதிகாரம் ஒன்று என தனது முதல் இரண்டு திரைப்படங்களிலேயே தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த இயக்குனர் H.வினோத் தொடர்ந்து அடுத்தடுத்து அஜித்குமாருடன் இணைந்து மேற்கொண்ட பார்வை மற்றும் வலிமை ஆகிய திரைப்படங்களை இயக்கினார். இந்த வரிசையில் தொடர்ச்சியாக மூன்றாவது திரைப்படமாக அஜித் - H.வினோத் கூட்டணியில் தயாராகியுள்ள திரைப்படம் துணிவு. 

போனி கபூர் தயாரிப்பில் அஜித் குமாருடன் இணைந்து மஞ்சு வாரியர் கதாநாயகியாக நடிக்க சமுத்திரக்கனி, ராஜதந்திரம் வீரா, சிபி புவனச்சந்திரன், பிக் பாஸ் அமீர், பாவணி, மமதி சாரி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். நீரவ் ஷா ஒளிப்பதிவில் அஜித்குமார் நடித்திருக்கும் துணிவு திரைப்படத்திற்கு விஜய் வேலுகுட்டி படத்தொகுப்பு செய்ய, ஜிப்ரான் இசையமைக்கிறார். 

ரெட் ஜெயண்ட் மூவீஸ் வெளியிடும் துணிவு திரைப்படம் அடுத்த ஆண்டு(2023) ஜனவரி 12-ம் தேதி பொங்கல் வெளியீடாக ரிலீஸாகவுள்ளது. இந்நிலையில் இசையமைப்பாளர் ஜிப்ரான் தனது திரைப்பயணத்தில் 50 திரைப்படங்களை நிறைவு செய்து புதிய மைல் கல்லை எட்டியுள்ளார். அஜித் குமாரின் துணிவு திரைப்படம் ஜிப்ரானின் 50வது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை ஜிப்ரான் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார். ஜிப்ரானின் அந்த பதிவு இதோ…
 

. @ZeeStudios_ @zeemusicsouth @BoneyKapoor @BayViewProjOffl Thnk u fr making my day🙏

And happy to inform tat #Thunivu is extra special as it’s my 50th Movie🙏🏻

Feeling blessed,filled wit gratitude for evryone who has been part, #Ak sir & #HVinoth #ChillaChilla #Ghibran50 https://t.co/Qq8Y2IS3Pu

— Ghibran (@GhibranOfficial) December 8, 2022