தனக்கே உரித்தான ஸ்டைலில் தொடர்ந்து தரமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து ரசிகர்களின் இதயங்களில் இடம் பிடித்த நடிகை அஞ்சலி நடிப்பில் உருவான ஜான்சி வெப் சீரிஸ் கடந்த அக்டோபர் மாதம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், அடுத்ததாக பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் கதாநாயகனாக நடிக்கும் RC15 திரைப்படத்தில் மிக முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.

இதனிடையே அஞ்சலி நடிப்பில் அடுத்த புதிய வெப்சீரிஸாக தயாராகியுள்ளது FALL. இயக்குனர் சித்தார்த் ராமசாமி இயக்கத்தில் அஞ்சலியுடன் இணைந்து சந்தோஷ் பிரதாப், பூர்ணிமா பாக்யராஜ், SP.சரண், நமிதா கிருஷ்ணமூர்த்தி, சோனியா அகர்வால், தலைவாசல் விஜய் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள FALL வரும் டிசம்பர்9-ம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் ரிலீஸ் ஆகிறது.

FALL வெப் சீரிஸுக்கு இயக்குனர் சித்தார்த் ராமசாமியை ஒளிப்பதிவு செய்ய கிஷான்.C.செழியன் படத்தொகுப்பு செய்துள்ளார். இந்நிலையில் நமது கலாட்டா சேனலுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் தனது திரைப்பயணம் குறித்தும் FALL வெப் சீரிஸ் குறித்தும் பல சுவாரசிய தகவல்களை அஞ்சலி பகிர்ந்து கொண்டார். அந்த வகையில் TOXIC RELATIONSHIP குறித்தும் பேசிய அஞ்சலி சிறப்பாக பதிலளித்தார். 

“நமது CAREER-அ அல்லது RELATIONSHIP-அ என்ற கட்டத்தில் நம்மை நிறுத்தும் எந்த RELATIONSHIP-ம் TOXIC RELATIONSHIP தான் நாம் எதற்காக ஒன்றை தேர்ந்தெடுக்க வேண்டும் நம்மால் இரண்டுமே செய்ய முடியும் பட்சத்தில் நாம் விரும்பியதை செய்யலாம். ஒரு ஆண் திருமணத்திற்கு பிறகும் அவனுடைய வேலையை செய்வதற்காக வெளியில் சென்று வரும் பொழுது அதை பெண்ணும் செய்யலாமே இப்போதெல்லாம் நிறைய பேர் திருமணத்திற்கு பிறகு குழந்தைகள் பெற்ற பிறகும் நடிக்கிறார்களே எனவே நீங்கள் விரும்பியதை செய்ய வேண்டும் என்றால் செய்யலாம். வேண்டாம் என்றால் வேண்டாம் அதை நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும்” என நடிகை அஞ்சலி பதிலளித்துள்ளார். அஞ்சலியின் அந்த முழு பேட்டியை கீழே உள்ள லிங்கில் காணலாம்.