தமிழ் திரை உலகின் உச்ச நட்சத்திர நடிகையாகவும் இந்திய சினிமாவின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராகவும் வலம் வரும் நடிகை நயன்தாரா நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் கோல்ட். பிரேமம் படத்தின் இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் பிரித்விராஜுடன் இணைந்து மலையாளத்தில் நயன்தாரா நடித்த கோல்ட் திரைப்படம் சில தினங்களுக்கு முன் ரிலீஸாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றது. 

இதனையடுத்து முதல் முறை பாலிவுட்டில் கதாநாயகியாக களமிறங்கும் நயன்தாரா இயக்குனர் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் கதாநாயகனாக நடிக்கும் ஜவான் திரைப்படத்தில் நடிக்கிறார். இந்த வரிசையில் முன்னதாக நயன்தாரா நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட்டான ஹாரர் திரைப்படமான மாயா படத்தின் இயக்குனர் அஸ்வின் சரவணன் இயக்கத்தில் மீண்டும் அடுத்த ஹாரர் த்ரில்லர் படமாக தயாராகியுள்ள கனெக்ட் திரைப்படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடித்துள்ளார். 

நயன்தாராவுடன் சத்யராஜ், அனுப்பம் கெர் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கும் கனெக்ட் படத்தில் வினய் ராய் மற்றும் ஹனியா நஃபீஸா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ரவுடி பிக்சர்ஸ் சார்பில் இயக்குனர் விக்னேஷ் சிவன் தயாரிக்க, மணிகண்டன் கிருஷ்ணமாச்சாரி ஒளிப்பதிவில் கனெக்ட் படத்திற்கு பிரித்வி சந்திரசேகர் இசையமைக்கிறார். 

இடைவேளை இல்லாத முதல் தமிழ் திரைப்படமாக தொடர்ந்து 99 நிமிடங்கள் ஓடக்கூடிய ஹாரர் த்ரில்லர் படமாக வெளிவரும் நயன்தாராவின் கனெக்ட் படம் வருகிற டிசம்பர் 22-ம் தேதி ரிலீஸாகவுள்ளது. இந்நிலையில் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்த நயன்தாராவின் கனெக்ட் திரைப்படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியானது. மிரட்டலான அந்த ட்ரெய்லர் இதோ…