தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திர நாயகராக ஜொலிக்கும் தளபதி விஜய் மாஸ்டர் திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் தளபதி67 திரைப்படத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கிறார். மாநகரம், கைதி, மாஸ்டர் & விக்ரம் என தொடர்ச்சியாக பிளாக்பஸ்டர் படங்களை கொடுத்து வரும் இயக்குனர் லோகேஷ் கனகராஜின் அடுத்த படமாக தயாராகும் தளபதி 67 திரைப்படம் இந்திய திரையுலகில் எக்கச்சக்கமான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த டிசம்பர் 5ஆம் தேதி தளபதி 67 திரைப்படத்தின் பூஜை நடைபெற்ற நிலையில், விரைவில் அடுத்தடுத்த அதிரடியான அப்டேட்களும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே முன்னணி தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜுவின் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க, இயக்குனர் வம்சி பைடிபல்லி இயக்கத்தில் முதல் முறையாக தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் தளபதி விஜய் நடித்து வரும் திரைப்படம் வாரிசு.

தளபதி விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்க, பிரகாஷ்ராஜ், சரத்குமார், ஷ்யாம், யோகிபாபு, பிரபு, ஜெயசுதா, ஸ்ரீகாந்த், குஷ்பூ, சங்கீதா க்ரிஷ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் வாரிசு படத்தில்  நடிக்கின்றனர். கார்த்திக் பழனி ஒளிப்பதிவில், பிரவீன்.KL படத்தொகுப்பு செய்யும் வாரிசு திரைப்படத்திற்கு தமன்.S இசையமைக்கிறார்.

வாரிசு திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் அடுத்த ஆண்டு (2023) பொங்கல் வெளியீடாக ஜனவரி 12ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகிறது. இந்நிலையில் UK-வில் ரிலீஸ் ஆகும் வாரிசு திரைப்படத்திற்கான டிக்கெட் முன்பதிவு நான்கு வாரங்களுக்கு முன்பே தொடங்குவதாக அகிம்சா என்டர்டைன்மென்ட் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. 

சினி வேர்ல்ட் சினிமாஸ் உட்பட UK-வின் முன்னணி திரையரங்குகளில் வாரிசு திரைப்படத்தின் முன்பதிவு அடுத்த வாரத்தில் இருந்து தொடங்கவுள்ளது. UK-வை பொருத்தவரை முதல் தமிழ்த் திரைப்படமாக வாரிசு திரைப்படத்திற்கு தான் வாரங்களுக்கு முன்பே டிக்கெட்டுகள் முன்பதிவு தொடங்குவதாகவும் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 

For the first time for a Tamil film in UK, we’re opening ticket bookings 4 weeks in advance! #Varisu ticket sales will start next week at @cineworld (& more chains to follow) 🤯🧨

IDHU THIRUPI KUDUKKUM NERAM MAAME.. #ThalapathyVijay 🎵🔥

UK release 👉 #AhimsaEntertainment pic.twitter.com/Hv1IWlbRS0

— Ahimsa Entertainment (@ahimsafilms) December 7, 2022