உலகநாடு திரைப்படங்களின் TOP 10 வரிசையில் துணிவு திரைப்படம்.. அதிரடியான சாதனையை கொண்டாடும் அஜித் ரசிகர்கள் – முழு விவரம் இதோ..

பிரபல ஒடிடி தளத்தில் சாதனை படைத்த அஜித்தின் துணிவு திரைப்படம் - Ajith Thunivu movie Top 3 position in Netflix | Galatta

இந்த ஆண்டு மிகப்பெரிய எதிர்பார்ப்பில் வெளியாகி பாக்ஸ் ஆபிஸ் ஹிட் அடித்த திரைப்படம் ‘துணிவு’ போனி கபூர் தயாரிப்பில் எச் வினோத் இயக்கத்தில் அஜித் குமார் நடித்த துணிவு திரைப்படம் கடந்த ஜனவரி   11 ம் தேதி ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட பொங்கல் வெளியீடாக வெளியானது. ரசிகர்களின் ஆரவாரத்துடன் கோலாகல கொண்டாட்டத்துடன் உலகமெங்கும் துணிவு திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது மேலும் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது துணிவு திரைப்படம். வங்கி கொள்ளையை மையப்படுத்தி வெளியான இப்படத்தில் அஜித் உடன் இணைந்து சமுத்திரக்கனி, அமீர், பாவனி, சிபி சந்திரன், மோகன சுந்தரம், குக் வித் கோமாளி தர்ஷன், ஜான் கொகேன் , மகனாதி சங்கர் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.  மேலும் இப்படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய விஜய் வேலுக்குட்டி படத்தொகுப்பு செய்துள்ளார். படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

ரசிகர்களின் ஆரவார வரவேற்பை பெற்ற துணிவு திரைப்படம் கடந்த பிப்ரவரி 8 ம் தேதி பிரபல ஓடிடி நிறுவனமான நெட்பிளிக்ஸ் ல் வெளியானது. இதனையடுத்து திரையரங்கை போல டிஜிட்டல் தளத்திலும் அமோகமாக வரவேற்பு பெற்று ஓடியது. இதனால் அஜித் ரசிகர்கள் உற்சாகத்தில் இருந்தனர். திரையரங்கை தாண்டி ஒடிடியிலும் தற்போது துணிவு திரைப்படம் சாதனை படைத்து வருகிறது.

dhanush vaathi movie one life song lyrical video with special glimpse releasedஅதன்படி உலகளவில் ஒரு வார கணக்கின் அடிப்படையில் அதிகளவில் பார்க்கப்பட்ட ஆங்கிலம் அல்லாத பிற மொழி படங்களின் டாப் 10 பட்டியலை நெட்பிளிக்ஸ் நிறுவனம் வெளியிட்டது. அதில் அஜித் நடித்து துணிவு திரைப்படம் மூன்றாவது இடத்தில் உள்ளது. மேலும் துணிவு திரைப்படத்தின் இந்தி டப் படம் அந்த பட்டியலில்  நான்காவது இடத்தில் வகித்துள்ளது. இதன்மூலம் நெட்ப்ளிக்ஸின் டாப் 10 பட்டியலில் 2 இடங்களை பிடித்த முதல் தமிழ் படம் என்ற பெருமையை பெற்றுள்ளது துணிவு திரைப்படம்.

This is AK's game🔥💥 #ThunivuOnNetflix pic.twitter.com/tnVa6fCSgW

— Netflix India South (@Netflix_INSouth) February 15, 2023

குறிப்பாக மூன்றாவது இடத்தை பிடித்த தமிழ் துணிவு திரைப்படம் ஒரு வாரத்தில் 40 லட்சத்து 50 ஆயிரம் மணிநேரம் ஸ்டிரீம் செய்யப்பட்டு உள்ளது. மேலும் இந்தியா, பங்களாதேஷ், பஹ்ரின், மலேசியா,மால தீவுகள், பாகிஸ்தான், கத்தார், சிங்கப்பூர், இலங்கை போன்ற 13 உலக நாடுகளில் நெட்ப்ளிக்ஸ் தளத்தில் துணிவு திரைப்படம் டாப் 10 வரிசையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  

It’s a CHILLA DAY because...

Now #Thunivu is among the Top-3 most watched films globally in the non-English category last week on Netflix! 🥳🔥 pic.twitter.com/MboFIixsxq

— Zee Studios South (@zeestudiossouth) February 15, 2023

இந்த சாதனையையடுத்து திரையரங்கை தொடர்ந்து ஓடிடியிலும்அஜித்தின் துணிவு படத்துக்கு அமோக வரவேற்பு கிடைத்து வருவதால் அஜித் ரசிகர்கள் உற்சாகத்துடன் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். 

#Thunivu is also on TOP 10 on Netflix across 13 countries globally - India, Bahrain, Bangladesh, Malaysia, Maldives, Mauritius, Nigeria, Oman, Pakistan, Qatar, Singapore, Sri Lanka and United Arab Emirates.

— Zee Studios South (@zeestudiossouth) February 15, 2023

 “இதனால தான் நான் Bigg boss க்கு வரல”.. ரச்சிதா Fans Meet ல் மும்தாஜ்.. -  Emotional வீடியோ இதோ..
சினிமா

“இதனால தான் நான் Bigg boss க்கு வரல”.. ரச்சிதா Fans Meet ல் மும்தாஜ்.. - Emotional வீடியோ இதோ..

பிரிந்த குடும்பங்களை இணைக்கும் கவினின் ‘டாடா’ திரைப்படம்.. நெகிழ்ச்சி சம்பவம்.. -  வைரலாகும் இயக்குனரின் பதிவு இதோ..
சினிமா

பிரிந்த குடும்பங்களை இணைக்கும் கவினின் ‘டாடா’ திரைப்படம்.. நெகிழ்ச்சி சம்பவம்.. - வைரலாகும் இயக்குனரின் பதிவு இதோ..

“நீங்க லைலா மஜ்னு வாழ்க்கைலாம் வாழ போறது இல்ல”.. பெண்கள் எதிர்காலம் குறித்த கேள்விக்கு செல்வராகவனின் அதிரடியான பதில்.. -  சுவாரஸ்யமான வீடியோ இதோ..
சினிமா

“நீங்க லைலா மஜ்னு வாழ்க்கைலாம் வாழ போறது இல்ல”.. பெண்கள் எதிர்காலம் குறித்த கேள்விக்கு செல்வராகவனின் அதிரடியான பதில்.. - சுவாரஸ்யமான வீடியோ இதோ..