“கண்டிப்பா Sex Education தேவை..” இயக்குனர் செல்வராகவன் பகிர்ந்து கொண்ட சுவாரஸ்யமான தகவல்கள்.. - அட்டகாசமான வைரல் வீடியோ இதோ..

இயக்குனர் செல்வராகவன் பகிர்ந்த சுவாரஸ்யமான தகவல்கள் கொண்ட வீடியோ இதோ - Director Selvaraghavan about Sex Education | Galatta

தமிழ் சினிமாவில் மிக முக்கியமான இயக்குனர் செல்வராகவன். தன் திரைப்பயணத்தை அதிரடியாக ‘காதல் கொண்டேன்’ திரைப்படத்தின் வெற்றியுடன் தொடங்கி பின் தொடர்ந்து 7ஜி ரெயின்போ காலனி, புதுபேட்டை, மயக்கம் என்ன, ஆயிரத்தில் ஒருவன் என்று தொடர் வெற்றி படங்களை கொடுத்து தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனரானார் செல்வராகவன். நீண்ட இடைவெளிக்கு பின் ‘நானே வருவேன்’ திரைப்படத்தை கடந்த ஆண்டு கொடுத்து மீண்டும் பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்தார் செல்வராகவன்.

இயக்குனராகவும் எழுத்தாளராகவும் புகழ்பெற்ற செல்வராகவன் சமீபத்தில் நிறைய படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.   அதன்படி ‘சாணி காகிதம்’, ‘பீஸ்ட்’ திரைப்படங்களில் நடித்து பாராட்டுகளை பெற்றார். தற்போது இயக்குனர் மோகன் ஜீ இயக்ககத்தில் செல்வராகவன் நடித்து வரும்  ‘பகாசூரன்’ திரைப்படம் வரும் பிப்ரவரி 17 ம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.  

இந்நிலையில் பகாசூரன் திரைப்படம் குறித்தும் அவரது திரைப்பயணம் குறித்தும் பல சுவாரஸ்யமான தகவல்களை நமது கலாட்டா தமிழ் சிறப்பு பேட்டியில் கலந்து கொண்டு பகிர்ந்தார் இயக்குனர் செல்வராகவன்.

இதில் பாலின கல்வி எந்தளவு தற்போது முக்கியமாக உள்ளது? என்ற கேள்விக்கு செல்வராகவன், வாழ்க்கையில் எல்லா விஷயங்கள் போல தான் இந்த விஷயமும். அவர்கள் அவர்களாகவே அதை உணர்வார்கள். யாரும் அதை தடுக்க முடியாது. யாரும் வளரும் போது எப்படி னு கேட்கறது இல்ல. நீங்களா அனுபவிச்சு தெரிஞ்சிக்குறது தான் ரொம்ப நல்லது. வாழ்க்கையில அதுவும் ஒரு முக்கியமான பாடம் தான். அதுக்கு இவ்வளவு அடைமொழிகள் தேவையானு எனக்கு தெரியாது. அதனால் வாழ்க்கை போறப்போக்கில் அதை கற்பதற்கான சுதந்திரத்தை கொடுங்கள். அவர்களாக அதை கற்றுக் கொள்வார்கள். செக்ஸ் ன்ற விஷயம் கண்டிப்பா கல்வி பட்டியல் ல சேர்க்கனும்.. எவ்வளவோ நூற்றாண்டுகளாக அந்த விஷயத்தை கட்டுபடுத்தி தானே வெச்சிருந்தார்கள். எதையும் தெரிய கூடாது.. தெரிய கூடாது னு சொல்லி என்ன சாதிச்சோம்.  நல்ல சமூகம் என்பது எல்லா விஷயத்தையும் அக்கறையுடன் எடுத்து பார்க்க வேண்டும். அவங்களோட முடிவு அவங்க கையில். யாரும் எதுவும் சொல்ல தேவையில்லை. எல்லாரும் இந்த காலத்தில் புத்திசாலியாக தெளிவாக இருக்கிறார்கள். அவங்களுக்கு என்ன செய்யனும்னு தெரியும். அவர்களை தனியாக விடுங்கள் இதுதான் என் எண்ணவோட்டம்” என்றார் இயக்குனர் செல்வராகவன்.

மேலும் இயக்குனர் செல்வராகவன் நமது கலாட்டா மீடியா பேட்டியில் பல சுவாரஸ்யமான தகவலை பகிர்ந்து கொண்ட முழு வீடியோ இதோ..

“நீங்க லைலா மஜ்னு வாழ்க்கைலாம் வாழ போறது இல்ல”.. பெண்கள் எதிர்காலம் குறித்த கேள்விக்கு செல்வராகவனின் அதிரடியான பதில்.. -  சுவாரஸ்யமான வீடியோ இதோ..
சினிமா

“நீங்க லைலா மஜ்னு வாழ்க்கைலாம் வாழ போறது இல்ல”.. பெண்கள் எதிர்காலம் குறித்த கேள்விக்கு செல்வராகவனின் அதிரடியான பதில்.. - சுவாரஸ்யமான வீடியோ இதோ..

Valentine's Day Special.. ரசிகர்களின் மனம் கவர்ந்த 14 தமிழ் சினிமா காதல் ஜோடிகள்..
சினிமா ஸ்பெஷல்ஸ்

Valentine's Day Special.. ரசிகர்களின் மனம் கவர்ந்த 14 தமிழ் சினிமா காதல் ஜோடிகள்..

‘தம்பி உடையான் படைக்கு அஞ்சான்’.. தனுஷிடம் Advice கேட்ட செல்வராகவன்.. - சுவாரஸ்யமான வீடியோ உள்ளே..
சினிமா

‘தம்பி உடையான் படைக்கு அஞ்சான்’.. தனுஷிடம் Advice கேட்ட செல்வராகவன்.. - சுவாரஸ்யமான வீடியோ உள்ளே..