“நீங்க லைலா மஜ்னு வாழ்க்கைலாம் வாழ போறது இல்ல”.. பெண்கள் எதிர்காலம் குறித்த கேள்விக்கு செல்வராகவனின் அதிரடியான பதில்.. - சுவாரஸ்யமான வீடியோ இதோ..

பெண்களின் எதிர்கால திட்டம் குறித்து இயக்குனர் செல்வராகவன் - Director Selvaraghavan about women empowerment | Galatta

2000 த்தின் ஆரம்பத்தில் மிக முக்கியமான திரைப்படங்களை கொடுத்து ரசிகர்களின் கவனத்தை பெற்றவர் செல்வராகவன். தன் புத்துணர்ச்சியான சிந்தனையை படமாக்கி பார்வையாளர்களை கொண்டாட வைக்கும் இயக்குனர்களில் ஒருவர் செல்வராகவன்.  காதலை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படங்கள் காலம் கடந்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தது. அதற்காகவே இவருக்கென்ற ஒரு தனி ரசிகர் கூட்டமே உள்ளது.கடந்த ஆண்டு இவரது இயக்கத்தில் வெளியான ‘நானே வருவேன் திரைப்படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது, இயக்குனராக மட்டுமல்லாமல் செல்வராகவன் பல படங்களில் நடிகராகவும் அசத்தி வருகிறார். அதன்படி தற்போது செல்வராகவன் நடிப்பில் மோகன் ஜீ இயக்ககத்தில் ‘பகாசூரன் திரைப்படம் வரும் பிப்ரவரி 17 ம் தேதி வெளியாகவுள்ளது.

இந்நிலையில் படம் குறித்தும் அவரது திரைப்பயணம் குறித்தும் பல சுவாரஸ்யமான தகவல்களை நமது கலாட்டா தமிழ் சிறப்பு பேட்டியில் கலந்து கொண்டு செல்வராகவன் பகிர்ந்து கொண்டார். இதில் பெண்கள் தாங்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய சரியான பாதை என்ன? தொழில் சார்ந்த வாழ்க்கையா? திருமண வாழ்க்கையா? என்ற கேள்விக்கு செல்வராகவன்,

"கண்டிப்பா பெண் தங்களோட தொழில் சார்ந்த லட்சியத்தை தான் கடைபிடிக்க வேண்டும். அதற்கு தடையா எது வந்தாலும் தூக்கி போட்டு போயிடனும். இதுதான் நிஜம். பாக்கியெல்லாம் கூட வெச்சிக்குறதுதான்.. அதனால் நீங்க என்ன செஞ்சா சந்தோஷமா இருப்பீங்களோ அதை செய்யுங்கள்.. நீங்க ஓய்ஞ்சி உட்காரும் போது உங்களோட தொழில்  தான் முன்னாடி வந்து உதவும்.. காதல், கல்யாணம் அதெல்லாம் பண்ணிட்டு நீங்க ஒண்ணும் லைலா மஜ்னு வாழ்க்கையெல்லாம் வாழ போறது இல்ல.. அதனால நல்ல வேலைய தேர்ந்தெடுத்து அதுக்கூட பயணியுங்க. உங்க லட்சியத்தோடு பயணியுங்கள்" என்றார்.‌ மேலும் "தொழில் சார்ந்த பயணம் தான் உங்களுக்கான அடையாளத்தை கொடுக்கும். நாளைக்கு உங்களை அப்படிதான் மற்றவர் அடையாளம் காணுவார்கள். யாரும் உங்களுக்கு 'நல்ல மனைவி' என்று பட்டம் கொடுக்க அவசியம் இல்ல.. கொடுக்க தேவையும் இல்ல.. அதனால உங்களுக்கான அடையாளத்தை உருவாக்குங்க.." என்றார் இயக்குனர் செல்வராகவன்.

மேலும் இயக்குனர் செல்வராகவன் நமது கலாட்டா மீடியா பேட்டியில் பல சுவாரஸ்யமான தகவலை பகிர்ந்து கொண்ட முழு வீடியோ இதோ..

‘அயலி’ தொடரை பார்த்து இயக்குனரை நேரில் அழைத்து பாராட்டிய உதயநிதி ஸ்டாலின்..  - வைரலாகும் பதிவு இதோ..
சினிமா

‘அயலி’ தொடரை பார்த்து இயக்குனரை நேரில் அழைத்து பாராட்டிய உதயநிதி ஸ்டாலின்.. - வைரலாகும் பதிவு இதோ..

மீண்டும் Beast mode ல் சூர்யா.. உற்சாகத்தில் ரசிகர்கள்.. - சூர்யா 42 படத்திற்காக வெறித்தனமான workout.. வைரல் வீடியோ இதோ..
சினிமா

மீண்டும் Beast mode ல் சூர்யா.. உற்சாகத்தில் ரசிகர்கள்.. - சூர்யா 42 படத்திற்காக வெறித்தனமான workout.. வைரல் வீடியோ இதோ..

உலகநாயகன் கமல் ஹாசனை சந்தித்த ‘டாடா’ படக்குழுவினர்.. நெகிழ்ச்சியில் கவின்.. – வைரலாகும் புகைப்படங்கள் இதோ..
சினிமா

உலகநாயகன் கமல் ஹாசனை சந்தித்த ‘டாடா’ படக்குழுவினர்.. நெகிழ்ச்சியில் கவின்.. – வைரலாகும் புகைப்படங்கள் இதோ..