“பொண்ணுக்கு அப்பனா இருக்க பயமா இருக்கு” பெண் குழந்தை வளர்ப்பு குறித்து இயக்குனர் செல்வராகவன்.. - வைரலாகும் வீடியோ இதோ..

பெண் குழந்தைகள் வளர்ப்பு குறித்து செல்வராகவன் - Director Selvaraghavan about safety of girl child | Galatta

பொதுவாக ஒரு திரைப்படம் வெளியாகி அப்போதே கொண்டாடப்படுவது வழக்கம். ஆனால் ஒரு திரைப்படம் வெளியாகி 10 ஆண்டுகள் கழித்து கொண்டாடப்படுவது ஆச்சர்யமான நிகழ்வு தான். அத்தகைய ஆச்சரியமான நிகழ்வில் முன்னணியானவர் இயக்குனர் செல்வராகவன். 2000 ஆண்டுகளில் பல பிளாக்பஸ்டர் திரைப்படங்களை கொடுத்தவர். நிறைய வித்யாசமான திரைப்படங்களை ரசிகர்களுக்கு கொடுத்து ரசிகர்களால் ஜீனியஸ் என்றழைக்கப்படும் செல்வராகவன். பொதுவாக ஒரு  திரைப்படம் எடுப்பதற்கு நிறைய நேரம் எடுத்து கொள்வார். என்ன இடைவெளி விட்டாலும் அவரது படத்திற்கு தனி ரசிகர் கூட்டம் அலைமோதும். அந்த வகையில் கடந்த ஆண்டு இவரது இயக்கத்தில் நீண்ட நாள் கழித்து வெளியான திரைப்படம் ‘நானே வருவேன்’. படம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை செல்வராகவனுக்கு கொடுத்தது. மக்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தையே கொடுத்தது மெய்சிலிர்க்க வைக்கும் இவரது கற்பனை திறனுக்கு இன்றும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இவரை பின்பற்றி வருகிறது.  தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வந்த செல்வராகவன் சமீபத்தில் நிறைய படங்களில் நடித்தும் வருகிறார். முன்னதாக இவர் நடிப்பில் வெளியான, பீஸ்ட். சாணி காகிதம்,  நானே வருவேன் திரைப்படங்களில் இவரது நடிப்பு கவனம் பெற்றது. அதன் படி செல்வராகவன் தற்போது  நடித்து வெளியாகவிருக்கும் திரைப்படம் ‘பகாசூரன்’.

வரும் பிப்ரவரி 17 ம் தேதி வெளியாகவிருக்கும் பகாசூரன் திரைப்படம் குறித்தும் படத்தில் நடிப்பது குறித்தும் மேலும் அவரது வரும் கால திரைப்படங்கள், கடந்து வந்த திரைப்பயணம் குறித்து பல சுவாரஸ்யமான தகவல்களை நமது கலாட்டா தமிழ் சிறப்பு பேட்டியில் கலந்து கொண்டு  பகிர்ந்து கொண்டார். இதில் பெண் குழந்தைக்கு பாதுகாப்பான சமூகம் தற்போது இல்லை. ஒரு தந்தையாக அதை எப்படி பார்கிறீர்கள் என்ற கேள்விக்கு,

"பெண் குழந்தைகளோட அப்பா என்றாலே நிறைய பயம் இருக்கு. பயத்தோட தான் இருக்க வேண்டியதா இருக்கு.. ஆனால் இப்போ குழந்தைகள் வளர்ப்பு என்றாலே பயம் தான். ஆண், பெண் என்று வித்யாசம் எல்லாம் இல்லை.. என்ன பொறுத்தவரை அவளுடைய உலகம் அவளுக்கு விருப்பப்பட்ட உலகமா அமையனும். அவளுக்கு பிடிச்ச விஷயங்களா நடக்கனும். இப்பவும் எங்க வீட்ல என் மகள் தான் Boss. ரொம்ப அற்புதமான உறவு. அந்த Magical Life அ வாழ்ந்து பார்த்தாதான் தெரியும்.நானும் நிறைய விஷயங்கள் என் வாழ்க்கையில நடந்துடுச்சு அதலாம் தாண்டி இருக்கறதுலே அழகான விஷயம் அப்பா - மகள் உறவு தான்" என்றார். மேலும் அதனை தொடர்ந்து பெண்களுக்கு நடக்கும் அத்துமீல்றகளிலிருந்து அவர்கள் மீண்டு வர என்ன செய்ய வேண்டும் என்ற கேள்விக்கு, “ஒவ்வொரு நகர்விலும்  உலகம் வேறு மாதிரி தான் இருக்கும். பிரச்சனை இருக்கதான் செய்யும். அதனால் எதுவா இருந்தாலும் அதை எதிர் கொள்ளனும். அதிலிருந்து வெளிய வரனும். சுதந்திரமா இருக்கனும். முடிவெடுக்குறது உங்க கையில தான் இருக்கு.. அதனால் எதுவா இருந்தாலும் எதிர்கொள்ளுங்கள்.. வாழ்க்கை என்றாலே பிரச்சனையை எதிர்கொள்வதுதான்"  என்றார் இயக்குனர் செல்வராகவன்.

மேலும் இயக்குனர் செல்வராகவன் பல சுவாரஸ்யமான தகவலை பகிர்ந்து கொண்ட முழு வீடியோ இதோ..

 

வாழ்கைல மறக்கமாட்டேன்... தனுஷின் பொல்லாதவன் பட எங்கேயும் எப்போதும் பாடலின் சுவாரசியங்கள் பகிர்ந்த யோகிB! வீடியோ இதோ
சினிமா

வாழ்கைல மறக்கமாட்டேன்... தனுஷின் பொல்லாதவன் பட எங்கேயும் எப்போதும் பாடலின் சுவாரசியங்கள் பகிர்ந்த யோகிB! வீடியோ இதோ

பாபா ரீ ரிலீஸ்.. படக்குழுவினரை சந்தித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.. காரணம் இதுதான்.. - ரசிகர்களால் வைரலாகும் புகைப்படங்கள் இதோ..
சினிமா

பாபா ரீ ரிலீஸ்.. படக்குழுவினரை சந்தித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.. காரணம் இதுதான்.. - ரசிகர்களால் வைரலாகும் புகைப்படங்கள் இதோ..

ஷூட்டிங் ஸ்பாட்டில் தளபதி விஜய்.. - சுவாரஸ்யமான தகவலை பகிர்ந்த பிரபல Rap Singer யோகி பி .. வீடியோ உள்ளே..
சினிமா

ஷூட்டிங் ஸ்பாட்டில் தளபதி விஜய்.. - சுவாரஸ்யமான தகவலை பகிர்ந்த பிரபல Rap Singer யோகி பி .. வீடியோ உள்ளே..