பிரிந்த குடும்பங்களை இணைக்கும் கவினின் ‘டாடா’ திரைப்படம்.. நெகிழ்ச்சி சம்பவம்.. - வைரலாகும் இயக்குனரின் பதிவு இதோ..

டாடா படத்திற்கு வந்த நெகிழ்ச்சியான விமர்சனம் வைரல் பதிவு இதோ - Director Shares best feedback for dada movie | Galatta

கடந்த பிப்ரவரி 10 ம் தேதி தமிழகமெங்கும் கவின் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘டாடா தந்தை பாசத்தை மையமாக கொண்டு இயக்குனர் கணேஷ் கே பாபு இப்படத்தை இயக்கியுள்ளார். ஒலிம்பியா மூவீஸ் சார்பில் S.அம்பேத் குமார் தயாரித்துள்ள இப்படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் தமிழமெங்கு வெளியிட்டது. எதிர்பார்த்தபடி திரைப்படம் பெரும்பாலான பகுதிகளில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. கவின் நடிப்பில் முதல் முதலில் திரையரங்குகளில் வெளியான திரைப்படம் என்பதால் கவின் ரசிகர்கள் இப்படத்தை கொண்டாடி வருகின்றனர்.  

கல்லூரி வாலிபனாக வரும் கவின் குழந்தைக்கு தகப்பனாக சந்திக்கும் பிரச்சனைகளை நகைச்சுவையுடன் எமோஷனல் கதையம்சத்துடன் டாடா திரைப்படம் வெளிவந்துள்ளது. இப்படத்தில் கவினுடன் இணைந்து அபர்ணா தாஸ், பாக்யராஜ், விடிவி கணேஷ், பிரதீப் ஆண்டனி, ஹரிஷ், ஐஸ்வர்யா பாஸ்கரன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஜென் மார்டின் இசையில் முன்னதாக பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் எழில் அரசு.K ஒளிப்பதிவு செய்ய கதிரேஷ் அழகேசன் படத்தொகுப்பு செய்துள்ளார்.

தமிழகமெங்கும் சிறப்பான ஓபனிங்கை பெற்ற டாடா திரைப்படத்தை ரசிகர்கள் புகழ்ந்து வரும் நிலையில் ரசிகர்களை நெகிழ வைக்கும் சம்பவத்தை பகிர்ந்துள்ளார் டாடா படத்தின் இயக்குனர் கணேஷ் பாபு,தன்னுடைய கல்லூரி தோழி ஒருவர் டாடா படத்தை பார்த்து இயக்குனருக்கு சில  வார்த்தைகளை பகிர்ந்துள்ளார்.

அதில், “படம் பற்றி ஒரு வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால் ‘பிரமாதம்’. வேறு வார்த்தைகளில் விவரிக்க தேவையில்லை. ஒரு தாயாக என் மகளை தனியாக வளர்த்து வருகிறேன். நான் டாடா படத்தை பார்த்த பின் என் மகள் ரியாவின் சந்தோஷத்திற்காக பிரிந்த என் கணவருடன் மீண்டும் சேர காரணத்தை தேடி வருகிறேன். அருமையான திரைப்படத்தை கொடுத்ததிற்கு நன்றி . கடவுள் உங்களை ஆசிர்வதிப்பார்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

director selvaraghavan on why women should have professional career

இதனையடுத்து இந்த உரையாடலை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த இயக்குனர் கணேஷ் பாபு, “என்னை பொறுத்தவரை இதுதான் வெற்றி. என்னுடைய கல்லூரி தோழி பகிர்ந்த இந்த பின்னூட்டத்தை நான் சிறந்த விமர்சனமாக எடுத்து கொள்கிறேன். டாடா திரைப்படத்தை மேலும் சிறப்பாக ஆக்கி வரும் அனைவருக்கும் எனது நன்றிகள்என்று குறிப்பிட்டுள்ளார்.

 

This is real success to me♥️ This is from a college friend of mine. I’m taking this with me. The best feedback so far and forever for Dada! Thanks everyone for making Dada special for us! #Dada #DaDaReview pic.twitter.com/pmiUVHg9Aa

— ganesh.k.babu (@ganeshkbabu) February 14, 2023

இயக்குனர் பதிந்த இந்த நெகிழ்ச்சி உரையாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ரசிகர்கள் தற்போது டாடா படத்தை கொண்டாடி வரும் நிலையில் இது போன்ற கருத்துகள் படக்குழுவினருக்கு மேலும் புத்துணர்ச்சி கொடுக்கிறது தொடர்ந்து ரசிகர்களின் கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர் டாடா படக்குழுவினர்.

‘தம்பி உடையான் படைக்கு அஞ்சான்’.. தனுஷிடம் Advice கேட்ட செல்வராகவன்.. - சுவாரஸ்யமான வீடியோ உள்ளே..
சினிமா

‘தம்பி உடையான் படைக்கு அஞ்சான்’.. தனுஷிடம் Advice கேட்ட செல்வராகவன்.. - சுவாரஸ்யமான வீடியோ உள்ளே..

‘அயலி’ தொடரை பார்த்து இயக்குனரை நேரில் அழைத்து பாராட்டிய உதயநிதி ஸ்டாலின்..  - வைரலாகும் பதிவு இதோ..
சினிமா

‘அயலி’ தொடரை பார்த்து இயக்குனரை நேரில் அழைத்து பாராட்டிய உதயநிதி ஸ்டாலின்.. - வைரலாகும் பதிவு இதோ..

மீண்டும் Beast mode ல் சூர்யா.. உற்சாகத்தில் ரசிகர்கள்.. - சூர்யா 42 படத்திற்காக வெறித்தனமான workout.. வைரல் வீடியோ இதோ..
சினிமா

மீண்டும் Beast mode ல் சூர்யா.. உற்சாகத்தில் ரசிகர்கள்.. - சூர்யா 42 படத்திற்காக வெறித்தனமான workout.. வைரல் வீடியோ இதோ..