தனுஷ் ரசிகர்களுக்கு Surprise கொடுத்த ‘வாத்தி’ படக்குழு.. உற்சாகத்தில் ரசிகர்கள் - வைரலாகும் Glimpse இதோ..

வெளியானது தனுஷ் நடிக்கும் வாத்தி படத்தின் ஒன் லைப் பாடல் - Vaathi movie One life Song Lyrical video released | Galatta

தமிழ் சினிமாவில் இந்த 2023 ம் ஆண்டு பொற்காலமாக அமையவுள்ளது. உச்சநச்சத்திரங்களின் பெரிய எதிர்பார்ப்பு கொண்ட திரைப்படங்கள் வெளியாகவுள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்திலே விஜய் அஜித் திரைப்படங்கள் வெளியாகி தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸை அதிரடியாக துவங்கி வைத்தனர். 'வாரிசு' ,'துணிவு' ஆகிய படங்களின் அலை சற்று ஓய்ந்திருக்கும் நிலையில் பெரிய நட்சத்திரங்களின் பட வரிசையில் அடுத்ததாக இணைந்துள்ளது தனுஷின் வாத்தி திரைப்படம். தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவான இப்படத்தை இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கியுள்ளார். சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ் மற்றும் பார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் இணைந்து தயாரித்த இப்படத்தில் தனுஷ் வாத்தியாராக நடிக்க அவருடன் இணைந்து சம்யுக்தா, சமுத்திரகனி, சாய் குமார், ஆடுகளம் நரேன், கென் கருணாஸ், இளவரசு, ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் யுவராஜ் ஒளிப்பதிவு செய்ய படத்தொகுப்பு செய்துள்ளார் நவீன் நூலி.

கல்வியை மையப்படுத்தியும் அதில் நடக்கும் ஊழல் குறித்தும் பேசியுள்ள வாத்தி படத்தின் டிரைலர் முன்னதாக வெளியாகி எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.மேலும் இப்படத்தின் இசைவெளியீட்டு விழா சமீபத்தில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. ஜிவி பிரகாஷ் குமார் இசையில் உருவான அனைத்து பாடலும் நல்ல வரவேற்பை ரசிகர்களிடம் பெற்றுள்ளது. குறிப்பாக ‘வா வாத்தி’ பாடல் இணையத்தில் தொடர்ந்து முன்னிலையில் உள்ளது. மேலும் படத்தில் நாடோடி மன்னன், கலங்குதே, சூரிய பறவைகளே போன்ற பாடல்கள் இடம் பெற்றுள்ளது.இன்னிலையில் வாத்தி படத்தில் இடம் பெற்றுள்ள ‘ஒன் லைப்’ என்ற பாடலின் லிரிக்கல் வீடியோ படத்தின் சில காட்சிகளுடன் வெளியாகியுள்ளது.  

#Onelife lyric video 💥

A surprise that you didn't expect for 😉🕺🤩

▶️ https://t.co/XiN7Fb1St2

A @gvprakash Musical 🎹#VaathiOn17Feb 💥#Vaathi @dhanushkraja #VenkyAtluri @iamsamyuktha_ @dopyuvraj @NavinNooli @vamsi84 #SaiSoujanya @adityamusic @SitharaEnts @7screenstudio pic.twitter.com/ZYrysvv1Q7

— Sithara Entertainments (@SitharaEnts) February 14, 2023

ஜிவி பிரகாஷ் குமார் இசையில் தனுஷ் இந்த பாடலை எழுதியுள்ளார். தனுஷ் இப்படத்தில் வா வாத்தி பாடலையும் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பிரபல சொல்லிசை கலைஞர் அறிவு இந்த பாடலில் இடம் பெற்றுள்ள ராப் பகுதியை எழுதி பாடியுள்ளார். மற்றும் பின்னணி பாடகர் ஸ்டீபன் செக்கேரியா இவருடன் இணைந்து இந்த பாடலை பாடியுள்ளனர். சர்ப்ரைஸாக வெளியான இந்த பாடல் ரசிகர்களின் கவனம் பெற்று தற்போது வைரலாகி வருகின்றது. வரும் பிப்ரவரி 17 ம் தேதி தமிழிலும் தெலுங்கிலும் தனுஷின் வாத்தி வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பிரிந்த குடும்பங்களை இணைக்கும் கவினின் ‘டாடா’ திரைப்படம்.. நெகிழ்ச்சி சம்பவம்.. -  வைரலாகும் இயக்குனரின் பதிவு இதோ..
சினிமா

பிரிந்த குடும்பங்களை இணைக்கும் கவினின் ‘டாடா’ திரைப்படம்.. நெகிழ்ச்சி சம்பவம்.. - வைரலாகும் இயக்குனரின் பதிவு இதோ..

“நீங்க லைலா மஜ்னு வாழ்க்கைலாம் வாழ போறது இல்ல”.. பெண்கள் எதிர்காலம் குறித்த கேள்விக்கு செல்வராகவனின் அதிரடியான பதில்.. -  சுவாரஸ்யமான வீடியோ இதோ..
சினிமா

“நீங்க லைலா மஜ்னு வாழ்க்கைலாம் வாழ போறது இல்ல”.. பெண்கள் எதிர்காலம் குறித்த கேள்விக்கு செல்வராகவனின் அதிரடியான பதில்.. - சுவாரஸ்யமான வீடியோ இதோ..

Valentine's Day Special.. ரசிகர்களின் மனம் கவர்ந்த 14 தமிழ் சினிமா காதல் ஜோடிகள்..
சினிமா ஸ்பெஷல்ஸ்

Valentine's Day Special.. ரசிகர்களின் மனம் கவர்ந்த 14 தமிழ் சினிமா காதல் ஜோடிகள்..