"நீ சிறந்தவன்... நான் மிகவும் அதிர்ஷ்டசாலி!"- காதலர் தினத்தில் தனது காதலர் குறித்து மனம்திறந்த ஸ்ருதி ஹாசன்! விவரம் உள்ளே

காதலர் தினத்தில் தனது காதலர் குறித்து மனம்திறந்த ஸ்ருதி ஹாசன்,actress shruti haasan about her lover on valentines day | Galatta

இந்திய சினிமாவின் குறிப்பிடப்படும் கதாநாயகிகளில் ஒருவராக திகழும் நடிகை ஸ்ருதி ஹாசன், உலகநாயகன் கமல்ஹாசன் இயக்கிய நடித்து வெளிவந்த ஹேராம் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். பின்னர் பாலிவுட்டில் லக் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக களமிறங்கிய ஸ்ருதிஹாசன், தெலுங்கில் தனது முதல் படமாக நடித்த அணகனகா ஓ தீருடு திரைப்படத்திற்காக சிறந்த அறிமுக நடிகைக்கான ஃபிலிம் ஃபேர் விருதை பெற்றார். அதேபோல் தமிழில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா கதாநாயகனாக நடித்து வெளிவந்த ஏழாம் அறிவு திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான ஸ்ருதி ஹாசன் தனது முதல் தமிழ் படத்திற்காக சிறந்த அறிமுக நடிகைக்கான ஃபிலிம் ஃபேர் விருதையும் வென்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நட்சத்திர நாயகியாகவும் சிறந்த நடிகையாகவும் விளங்கும் ஸ்ருதிஹாசன் தனுஷின் 3, தளபதி விஜயின் புலி, அஜித் குமாரின் வேதாளம், சூர்யாவின் சிங்கம் 3 உள்ளிட்ட திரைப்படங்களில் கதாநாயகியாக அசத்தினார். தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் ஹிந்தி என இந்தியாவின் பல்வேறு மொழி திரைப்படங்களிலும் நட்சத்திர கதாநாயகர்கள் அனைவருடன் இணைந்து நடித்து முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார். கடைசியாக தமிழில் மறைந்த இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதியுடன் இணைந்து லாபம் திரைப்படத்தில் கதாநாயகியாக ஸ்ருதிஹாசன் நடித்திருந்தார். 

தெலுங்கில் மிக முக்கிய கதாநாயகியாக வலம் வரும் ஸ்ருதி ஹாசன்  நட்சத்திர நடிகர்களாக திகழும் நந்தாமரி பாலகிருஷ்ணா மற்றும் மெகா ஸ்டார் சிரஞ்சீவி ஆகியோரின் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்திருந்தார். கடந்த பொங்கல் வெளியீடாக தமிழில் தளபதி விஜயின் வாரிசு மற்றும் அஜித்குமாரின் துணிவு ஆகிய திரைப்படங்கள் ரிலீஸ் ஆனது போல தெலுங்கில் நந்தாமரி பாலகிருஷ்ணா கதாநாயகனாக நடித்த வீர சிம்ம ரெட்டி மற்றும் மெகா ஸ்டார் சிரஞ்சீவி கதாநாயகனாக நடித்த வால்டர் வீரய்யா ஆகிய திரைப்படங்கள் ரிலீஸ் ஆகின. இந்த இரண்டு திரைப்படங்களிலும் நடிகை ஸ்ருதி ஹாசன் கதாநாயகியாக நடித்திருந்தார். முன்னதாக தற்போது ஹாலிவுட் என்று கொடுக்கும் ஸ்ருதி ஹாசன் THE EYE எனும் ஆங்கில திரைப்படத்தில் தற்போது நடித்து வருகிறார்.

இது போக கே ஜி எஃப் படத்தின் இயக்குனர் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் கதாநாயகனாக நடிக்கும் சலார் படத்திலும் ஸ்ருதி ஹாசன் கதாநாயகியாக நடித்து வருகிறார். முன்னதாக நடிகை ஸ்ருதிஹாசன் கடந்த சில ஆண்டுகளாக சாந்தனு ஹசாரிக்கா எனும் புகழ்மிக்க ஓவியக் கலைஞரை காதலித்து வருகிறார். இதனிடையே இன்று பிப்ரவரி 14ஆம் தேதி காதலர் தினத்தில் தனது காதலர் குறித்து புகைப்படத்தோடு பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில், “நீதான் சிறந்தவன்… என் இதயம் உன்னிடம்… நீ எப்போதும் என் மூளையில்… நீதான் என் சூரியன் மற்றும் என் சந்திரன்… நான்தான் மிகவும் அதிர்ஷ்டசாலியான பெண்!” என குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார். அதற்கு ஸ்ருதிஹாசனின் காதலர் சாந்தனு ஹசாரிக்கா, “எப்போதும் என்னுடைய காதல்… எனது அலை எனது சூரியன் எனது உலகம் நீதான்! நீதான் சிறந்தவள்!” என பதிவிட்டிருக்கிறார். நடிகை ஸ்ருதிஹாசனின் இந்த பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாககி வருகிறது. அந்தப் பதிவு இதோ...

 

View this post on Instagram

A post shared by Shruti Haasan (@shrutzhaasan)

காதலர் தின ஸ்பெஷல் பரிசு கொடுத்த ஹிப் ஹாப் தமிழா ஆதி... அட்டகாசமான புது மியூசிக் வீடியோ இதோ!
சினிமா

காதலர் தின ஸ்பெஷல் பரிசு கொடுத்த ஹிப் ஹாப் தமிழா ஆதி... அட்டகாசமான புது மியூசிக் வீடியோ இதோ!

தளபதி விஜயின் லியோ படப்பிடிப்பில் காதலர் தின கொண்டாட்டம்... ட்ரெண்டாகும் லேட்டஸ்ட் GLIMPSE இதோ!
சினிமா

தளபதி விஜயின் லியோ படப்பிடிப்பில் காதலர் தின கொண்டாட்டம்... ட்ரெண்டாகும் லேட்டஸ்ட் GLIMPSE இதோ!

சினிமா

"காதல்தான் இவ்வுலகத் தலைமையின்பம்!"- காதலர் தினம் குறித்து உலகநாயகன் கமல்ஹாசனின் அறிக்கை இதோ!