தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராகவும் -நடிகராகவும் வலம் வரும் விஜய் ஆண்டனி அடுத்ததாக இயக்குனராகவும் அவதாரம் எடுத்துள்ளார்.  இயக்குனர் சசி இயக்கத்தில் வெளிவந்து சூப்பர் ஹிட்டான பிச்சைக்காரன் திரைப்படத்தின் 2-ம் பாகமாக உருவாகும் பிச்சைக்காரன் படத்தில் விஜய் ஆண்டனி தயாரித்து இயக்கி நடிக்கிறார்.

தொடர்ந்து விஜய் ஆண்டனி நடிப்பில் அக்னிச் திறகுகள், காக்கி,  தமிழரசன் ஆகிய திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளிவரவுள்ள நிலையில், இயக்குனர் & ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன் இயக்கத்தில் மழை பிடிக்காத மனிதன் மற்றும் தமிழ் படம் பட இயக்குனர் அமுதன் இயக்கத்தில் ரத்தம் ஆகிய திரைப்படங்களும் விஜய் ஆண்டனி நடிப்பில் அடுத்தடுத்து வெளிவர தயாராகி வருகின்றன.

இதனிடையே க்ரைம் த்ரில்லர் படமாக விஜய் ஆண்டனி நடிப்பில் தயாராகியுள்ள திரைப்படம் கொலை. இயக்குனர் பாலாஜி.K.குமார் இயக்கத்தில் விஜய் ஆண்டனி உடன் இணைந்து ரித்திகா சிங் கதாநாயகியாக நடிக்க ராதிகா சரத்குமார், மீனாக்ஷி சௌத்ரி, முரளி சர்மா, அர்ஜுன் சிதம்பரம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்சர்ஸ் மற்றும் லோட்டஸ் பிக்சர்ஸ் இணைந்து தயாரித்துள்ள கொலை படத்திற்கு சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவில், கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைத்துள்ள செல்வா.RK படத்தொகுப்பு செய்துள்ளார். இந்நிலையில் கொலை திரைப்படத்தின்  கதாபாத்திரங்களை அறிமுகம் செய்யும் போஸ்டர்கள் வரிசையாக வெளிவருகின்றன. அந்த வகையில் தற்போது ராதிகாவின் ரேகா கதாபாத்திரத்தை அறிமுகம் செய்யும் புதிய போஸ்டர் தற்போது வெளியானது. அந்த போஸ்டர் இதோ…
 

Radikaa Sarathkumar as Rekha - The Boss #WhoKilledLeila? #KOLAI #கொலை@vijayantony @DirBalajiKumar @FvInfiniti @lotuspictures1 @ritika_offl @Meenakshiioffl @murlisharma72 @realradikaa @sivakvijayan @ggirishh @EditorSelva @DoneChannel1 @CtcMediaboy pic.twitter.com/nigySiasav

— Infiniti Film Ventures (@FvInfiniti) July 10, 2022