தெலுங்கு,கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் அறிமுகமாகி பின்னர் தமிழில் முன்னணி நடிகையாக கலக்கியவர் பூனம் பாஜ்வா.ஹரி இயக்கத்தில் பரத் நடித்த சேவல் படத்தில் ஹீரோயினாக நடித்து தமிழ் சினிமாவில் ஹீரோயினாக என்ட்ரி கொடுத்தவர் பூனம் பாஜ்வா.

அடுத்ததாக இவர் நடித்த தெனாவட்டு,கச்சேரி ஆரம்பம் உள்ளிட்ட பல படங்கள் ஹிட் அடிக்க ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவராக மாறினார் பூனம் பாஜ்வா.தமிழ் மட்டுமின்றி மலையாளம்,கன்னடம்,தெலுங்கு என பல மொழிகளிலும் நடித்து பிரபலமானவராக இருந்தார் பூனம் பாஜ்வா.

ஆம்பள,அரண்மனை 2,ரோமியோ ஜூலியட்,குப்பத்து ராஜா போன்ற படங்களில் சிறப்பு தோற்றங்களில் நடித்தும் அசத்தியிருப்பார் பூனம் பாஜ்வா.இவருக்கென்று தனியொரு ரசிகர் பட்டாளமே உள்ளது.சமூகவலைத்தளங்களில் அவ்வப்போது தனது போஸ்ட்களை பகிர்ந்து வருவார் பூனம்.

இன்ஸ்டாகிராமில் எப்போதும் ஆக்டிவ் ஆக இருக்கும் இவர் தனது புகைப்படங்கள்,வீடியோக்கள் என ஏதேனும் ஒன்றை ரசிகர்களுடன் பகிர்ந்து வருவார்.தற்போது தனது பிகினி புகைப்படங்கள் சிலவற்றை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்,இந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.