தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகனாக திகழும் நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது தெலுங்கு மற்றும் தமிழ் என இரு மொழிகளில் பிரபல தெலுங்கு இயக்குனர் K.V.அனுதீப் இயக்கத்தில் நடித்து வரும் #SK20 திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில் வருகிற ஆகஸ்ட் 11ம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது

இதனைத்தொடர்ந்து உலக நாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் தயாரிப்பில் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் #SK21 படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளார். இப்படத்தில் நடிகை சாய் பல்லவி கதாநாயகியாக நடிக்கவுள்ளார். முன்னதாக சிவகார்த்திகேயன் நடித்துள்ள சயின்ஸ் ஃபிக்சன் நகைச்சுவை திரைப்படமான அயலான் திரைப்படத்தின் இறுதிக்கட்ட மற்றும் VFX பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

இயக்குனர் R.ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள அயலான் படத்திற்கு இசைப்புயல் A.R.ரஹ்மான் இசை அமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே இயக்குனர் சிபிச்சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த டான் திரைப்படம் கடந்த சில தினங்களுக்கு முன்பு ரிலீசாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று 25 நாட்களை கடந்து 100 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது.

இந்நிலையில் டான் திரைப்படத்தின் வெற்றி விழா தற்போது நடைபெற்றுள்ளது. இதில் பேசிய சிவகார்த்திகேயன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேரில் அழைத்து பாராட்டியதை குறிப்பிட்டு பேசினார். தொடர்ந்து நடிகர் சிலம்பரசன்.TR தொலைபேசி வாயிலாக, தொடர்பு கொண்டு டான் படம் எமோஷனலாக இருந்ததாக தெரிவித்து பாராட்டியதாக சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார். நடிகர் சிவகார்த்திகேயன் டான் வெற்றி விழாவில் சிலம்பரசன் குறித்து  பேசிய வீடியோ இதோ…