அரசுப் பேருந்தில் பெண் பயணியை அவமரியாதையாக நடத்திய விவகாரத்தில் ஓட்டுநர் - நடத்துநர் என இருவருமே அதிடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்

தமிழ்நாட்டில் கரூர் நகர பேருந்தில் தான் இப்படி ஒரு துயர சம்பவம் நடந்திருக்கிறது.

அதாவது, தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்தது முதல் பெண்களுக்கு ஆதரவான பல்வேறு அதிரடியான திட்டங்களை திமுகசெயல்படுத்தி வருகிறது.

அதன் படி, திமுகவின் தேர்தல் வாக்குறுதியான தமிழக அரசின் மாநாகர பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயண திட்டம், பெண்களுக்கான முதல் திட்டமாக செயல்படுத்தப்பட்டது. இந்த திட்டம், பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், பெண்களுக்கு தேவையான பல்வேறு திட்டங்களை தமிழக அரசு அடுத்தடுத்து செயல்படுத்தி வருகிறது.

அதன் அடுத்தக்கட்ட நடவடிக்கையாக, அரசு போக்குவரத்து கழகத்தில் பெண்களுக்கு என்று தனியாக படுக்கை வசதி ஒதுக்கீடு செய்து, தமிழக அரசு ஒரு சூப்பரான அறிவிப்பையும் வெளியிட்டது.

அதன் தொடர்ச்சியாக, அரசுப் பேருந்துகளில் பயணிக்கும் பெண் பயணிகளை பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில், “பேருந்தில் பயணிக்கும் சக பெண் பயணிகளிடம் தவறாக நடந்து கொள்பவர்களை ஓட்டுநர், நடத்துனரே சேர்ந்து அருகில் உள்ள காவல் நிலையத்தில் ஒப்படைக்கலாம் அல்லது பேருந்துகளில் இருந்து இறக்கி விடலாம்” என்று, தமிழக அரசு அடுத்த புதிய விதிகளை கொண்டுவந்தது.

இந்த நிலையில் தான், அரசுப் பேருந்தில் இலவசமாக பயணம் செய்யும் பெண் பயணிகள் பெரும்பாலும் ஓட்டுநர், நடத்துனரால் மரியாதையாக நடத்த முடியவில்லை என்கிற குற்றச்சாட்டும் பரவலாக எழுந்தது.

இப்படியான குற்றச்சாட்டை உண்மையாக்கும் வகையில், தற்போது கரூர் நகர பேருந்தில் பெண் பயணியை அவமரியாதையாக நடத்தியதாக தற்போது புதிய குற்றச்சாட்டு எழுந்து உள்ளது.

அதாவது, கரூர் நகர பேருந்தில் பெண் பயணி ஒருவர், தனது பெண் குழந்தையுடனும், கையில் ரேஷன் பொருட்களுடனும் பேருந்தில் ஏறியிருக்கிறார். அப்போது, அந்த பெண் ரேஷன் பொருட்களுடன் ஏற முற்படும் முன்பு, ஓட்டுநர் பேருந்தை எடுத்துக்கொண்டு கிளம்பிச் சென்று உள்ளார்.

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த அந்த பெண், “குழந்தை.. குழந்தை” என்று, சத்தம் போட்டு கத்தவே, அங்கு நின்றிருந்த ஊர் மக்கள், அந்த பேருந்தை துரத்திச் சென்று, தடுத்து நிறுத்தி அந்த பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துனருடன் கடும் வாக்குவாத்தில் ஈடுபட்டனர்.

இது தொடர்பான வீடியோ ஊடகத்தில் வெளியான நிலையில், கரூர் நகர பேருந்தில், பெண் பயணியை அவமரியாதையாக நடத்திய விவகாரத்தில் அந்த பேருந்து ஓட்டுநர் பன்னீர்செல்வம், நடத்துநர் மகேந்திரன் ஆகிய இருவரும் தற்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். 

மேலும், இவர்கள் இருவரும் சஸ்பெண்ட் காலத்திற்கு பிறகு, இருவரையும் காரைக்குடி மண்டலத்திற்கு இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக மண்டல பொது மேலாளர் நடவடிக்கை மேற்கொண்டு உள்ளார் என்கிற செய்தியும் தற்போது வெளியாகி உள்ளன.