மார்வெல் சூப்பர் ஹீரோக்கள் மீது எப்போதும் ரசிகர்களுக்கு ஆர்வம் அதிகம். அந்த வகையில் சமீபத்தில் வெளிவந்த டாக்டர் ஸ்ட்ரெஞ்சு மல்டிவெர்ஸ் ஆஃப் மேட்னஸ் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று உலக பாக்ஸ் ஆபீசில் வசூல் வேட்டை நடத்தியது.

திரைப்படங்கள் மட்டுமல்லாது தொடர்ந்து மார்வெல் சூப்பர் ஹீரோக்களின் வெப்சீரிஸ்களும் வெளிவந்து ரசிகர்களை கவர்ந்து வருகின்றன. அந்த வகையில் முன்னதாக வாண்டா விஷன், தி ஃபாலகன் அண்ட் தி வின்டர் சோல்ஜர், லோகி, ஹாக் ஐ, மூன்னைட் ஆகிய வெப்சீரிஸ்கள் இதுவரை வெளிவந்துள்ளன.

இந்த வரிசையில் அடுத்ததாக மார்வெல்-ன் முதல் முஸ்லீம் சூப்பர் ஹீரோ கதாபாத்திரமாக வெளிவருகிறது மிஸ்.மார்வல். இமான் வெல்லானி மிஸ் மார்வெல் கதாப்பாத்திரத்தில் நடிக்க, மாட் லின்ட்ஸ், யஸ்மீன் ஃப்ளட்சர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். பிஷா.கே அலி இயக்கியுள்ள மிஸ் மார்வெல் வெப்சீரிஸ் வருகிற ஜூன் 8-ம் தேதி முதல் வாரம் ஒரு எபிசோடாக டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் ரிலீஸாகவுள்ளது.

பலகோடி ரசிகர்கள் காத்திருக்கும் மிஸ்.மார்வெல் வெப் சீரிஸில் பிரபல பாலிவுட் நடிகர் ஃபர்ஹான் அக்தர் முக்கியமான சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் மிஸ்.மார்வெல் வெப்சீரிஸில் நடித்தது குறித்து மனம்திறந்த நடிகர் ஃபர்ஹான் அக்தர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கை இதோ…