தமிழ் சினிமாவின் குறிப்பிடப்படும் முக்கிய இயக்குனர்களில் ஒருவராக திகழும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மாநகரம் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். கடைசியாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் கதாநாயகனாக நடித்து வெளிவந்த மாஸ்டர் திரைப்படம் மெகா ஹிட் பிளாக்பஸ்டர் ஆனது.

அடுத்ததாக உலகநாயகன் கமல்ஹாசன் கதாநாயகனாக நடிக்கும் விக்ரம் திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மற்றும் ஃபகத் பாசில் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள விக்ரம் திரைப்படம் வருகிற ஜூன் 3ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாக உள்ளது.

முன்னதாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்து வெளிவந்த கைதி திரைப்படம் இந்திய அளவில் பலரது கவனத்தையும் ஈர்த்த நிலையில் தற்போது ஹிந்தியில் ரீமேக் செய்யப்படுகிறது. முன்னணி பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் கார்த்தி நடித்த டில்லி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இயக்குனர் தர்மேந்திரா ஷர்மா இயக்கத்தில் உருவாகும் இப்படத்திற்கு போலா என பெயரிடப்பட்டுள்ளது.

ADF ஃபிலிம்ஸ், ரிலையன்ஸ் என்டர்டெய்மெண்ட் மற்றும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கும் இத்திரைப்படத்தில் அஜய் தேவ்கன் உடன் இணைந்து நடிகை தபு முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் அடுத்த ஆண்டு மார்ச் 30ஆம் தேதி போலா திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.