தமிழ் திரை உலகின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராகவும் ஆல் டைம் ஃபேவரட் ஹீரோயின் ஆகவும் திகழும் நடிகை ஜோதிகா திருமணத்திற்கு பிறகு 36 வயதினிலே திரைப்படத்தின் மூலம் திரைப்பயணத்தில் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கினார். தொடர்ந்து மகளிர் மட்டும், நாச்சியார், செக்கச் சிவந்த வானம், காற்றின் மொழி, ராட்சசி, ஜாக்பாட், தம்பி, பொன்மகள் வந்தாள், உடன்பிறப்பே என அடுத்தடுத்து நல்ல கதைக்களங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

இதனிடையே முதல் முறையாக மலையாள சினிமாவின் ஆகச்சிறந்த நடிகரான மம்மூட்டியுடன் இணைந்துள்ள நடிகை ஜோதிகா காதல்- தி கோர் எனும் திரைப்படத்தில் தற்போது நடித்த வருகிறார். Wayfarer Films மற்றும் Mammootty Kampany ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் காதல் - தி கோர் திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கப்பட்டு தற்போது முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

முன்னதாக மலையாளத்தில் வெளிவந்து இந்திய அளவில் கவனத்தை ஈர்த்த தி கிரேட் இந்தியன் கிச்சன் திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் ஜோ பேபி இயக்கும் காதல் - தி கோர் படத்திற்கு ஆதர்ஷ் சுகுமாரன் மற்றும் பால்சன் சக்கரியா இருவரும் இணைந்து கதை திரைக்கதை மற்றும் வசனங்களை எழுதியுள்ளனர். ஷாலு.K.தாமஸ் ஒளிப்பதிவில், பிரான்சிஸ் லூயிஸ் படத்தொகுப்பு செய்கிறார்.

மேத்யூஸ் புலிக்கண் இசையமைக்கும் காதல் - தி கோர் படத்திற்கு அலினா இசையமைக்கிறார். இந்நிலையில் காதல் - தி கோர் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தற்போது படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளனர். சமூக வலைத்தளங்களில் அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கும் மம்மூட்டி மற்றும் ஜோதிகாவின் காதல் - தி கோர் பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இதோ…
 

Magic is Brewing !!!

First of the many to come. Here's the First Look Poster of @KaathalTheCore@MKampanyOffl @DQsWayfarerFilm#Mammootty @mammukka #Jyotika #JeoBaby #KaathalTheCore pic.twitter.com/3T60jBe13q

— MammoottyKampany (@MKampanyOffl) November 12, 2022