தமிழ் சினிமாவின் மிக முக்கிய இயக்குனரும் நடிகருமான பார்த்திபன் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு தனக்கே உரித்தான பாணியில் பல வித்தியாசமான திரைப்படங்களை கொடுப்பதில் வல்லவர். இயக்கத்தில் மட்டுமல்லாமல் நடிப்பிலும் பல கதாபாத்திரங்களில் வெரைட்டி கொடுப்பவர். கடைசியாக இயக்குனர் பார்த்திபன் இயக்கி நடித்து உலக சாதனை படைப்பாக வெளிவந்த இரவின் நிழல் அனைத்து ரசிகர்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

தொடர்ந்து இயக்குனர் மணிரத்னத்தின் இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்து பிளாக்பஸ்டர் ஹிட்டான பொன்னியின் செல்வன் திரைப்படத்திலும் சின்ன பழுவேட்டரையர் கதாபாத்திரத்தில் மிரட்டலாக நடித்த கவனத்தை ஈர்த்தார் பார்த்திபன். முன்னதாக கபந்ய சாதனை முயற்சியாக ஒரே ஒரு நபர் மட்டும் நடிக்கும் ஒத்த செருப்பு திரைப்படத்தில் நடித்து இயக்கி மொத்த சினிமா உலகத்தையும் மிரள வைத்தார். 

இயக்குனர் பார்த்திபனின் தயாரிப்பில் ஒளிப்பதிவாளர் ராம்ஜியின் ஒளிப்பதிவில் தயாரான ஒத்த செருப்பு திரைப்படம் விமர்சன ரீதியில் மட்டுமல்லாமல் ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றதோடு 2 தேசிய விருதுகளையும் கைப்பற்றியது. இதனிடையே சமீபத்தில் ஒத்த செருப்பு திரைப்படம்  ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்டது. 

ஒத்த செருப்பு ஹிந்தி ரீமேக் படத்தையும் இயக்குனர் பார்த்திபன் அவர்களே இயக்க கதாநாயகனாக அபிஷேக் பச்சன் நடித்தார்.SSS-7 என் ரீமேக் செய்யப்பட்டுள்ள இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆகஸ்ட் மாதம் நிறைவடைந்தது. இந்நிலையில் நமது கலாட்டா பிளஸ் சேனலுக்கு அளித்த பிரத்தியேகப் பேட்டையில், ஒத்த செருப்பு ரீமேக் திரைப்படத்தில் நடித்த அனுபவங்கள் குறித்தும் அதன் சவால்கள் குறித்தும் அபிஷேக் பச்சன் பகிர்ந்து கொண்டார். 

இயக்குனர் பார்த்திபன் அவர்களை சந்தித்தது, ஒத்த செருப்பு திரைப்படத்தை முதன் முதலில் பார்த்த அனுபவம் மற்றும் அதன் ரீமேக்கில் நடிக்க முடிவு செய்தது பிறகு அதில் நடிப்பதில் இருக்கும் சவாலான விஷயங்கள் என அபிஷேக் பச்சன் பகிர்ந்து கொண்ட அந்த முழு பேட்டியை கீழே உள்ள லிங்கில் காணலாம்.