தமிழ் சினிமாவின் முன்னணிக்கு கதாநாயகர்களின் ஜெயம் ரவியின் நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட்டான கோமாளி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் தொடர்ந்து நடிகராகவும் அவதாரம் எடுத்த திரைப்படம் லவ் டுடே. 

ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிப்பில் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் உடன் இணைந்து இவானா கதாநாயகியாக நடிக்க, சத்யராஜ், ராதிகா சரத்குமார், யோகி பாபு, ரவீனா, ஆதித்யா கதிர், ஆஜித் காலிக், விஜய் வரதராஜ் மற்றும் FINALLY பாரத் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 

தினேஷ்குமார் புருஷோத்தமன் ஒளிப்பதிவு செய்ய, பிரதீப்.E. ராகவ் படத்தொகுப்பு செய்துள்ள, லவ் டுடே திரைப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட கடந்த நவம்பர் நான்காம் தேதி உலகெங்கும் தர இயங்குகளில் ரிலீஸான லவ் டுடே திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்கள் மத்தியிலும் ஏகோபித்த வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. 

பக்கா எண்டர்டெயின்மென்ட் திரைப்படமாக வெளிவந்துள்ள லவ் டுடே திரைப்படத்தை திரையரங்குகளில் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் லவ் டுடே திரைப்படத்தின் படப்பிடிப்பில் முக்கிய வேடத்தில் நடித்த குழந்தை நட்சத்திரத்தை நடிக்க வைக்க பிரதீப் ரங்கநாதன் நடிப்பு சொல்லிக் கொடுக்கும் வீடியோ தற்போது வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோ இதோ…
 

Pultheesh #LoveToday @archanakalpathi @aishkalpathi @Ags_production #PradeepRanganathan pic.twitter.com/R4c4JeRY7j

— Pradeep Ranganathan (@pradeeponelife) November 15, 2022