நேரம் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி தனது இரண்டாவது படமாக அல்போன்ஸ் புத்திரன் அடுத்து இயக்கிய பிரேமம் திரைப்படம் இந்திய அளவில் கவனம் ஈர்த்தது. குறிப்பாக சென்னையில் 200 நாட்களை கடந்து திரையரங்குகளில் ஓடிய மலையாள திரைப்படம் என்றும் சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது. இந்த வரிசையில் அடுத்ததாக இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் தயாராகியுள்ள திரைப்படம் கோல்ட்.

இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் ப்ரித்திவிராஜ் மற்றும் நயன்தாரா முன்னணி கதாப்பாத்திரங்களில் நடித்துள்ள கோல்ட் திரைப்படத்தில் அஜ்மல், கிருஷ்ணா சங்கர், செம்பன் வினோத் ஜோஸ், ரோஷன் மேத்யூ, மல்லிகா சுகுமாரன், சுரேஷ் கிருஷ்ணா உள்ளிட்ட பலர் இணைந்து நடித்துள்ளனர். கோல்ட் படத்தை பிரித்விராஜ் புரோடக்சன்ஸ் மற்றும் மேஜிக் பிரேம்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. 

கோல்ட் படத்திற்கு ஆனந்த் சந்திரன்-விஸ்வஜித் ஒடுக்கத்தில் இணைந்து ஒளிப்பதிவு செய்துள்ளனர். ராஜேஷ் முருகேசன் இசையமைக்க, அல்போன்ஸ் புத்திரன் படத்தொகுப்பு செய்துள்ளார். முன்னதாக கடந்த செப்டம்பர் 9ம் தேதி ஓணம் பண்டிகையை முன்னிட்டு கோல்ட் படத்தை ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டிருந்தனர். 

ஆனால் படவேலைகள் முழுவதும் முடிவடையாத நிலையில் ரிலீஸ் தள்ளிப்போனது. இந்நிலையில், கோல்ட் படத்தை டிசம்பர் மாதம் வெளியிட திட்டமிட்டிருப்பதாக தற்போது தகவல்கள் அனைத்தும் வழங்கப்படும் நடிகர் பாபு ராஜா படப்பிடிப்பில் நடிகர் ப்ரித்வி ராஜுடன் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இது குறித்து தெரிவித்துள்ளார்.விரைவில் ரிலீஸ் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

 

View this post on Instagram

A post shared by Baburaj Jacob (@baburajactor)