தென்னிந்திய சினிமாவின் உச்ச நட்சத்திர கதாநாயகிகளில் ஒருவராக வலம் வரும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் இந்த ஆண்டில்(2022) இதுவரை வெளிவந்த காத்து வாக்குல ரெண்டு காதல், O2 மற்றும் காட்பாதர் ஆகிய திரைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றன. தொடர்ந்து வரிசையாக நயன்தாரா நடிப்பில் அடுத்தடுத்து அட்டகாசமான படங்கள் வெளிவர காத்திருக்கின்றன.

அந்த வகையில் முதல் முறை பாலிவுட்டில் கதாநாயகியாக களமிறங்கும் நடிகை நயன்தாரா இயக்குனர் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் கதாநாயகனாக நடிக்கும் ஜவான் திரைப்படத்தில் தற்போது நடித்து வருகிறார். முன்னதாக பிரேமம் படத்தின் இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் பிரித்விராஜுடன் இணைந்து மலையாளத்தில் நயன்தாரா நடித்த கோல்ட் திரைப்படம் வருகிற டிசம்பர் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே நயன்தாரா நடிப்பில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளிவந்த ஹாரர் த்ரில்லர் படமான மாயா படத்தின் இயக்குனர் அஸ்வின் சரவணன் இயக்கத்தில் மீண்டும் நயன்தாரா நடிக்கும் திரைப்படம் கனெக்ட். நயன்தாராவுடன் சத்யராஜ், அனுப்பம் கெர் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கும் கனெக்ட் படத்தில் வினய் ராய் மற்றும் ஹனியா நஃபீஸா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

ரவுடி பிக்சர்ஸ் சார்பில் இயக்குனர் விக்னேஷ் சிவன், ஹாரர் படமான கனெக்ட் திரைப்படத்தை தயாரிக்கிறார். மணிகண்டன் கிருஷ்ணமாச்சாரி ஒளிப்பதிவில் கனெக்ட் படத்திற்கு பிரித்வி சந்திரசேகர் இசையமைக்கிறார்.இந்நிலையில் வருகிற நவம்பர் 18ஆம் தேதி நயன்தாராவின் பிறந்த நாள் அன்று கனெக்ட் திரைப்படத்தின் டீசர் வெளியாகும் என படக்குழுவினர் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இதனை அறிவிக்கும் வகையில் மிரட்டலான போஸ்டர் வெளியாகியுள்ளது. அந்த போஸ்டர் இதோ…
 

This Friday comes with a few surprises and scares. #CONNECT Teaser from November 18th. Stay CONNECTed!✨@VigneshShivn #Nayanthara @AnupamPKher #Sathyaraj #VinayRai @haniyanafisa @Ashwin_saravana @mk10kchary @prithvi_krimson @ARichardkevin @Kavitha_Stylist @kabilanchelliah pic.twitter.com/CKvYbBY1Ks

— Rowdy Pictures (@Rowdy_Pictures) November 15, 2022