பல கோடி சினிமா ரசிகர்களின் ஃபேவரட் கதாநாயகர்களில் ஒருவராக வலம் வரும் நடிகர் அஜித்குமார் நடிப்பில் கடைசியாக வெளிவந்த வலிமை திரைப்படம் மிக்ப்பெரிய வரவேற்பை பெற்று ப்ளாக்பஸ்பர் ஹிட் ஆனது. அடுத்ததாக  இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தனது 62வது படமாக தயாராகவுள்ள AK62 திரைப்படத்தில் அஜித் நடிக்கவுள்ளார்.

இதனிடையே இயக்குனர் H.வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள திரைப்படம் துணிவு. நேர்கொண்ட பார்வை மற்றும் வலிமை ஆகிய திரைப்படங்களைத் தொடர்ந்து மீண்டும் போனி கபூர் தயாரிப்பில் இயக்குனர் H.வினோத் இயக்கத்தில் நீரவ் ஷா ஒளிப்பதிவில் அஜித்குமார் நடித்திருக்கும் துணிவு திரைப்படத்திற்கு விஜய் வேலுகுட்டி படத்தொகுப்பு செய்ய, ஜிப்ரான் இசையமைக்கிறார்.

அஜித் குமாருடன் இணைந்து மஞ்சு வாரியர் கதாநாயகியாக நடிக்க சமுத்திரக்கனி, ராஜதந்திரம் வீரா, சிபி புவனச்சந்திரன், பிக் பாஸ் அமீர், பாவணி, மமதி சாரி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள துணிவு திரைப்படம் அடுத்த ஆண்டு ஜனவரியில் பொங்கல் வெளியீடாக ரிலீஸாகவுள்ளது. அதே சமயத்தில் தளபதி விஜயின் வாரிசு திரைப்படமும் துணிவு திரைப்படத்தோடு ரிலீஸாக இருப்பதால் இந்த இரண்டு திரைப்படங்களையும் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடும் துணிவு துறை படத்திற்கு தமிழகத்தில் மாஸான ஓப்பனிங் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் உள்ள பல முன்னணி திரையரங்குகளும் துணிவு திரைப்படத்தை வெளியிட மிகுந்த ஆர்வம் காட்டி வருவதாக தற்போது தொடர்ந்து தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன.