தமிழ் திரை உலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக திகழும் இயக்குனர் லிங்குசாமி ஆனந்தம் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி தொடர்ந்து ரன், சண்டக்கோழி, பீமா, பையா, வேட்டை என வரிசையாக அடுத்தடுத்து மெகா ஹிட் திரைப்படங்களை கொடுத்து ரசிகர்கள் மனதில் தனக்கென தனி இடம் பிடித்தவர்.

கடைசியாக லிங்குசாமி இயக்கத்தில் வெளிவந்த அஞ்சான் மற்றும் சண்டக்கோழி 2 ஆகிய திரைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை பெற தவறின. இதனிடையே தற்போது மீண்டும் தான் ஒரு பிளாக்பஸ்டர் இயக்குனர் என நிரூபிக்கும் வகையில் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் தயாராகி வருகிறது தி வாரியர் திரைப்படம். 

பிரபல தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேன் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் நடிகர் ஆதி வில்லனாக நடிக்கிறார் இளம் நடிகை கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடித்துள்ளார்.ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் நிறுவனம் தயாரிக்கும் தி வாரியர் திரைப்படத்திற்கு சுஜித் வாசுதேவ் ஒளிப்பதிவு செய்ய, தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ளார். 

வருகிற ஜூலை 14-ம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ள தி வாரியர் படத்தின் டீசர் சமீபத்தில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், தற்போது தி வாரியர் திரைப்படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்துள்ளதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். படப்பிடிப்பை நிறைவு செய்த தி வாரியர் படக்குழுவினரின் புகைப்படங்கள் இதோ…